தண்ணீர் ஓடையை அடைத்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி எம்.எல் ஏ ராஜேந்திரனிடம் பொதுமக்கள் புகார்

தண்ணீர் ஓடையை அடைத்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி  எம்.எல் ஏ ராஜேந்திரனிடம் பொதுமக்கள் புகார்

தண்ணீர் ஓடையை அடைத்தவர் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தியதை தொடர்ந்து பி.ஜி  ராஜேந்திரன் எம்.எல்.ஏ நேரில் ஆய்வு  
கீழப்பாவூர் பேரூராட்சிக்குட்ப்பட்ட  மருதடியூர் சாலையில் தனியார் ஒருவர் தனது நிலத்திற்கு மேல் புறம் உள்ள ஓடையில் இருந்து வரும் தண்ணீர் அவரது விளை நிலத்துக்குள் வந்துள்ளது இதனால் பயரிடுவது பாதிக்கப்பட்டுள்ளது இதையடுத்து  ஓடைவரும் பாலத்தை உடைத்து தண்ணீர் அவரது நிலத்திற்குள் வராமல் தடுத்துள்ளார் இதனால் ஓடை நீர்  அருகே உள்ள பூக்கள் விளையும் தோட்டத்திற்குள் புகுந்துள்ளது இதனால் பூ விளைச்சல் பாதிக்கபட்டது  மேலும்  மகிழ்வண்ண நாதபுரம் வழியாக நாகல்குளம்  செல்லும் நீர் தடைபட்டுள்ளது இதையடுத்து பொதுமக்கள் நீர் வழிப்பாதையை அடைத்தவர் மீது நடவடிக்கை கோரியும் அதே வழியில் தண்ணீர் செல்ல அனுமதிக்க கோரியும் பி.ஜி.ராஜேந்திரன்  எம்.எல்.ஏ விடம் கோரிக்கை வைத்தனர் இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த எம்.எல்.ஏ.,ஆலங்குளம் தாசில்தார் கோபி கிருஷ்ணன்,வருவாய் ஆய்வாளர் மாரிச் செல்வம் ,கிராம நிர்வாக அலுவலர் குமார் ஆகியோர் பார்வையிட்டு ஆக்கிரமிப்பு பகுதியை பார்வையிட்டனர் மேலும் பி.ஜி ராஜேந்திரன் எம்.எல்.ஏ தென்காசி கோட்டாசியர் வெங்கடேஷ்ஐ தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கூறினார் அவரும் உறுதியளித்ததை அடுத்து பொது மக்களிடம் பேசிய எம்.எல்.ஏ உடனே நடவடிக்கை அதிகாரிகள் எடுப்பார்கள் என்று கூறியதையடுத்து பொதுமக்கள் களைந்து சென்றனர் மேலும் சிவகாமிபுரம் 5 வது வார்டு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர் அதையும் நிறைவேற்றுவதாக உறுதியளித்தார் உடன் பேரூர் கழக செயலார் பாஸ்கர் உடனிருந்தார்