மழை பெய்ய வேண்டியும், உலக மக்கள் நன்மை வேண்டியும் கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலில் பிராமண மகா சபை சார்பில் ருத்ர ஏகாதசி ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது.
இதையொட்டி கோயில் நடை 5 மணிக்கு திறக்கப்பட்டு, திருவனந்தல் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடந்தது. காலை 8 மணிக்கு ருத்ர ஏகாதசி ஹோமம் தொடங்கியது. பகல் 12 மணிக்கு பூர்ணாகுதி மற்றும் தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. பூஜைகளை சுவாமிநாத பட்டர், சங்கர பட்டர், செண்பகராம பட்டர், கோபி பட்டர் ஆகியோர் செய்திருந்தனர்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில்பட்டி பிராமண மகா சபையினர் செய்திருந்தனர்.



