December 6, 2025, 1:05 AM
26 C
Chennai

தென்காசி ரத வீதியைச் சுற்றி வணிக நிறுவனங்கள், மசூதிகள்! அம்மன் கோயில் கொடைக்கு தடங்கலை ஏற்படுத்தும் இஸ்லாமிய அடாவடி!

tenkasi amman temple - 2025நெல்லை மாவட்டம் தென்காசியில் ரதவீதிகளில் மசூதிகளும் இஸ்லாமிய வணிக நிறுவனங்களும் பெருகி விட்டன.  அதன் விளைவாக, தற்போது காலம் காலமாக கொண்டாடப் பட்டு வந்த அம்மன் கோயில் திருவிழாக்களுக்கு தடங்கல்களும் எதிர்ப்புகளும் எழுந்து வருகின்றன.

மிகப் பழைமையான சிவத் தலம் தென்காசி. காசிக்கு இணையான புனிதத் தலம் என்று இந்துக்களால் போற்றப் படும் இந்தத் தலத்தில், தென்காசிப் பாண்டியர்களால் எடுப்பித்துக் கட்டப்பட்ட கோயில் ஸ்ரீகாசிவிஸ்வநாதர் திருக்கோயில்.

கோயில் மற்றும் இந்துக்களின் திருவிழாக்கள் எந்தத் தங்கு தடையுமின்றி, அனைத்து தரப்பு மக்களாலும் விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வந்த நிலையில், கடந்த 30 ஆண்டுகளில் இஸ்லாமியர்களின் பெருக்கமும், வணிக ரீதியாக இஸ்லாமியரின் ஆக்கிரமிப்பும், இந்துக்களின் திருவிழாக்களில் தடைகளையும் எதிர்ப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது.

தென்காசி காசி விசுவநாதர் ஆலயத்தைச் சுற்றி உள்ள ரத வீதிகளில் பல இசுலாமிய வணிக நிறுவனங்கள் உள்ளன. குறிப்பாக, அரபா ஜுவல்லர்ஸ், செலிபரேஷன் ஐவுளி கடை உள்ளிட்ட ஏராளமான இஸ்லாமிய  வணிக நிறுவனங்கள், கடைகள் உள்ளன.

இந்நிறுவனங்களில் கீழ்த் தளங்களில் சட்ட விதிமுறைகளை மீறியும், சட்ட விரோதமாகவும் மசூதி உள்ளது என விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் மனுக்கள் பல தென்காசி கோட்டாட்சியரிடம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதை மறுத்து இந்நிறுவனங்கள் கோட்டாட்சியர் விசாரணையில் எங்கள் நிறுவனங்களில் மசூதி எதுவும் இல்லை என எழுதி கொடுத்துள்ளன.!tenkasi temple1 horz - 2025

இந்நிலையில் திங்கள் கிழமை இன்று (29/04/2019) வடக்கு ரத வீதியில் உள்ள உச்சி மாகாளியம்மன் கோவில் திருவிழாவில் திடீர் பிரச்னையைக் கிளப்பியுள்ளனர் இஸ்லாமியர்கள். இங்கே உச்சிமாகாளி அம்மனுக்கு சித்திரைத் திருவிழா நடைபெற்று  வருகிறது. இந்தக் கோவிலின் அருகே இசுலாமிய வணிக நிறுவனமான அரபா ஜுவல்லர்ஸ் உள்ளது.

அந்த நிறுவனத்தின் காவலாளி, திடீரென திருவிழா நடக்கும் திருக்கோவிலுக்கு வந்து நிர்வாகிகளிடம் இங்கு மசூதி உள்ளது, எனவே மைக்செட் வைக்கக் கூடாது எனவும், மேளதாளம் அடிக்கக்கூடாது எனவும் கூறியதைக் கேட்டு கோயில் விழாக் கமிட்டியார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

முன்னர் கோட்டாட்சியர் விசாரணையின் போது, இங்கே மசூதியே கிடையாது என்று அடித்து சத்தியம் செய்த நிறுவனம்,  இன்று இங்கே மசூதி உள்ளது, ஆகவே ஆலய நிகழ்ச்சியை நடத்தக் கூடாது என தங்கள் நிறுவன வாட்ச்மேனைக் கொண்டு சொல்லச் சொல்லியுள்ளது.

இதனை நகர காவல்துறையிடம் விழா ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர். அதற்கு உதவி ஆய்வாளர் சரவணக்குமார் என்பவர், வழக்கம் போல் காவலர்கள் என்ன பேசுவார்களோ அதையே பேசி, விழாக்குழுவினரை அவமரியாதை செய்துள்ளார் என்று கூறுகின்றனர். மேலும் வழக்கம் போல், இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக பேசியதாகவும் கூறப் படுகிறது.

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தாங்கள் பாரம்பரியமாக வைத்து வழிபடும் கோயிலுக்குள்ள மரியாதையுடன், கோயில் திருவிழாவை நடத்துவோம் என்றும், இது கோயில் திருவிழா எப்படி நடத்தப் படுமோ அப்படித்தான் நடத்தப் பட வேண்டும் என்றும், இது ஒன்றும் அமைதி காட்ட வேண்டிய இறுதிக் காரியம் அல்ல,தெய்வத்தின் பூஜைக் காரியம் என்றும் கூறுகின்றனர் தென்காசி பகுதி பக்தர்கள்.

இது போன்று தங்கள் வழிபாட்டு நிகழ்ச்சிகளுக்கு தடங்கல் ஏற்படுத்திக் கொண்டிருந்தால், அங்கே இருக்க வேண்டியது கோயிலா அல்லது இஸ்லாமிய வணிக வளாகமா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என்று அப்பகுதி பக்தர்கள் கோபத்துடன் கூறுகின்றனர்.

எனவே தமிழக அரசும், நெல்லை மாவட்ட நிர்வாகமும் உடனடியாக இதற்கு தீர்வு கண்டு வணிக நிறுவனங்களில் சட்ட விரோதமாக செயல்படும் மசூதிகளை மூட வேண்டும் என்றும், விதிகள் மீறப் பட்டிருப்பது தெரியவந்தால், எதற்கும் அடிபணியாமல் இந்நிறுவனங்களை அடைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories