கொல்லம்-நெல்லை இடையே மெமு ரயில்களை இயக்க மதுரை கோட்ட மேலாளரிடம் கோரிக்கை!

train service inspection in sengottai station - 2026
#image_title

செங்கோட்டை ரயில் நிலையத்திற்கு திடீர் ஆய்வு பணியை மேற்கொள்ள வந்த தென்னக ரயில்வே மதுரை கோட்ட மேலாளர்க்கு செங்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் சார்பில் வரவேற்பு வழங்கப்பட்டது. செங்கோட்டை ரயில் நிலையத்தின் வளர்ச்சிகள் குறித்து மனுக்களும் வழங்கப்பட்டன.

இது குறித்து செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் கூறியபோது…
செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் 25/10/25 சனிக்கிழமை மாலை 6 மணி அளவில் செங்கோட்டை ரயில் நிலையத்திற்கு வருகை புரிந்த தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா அவர்களிடம் கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை அளித்தோம். அதில் குறிபிப்ட்டிருந்த முக்கிய அமசங்கள் இவைதான்…

(1) மீட்டர் கேஜ் கால கட்டத்தில் சேரன்மாதேவி , கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம் பாவூர்சத்திரம் தென்காசி செங்கோட்டை ஆரியங்காவு தென்மலை புனலூர் கொட்டாரக்கரை வழியாக இயக்கப்பட்ட திருநெல்வேலி – கொல்லம் & கொல்லம் – திருநெல்வேலி ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும். முடிந்தால் இந்த ரயில்களை திருவனந்தபுரம் வரை இயக்க வேண்டும்.

(2)தற்போது புனலூர் வரை இயங்கும் கன்னியாகுமரி – புனலூர்- கன்னியாகுமரி ரயில்களை தென்காசி வரை நீட்டிக்க வேண்டும்.

(3) கடந்த வாரம் புனலூர் செங்கோட்டை வழியில் இயங்கும் மின்வழித்தட மின்சார இன்ஜின்களின் உந்துதலுக்கு மின்சக்தி அளிக்கின்ற புனலூர் தொடர்வண்டி மின்மாற்றி துணை நிலையம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. எனவே மெயின் லைன் எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட் MEMU மின் ரயில்களை எர்ணாகுளம்/ திருவனந்தபுரம்/கொல்லம் இவற்றில் இருந்து மதுரை/ திருநெல்வேலி/ திருச்செந்தூர்/ தூத்துக்குடி ஆகிய ஊர்களுக்கு இயக்க வேண்டும்.

(4) கடந்த பல மாதங்களுக்கு முன் நிறுத்தப்பட்ட தாம்பரம்- திருவனந்தபுரம் – தாம்பரம் 3E ஏசி வாராந்திர ரயில்களை ( வழி திருச்சி மதுரை விருதுநகர் சிவகாசி ராஜபாளையம் தென்காசி செங்கோட்டை புனலூர் கொல்லம்) மீண்டும் வரும் நவம்பர் மாத நடுவிலிருந்து பிப்ரவரி 2026 வரை சபரிமலை ஐயப்ப சீசனை ஒட்டி இயக்க வேண்டும். மக்கள் நலன் கருதி இந்த ரயிலில் இரண்டாம் வகுப்பு முன்பதிவு தூங்கும் வசதி பெட்டிகளும், முன் பதிவில்லாத இரண்டாம் வகுப்பு பெட்டிகளும் இணைக்கப்பட வேண்டும்.

(5) செங்கோட்டை- கோயம்புத்தூர் இடையே பகல் நேர ரயில்களை இயக்க வேண்டும். இந்த திட்டம் இயலாது போனால் மதுரை – கோயம்புத்தூர்- மதுரை ரயில்களை செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும்.

(6)தாம்பரம் – செங்கோட்டை , செங்கோட்டை- தாம்பரம் இடையே முன்பதிவு இருக்கை வசதிகள் & முன் பதிவில்லா இருக்கைகள் வசதிகள் கொண்ட தீபாவளி சிறப்பு ரயில்கள் அண்மையில் இயக்கப்பட்டன. சென்னை சென்ட்ரல் – திருப்பதி இடையே ஓடிய சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் அண்மையில்
LHB பெட்டிகளாக மாற்றப்பட்டன. இந்த ரயிலின் பழைய ICF பெட்டிகளை வைத்தே தாம்பரம் – செங்கோட்டை- தாம்பரம் தீபாவளி சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.

தற்போது செங்கோட்டை – சென்னை இடையே தென்காசி ராஜபாளையம் சிவகாசி விருதுநகர் மதுரை திருச்சி விருத்தாசலம் விழுப்புரம் வழியாக பகல் நேர ரயில்கள் இல்லை. எனவே இந்த சப்தகிரி ரயிலின் பழைய ICF பெட்டிகளை பயன்படுத்தி செங்கோட்டை – தாம்பரம்- செங்கோட்டை இடையே வாரம் மும்முறை,பகல் நேர விரைவு ரயில்களை ,தீபாவளி சிறப்பு ரயிலின் வழித்தடத்திலேயே இயக்கிட வேண்டுகிறோம்.

(7) தற்போது வாரம் மூன்று நாட்கள் செங்கோட்டையில் இருந்து இயங்கும செங்கோட்டை – தாம்பரம் – செங்கோட்டை சிலம்பு விரைவு ரயில்களையும் , திருநெல்வேலி வழியாக இயக்கப்படும் செங்கோட்டை-தாம்பரம்- செங்கோட்டை அதி விரைவு ரயில்களையும் விரைவில் தினசரி இயங்கும் ரயில்களாக்க ஆவன செய்ய வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories