உள்ளூர் செய்திகள்

உயிரிழந்த கிருஷ்ணசாமி குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரண உதவி: எடப்பாடி

சென்னை: நீட் தேர்வு எழுத தனது மகனுக்குத் துணையாக திருத்துறைப் பூண்டியில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் சென்று மாரடைப்பால் உயிரிழந்த கிருஷ்ணசாமியின் குடும்பத்தினருக்கு 3 லட்ச ரூபாய் நிவாரண உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

மரணமடைந்த கிருஷ்ணசாமி மகன் மேற்படிப்புக்கு பொன்.ராதாகிருஷ்ணன் நிதி உதவி

இந்த துயரச் செய்தி தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நீட் தேர்வு எழுத வெளி மாநிலம் சென்றதால் தான் இந்த துயரச் சம்பவம் என்று அரசியல் ரீதியாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது சொந்த நிதியில் இருந்து ரூ. 1 லட்சம் அந்த மாணவரின் மேற்படிப்புக்காக வழங்குவதாக அறிவித்தார். 

மாரடைப்பால் மரணம் அடைந்த கிருஷ்ணசாமியின் உடல் தமிழகம் கொண்டு வர ஏற்பாடு: எடப்பாடி

கிருஷ்ணசாமியின் உடலை தமிழகம் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை செய்ய தலைமை செயலருக்கு, முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் கிருஷ்ணசாமியின் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை வழங்கவும் முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

நீட் தேர்வு எழுத கேரளா சென்ற மாணவனுக்கு நேர்ந்த சோகம்! ஹாலுக்கு வெளியே தந்தை மாரடைப்பால் மரணம்!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி, தனது மகனை தேர்வுக்கூடத்தில் விட்டுச் சென்றபின்னர் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இளம் பெண்ணோடு தனியறையில் இருந்த காவலர் சஸ்பெண்ட் நெல்லை எஸ்.பி.,நடவடிக்கை

நேற்று முன்தினம் இரவில் இவரது வீட்டிற்கு வந்த பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண்ணிடம் தனியறையில் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த பொதுமக்கள் சிலர் உள்ளே சென்று

புகார் கொடுக்க வந்த பெண்ணை மடக்கி தனிமையில் இருந்த போலீஸ் ஏட்டு வீடியோ: 5 பேர் மீது வழக்கு பதிவு

இவர், காவல் நிலையத்துக்கு புகார் அளிக்க வரும் பெண்களை ஆள் பார்த்து அவர்களிடம் செல்போன் எண் பெற்றுக் கொள்வாராம். அவர்களை பின்னர் தொடர்பு கொண்டு, வழக்கு விஷயமாகப் பேசுவதாகக் கூறி, கொஞ்சம் கடலை போட்டு, வழிக்குக் கொண்டு வருவாராம். பின்னர், தனது வீட்டுக்கு வரச் சொல்லி தனிமையில் இருப்பார் என்கிறார்கள்.
- 2026

வணிகர் தினக் கூட்ட மேடையில் ஸ்டாலினுடன் ராமதாஸ் பங்கேற்பு: கிங் மேக்கரா? கேங் ஜோக்கரா?

இதுவரையிலும், பாமக., இரு திராவிடக் கட்சிகளுடன் மாறி மாறி கூட்டணி வைத்து மத்தியில் பலன் பெற்றது என்றாலும், மாநிலத்தில் கூட்டணி ஆட்சி அமையாமல், இரு திராவிடக் கட்சிகளின் முழு ஆதிக்க ஆட்சியே அமைந்து வந்தது. இதனால் தங்கள் செல்வாக்கு வளராமல் ஆட்சியில் பங்கு கிடைக்காமல் போவதை உணர்ந்து ராமதாஸ், இனி இரு திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்தார்.

நீட் தேர்வு எழுத கேரளா செல்லும் மாணவர்களுக்கு சிறப்புப் பேருந்து: கொடியசைத்து அனுப்பிய நெல்லை ஆட்சியர்

அந்த வகையில், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து கேரள மாநிலத்துக்கு நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்காக திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சனிக்கிழமை இன்று காலை 8 மணி முதல் இரவு 11மணி வரை, இடைப்பட்ட நேரத்தில் திருவனந்தபுரத்துக்கும், எர்ணாகுளத்துக்கும் 8 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

விடுமுறை நாட்களிலும் புறநகர் விரைவு ரயில் கோரி போராட்டம்: தாம்பரத்தில் ரயில் போக்குவரத்து பாதிப்பு

சென்னை: விடுமுறை நாட்களிலும் விரைவு மின்சார ரயில்களை இயக்க வேண்டும் என்று கோரி, தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரயில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

நெல்லை கோயில் அதிர்ச்சி; சுவாமி அம்பாள் உத்ஸவ மூர்த்தி நகைகள் எங்கே?: அன்பர்கள் கேள்வி!

ஐந்து கோடி பொருட்செலவில் கும்பாபிஷேகம் நடந்தது நெல்லையருக்காகவா ? இல்லை திருடுவதற்காகவா?தங்கமும் வைரமும் இழைத்த நகைகள் இருக்கின்றனவா அல்லது திருடப்பட்டுவிட்டதா?1992ல் இருந்து நகைகளை அம்மையப்பரும் அணிந்து காணவில்லை, அவர்களுக்கு அணிவித்து பக்தர்களும் கண்டதில்லை.

நெல்லை கோயில் கும்பாபிஷேகத்தில் அதிர்ச்சி!: சிதிலமடைந்த சந்திரனுக்கு வழிபாடு! பக்தர்கள் வேதனை!

ஏற்கெனவே, கும்பாபிஷேக தேதியில் குளறுபடி செய்து, ஆட்சியாளருக்கு ஆபத்து நேரும் என்று சாஸ்திரம் எச்சரித்தும் அதே நாளில் கும்பாபிஷேகத்தை நடத்தி முடித்தனர். இந்நிலையில், அதனைக் காட்டிக் கொடுப்பது போல், கும்பாபிஷேக குளறுபடிகள் ஒவ்வொன்றாக இப்போது வெளிவரத் தொடங்கியிருக்கின்றன.

காக்கிக்கு களங்கம் ஏற்படுத்திய காவலர்

இவர் ஒரு பெண்ணுடன் தனது வீட்டில் தனிமையில் சந்தித்து உறவாடிய போது அப்பகுதி பொதுமக்கள் இவர்களை கையும் களவுமாக பிடித்து
- 2026

Recent articles