குடிநீரின் தரம் கண்டறியும் பயிற்சி மற்றும் செயல்விளக்க முகாம்

குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், குடிநீரின்தரம்  கண்டறியும் முறை மற்றும் குடிநீர் வினியோகிப்பாளர்களுக்கு செயல் விளக்கம் மற்றும் பயிற்சி முகாம் ஆவுடையானூரில் நடைபெற்றது 

நிர்வாகபொறியாளர்  முத்துக்குமாரசாமி தலைமை வகித்தார்  , உதவி நிர்வாக பொறியாளர் வெங்கடேஷ் , உதவிப் பொறியாளர்கள் முருகையா ,சிவசண்முகவல்லி, குடிநீர் பரிசோதனை அலுவலர் கோபாலன் ,ஆவுடையானூர் பஞ்சாயத்து தலைவி இந்திரா செல்லப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்
முகாமில் அதிகாரி பேசியதாவது: பொது மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்கி, மக்களின்  சுகாதாரத்தை பேணிகாப்பதில்  குடிநீர் வாரியம் முனைப்போடு செயல்பட்டு வருகிறது .  தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கிவருகிறது  . தொழிற்சாலைகளில் இருந்துவேளியேறும் கழிவுகள் மற்றும் வீட்டில் இருந்து கொட்டப்படும் குப்பைககள் மூலம் மற்றும் மாறிவரும் சுற்றுச்சூழல் என குடிநீரின் தரம் பாதிக்கப்பட்டு வருகிறது உலக சுகாதார நிறுவனமும் ,இந்திய தரக் கட்டுப்பாட்டும நிறுவனமும் அனுமதிபட்ட அளவின் படி நீரின் தன்மை பரிசோதிக்கப்பட்டு  பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது ,தற்போது பொதுமக்கள்  சுத்தம் கருதி கேன்களில் அடைக்கப்பட்டுள்ள குடிகுடிநீரை பயன்படுத்திவருகின்றனர்  இது பார்வைக்கு  சுத்தம் இருக்கும் அதில் சத்துக்கள் இருக்காது நீரில் பி.எச்  அளவு குறியீடு 6.5 க்கும் குறைவாகவும் 8.5 க்கு அதிகமாகவும் இருத்தல் கூடாது ,பி.எச்  என்பது ஹைடரஜன் அயனியின் அளவாகும்  பி.எச்  அளவு  அதிகமாக இருந்தால் அது வயிற்றில் உள்ள செரிக்கும் திரவத்தின் சக்தியை முறியடித்து ஜீரண சக்தியை இழக்க செய்யும் எனவே பொதுமக்கள் ஆற்று நீர்,கிணற்று மற்றும் பஞ்சாயத்து மூலம் வழங்கப்படும் குடிநீரினை கொதிக்க வைத்து குடிக்கலாம் தாங்கள் பயன்படுத்தும் நீரில் அமிலத்தன்மை ,காரத்தன்மை பற்றிய சந்தேகம் இருப்பின்  நீர் மாதிரி எடுத்து  தரத்தினை பரிசோதித்துக் கொள்ளலாம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் உருவாக்கப்பட்ட களப்பரிசோதனை பெட்டியின் மூலம் குடிநீரின், 12 தரக்கட்டுப்பாடுகளை பரிசோதனை செய்யலாம்.  தமிழகத்தின் அனைத்து ஒன்றியஅலுவலகங்கள் ,பஞ்சாயத்து அலுவலகங்களில் இக்களப்பரிசோதனை பெட்டி  இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறுஅவர் பேசினார்  மேலும் தரமற்ற குடிநீர் குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து,விளக்கும்  செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது  .