நெல்லை கண்ணன் பேச்சு … இவர்கள் சொன்னாலும் சொல்வார்கள்!

உரத்த சிந்தனை சற்றுமுன் தமிழகம் நெல்லை
nellai kannan speech - 2026

நெல்லை கண்ணனின் வெறித் தனமான பேச்சு … சொன்னாலும் சொல்வார்கள்.!

“ ஏம்வே, எத்தனை எடங்கள்ல பேசி இருக்கீரு ,
எங்க கூட்டத்துல பேச வந்தப்ப பாத்து
ஜோலிய முடிக்கறது பத்தி ஏம்வே பேசினீரு?”

“ எங்கெ எத பேசனும்னு எனக்கு தெரியும்வே”

***

  • “ ஜோலியை முடிப்பது பற்றிய
    பேச்சு குறித்து காங்கிரஸ் கட்சியின்
    கருத்து என்ன?”

“ மோடியை துண்டுதுண்டாக வெட்டுவேன்
என்று சொன்னவருக்கு தேர்தலில் போட்டிய
உத்தரப் பிரதேசத்தில் டிக்கெட் கொடுத்தோம்,
யாகூப் மேமனை தூக்கில் போடக்கூடாது என்று போராட்டம் நடத்தியவரை மஹாராஷ்ராவில் இன்று அமைச்சராக்கி இருக்கிறோம்.

ஆனால், இவருக்கு அந்த மாதிரி
சலுகைகள் கிடைக்க வாய்ப்பு இல்லை.
காரணம், இது எங்கள் கட்சி கூட்டமல்ல.
மேலும் இவர் ராகுல் காந்தியின் தலைமையை ஏற்றுக் கொண்ட காங்கிரஸ்காரர் அல்ல.

“திமுகவின் கருத்து என்ன?”

“ எஸ்டிபிஐ மற்றும் காங்கிரஸ் கட்சியின்
உட்கட்சி விவகாரங்களில்
நாங்கள் தலையிட விரும்பவில்லை.!

CPI(M) மற்றும் CPI

“ அரசமைப்புச் சட்டம் வழங்கி இருக்கும்
கருத்துச் சுதந்திரத்தை அவர்
பயன்படுத்தி இருக்கிறார். கருத்துரிமையை தடை செய்யக்கூடாது.”

***

மதிமுக :- “ அவர் ஒரு தமிழறிஞர்
அவரது கருத்துக்கு செவிசாய்க்க வேண்டும்.”

இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் :-

“ எங்களுக்கு போட்டியாக உருவாகி இருக்கும் கட்சியின் கூட்டத்தில் இதை பேசியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.”

கருத்து: வசந்தன் பெருமாள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.