இந்திய சுதந்திர போராட்ட தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 119வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் மதிமுக சார் பில் திருநெல்வேலி அடுத்த பாளையங்கோட்டை ஜவஹர் மைதானத்தில் நடந்தது. கட்சி பொதுச்செயலாளர் வைகோ சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், நேதாஜி பிறந்த மண்ணை இந்த கூட்டத்தில் என்னிடம் ஒப்படைத்து உள்ளீர்கள். இதை நான் உயர்வாக கருதுகிறேன்.
நேதாஜியில் இறுதி நாட்கள் குறித்த தகவல்களை மத்திய அரசு வெளியிட வேண்டும். அத்தகைய தகவல்களை வெளியிடுவதால் பிற நாடுகளிடம் உள்ள நட்புறவு பாதிக்கப்படும் என்றால் அந்த நாடுகளின் நட்புறவு நமக்கு தேவையில்லை. நேதாஜி சுபாஷ் சந்திர போஸை விட அந்த நாடுகள் முக்கியம் இல்லை.நேதாஜியின் இறுதி நாட்கள் குறித்த தகவல்களை வெளியிட வலியுறுத்தி பிற மாநில தலைவர், மக்களை திரட்டி 2 வது கூட்டத்தொடர் அறிவிகப்பட்டவுடன் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவேன் என்று வைகோ பேசினார்.
பாராளுமன்றத்தில் விரைவில் முற்றுகை போராட்டம் : வைகோ
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari