உள்ளூர் செய்திகள்

புதுக்கோட்டை அருகே அறந்தாங்கியில் பச்சைகாளி கோயில் திருவிழா

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் அறந்தாங்கி பட்டுக்கோட்டை சாலையில் உள்ள பச்சை காளியம்மன்கோயிலில் சித்திரை திருவிழா நடந்தது.அறந்தாங்கியில் பட்டுக்கோட்டை சாலையில் பிள்ளைதாச்சியம்மன் பச்சைகாளியம்மன் கருப்பர் கோயில் உள்ளது இக்கோயிலில் சித்திரை திருவிழா காப்புகட்டுதலுடன் நடந்து...

சூலூர் குட்கா ஆலை விவகாரம்: திமுக எம்.எல்.ஏ., மீது வழக்கு பதிந்து தேடி வரும் போலீஸார்!

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 10 பேர் மீது அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல், அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், 7 பேரைக் கைது செய்தனர். எம்.எல்.ஏ. கார்த்திக் உள்ளிட்ட 3 பேரை தேடி வருகின்றனர்.

புதுவை ஆளுநர் கிரண் பேடியை முற்றுகையிட முயற்சி: காங்கிரஸார் கைது!

இந்நிலையில், வெகு நாட்களாக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த இலவச அரிசி திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்த போது, தூய்மையான கிராமம் என்ற சான்றிதழ் பெற்றால்தான் கிராம பயனாளிகளுக்கு இலவச அரிசி வழங்கப்படும் என அறிவித்தார். இது தேசிய அளவில் ஊடகங்களில் வெளியாகி, சர்ச்சை ஏற்பட்ட நிலையில், அந்த உத்தரவை இரவோடு இரவாக திரும்பப் பெற்றார். 

பட்டப்பகலில் வங்கியில் கொள்ளை: மேலே பாராட்டுக் கூட்டம்; கீழே கொள்ளையடித்து ஓட்டம்!

காசாளர் அறையில் இருந்த ரூ.10 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டிருக்கிறது. வங்கியில் இருக்கும் சிசிடிவி கேமராவில் என்ன மாதிரியான காட்சிகள் பதிவாகி இருக்கிறது, யார் உள்ளே நுழைந்தது என்று இன்று காலை முதல் போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசு வழக்கறிஞர்களை அரசியல் காரணங்களுக்காக நியமிக்கக் கூடாது: நீதிமன்றம்

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழக அரசு கடந்த ஆண்டு அறிவித்துள்ள விதிகள், நியமன விதிகளாகவே உள்ளன என்றும், நியமன நடைமுறைகளுக்கான விதிகள் ஏதும் இல்லை என்றும் குறிப்பிட்டனர். எனவே, விண்ணப்பங்களை வரவேற்று, தகுதியானவர்களை அரசு வழக்கறிஞர்களாக நியமிப்பதற்கான நடைமுறை விதிகளை வகுத்து வெளியிட வேண்டும் என, தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். 

அதிமுக.,வினரை கனிமொழி எப்படிப் பார்க்க விரும்புகிறார் தெரியுமா?

இது குறித்து எழுப்பப் பட்ட கேள்விக்கு பதிலளித்த கனிமொழி, அதிமுக.,வினரை மீசையின்றி பாா்க்க விரும்பவில்லை என்று கூறினார்.
- 2026

பேராசிரியை நிர்மலா தேவி விவகார விசாரணை: சந்தானம் குழுவுக்கு கால அவகாசம் நீட்டிப்பு!

விசாரணை அறிக்கையை ஏப்.30க்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று முன்னர் கூறப்பட்டிருந்த நிலையில், அவரது கோரிக்கையினை ஏற்று, மேலும் 2 வார கால அவகாசம் வழங்கி  ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அனுமதி கொடுத்துள்ளார். 

சமூக விரோதிகளை களை எடுக்கவே துணை ராணுவம்?: பதறும் திருமுருகன் காந்தி

இதுகுறித்துப் பேசிய மே 14 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ''தமிழின அழிப்பிற்கான முதல் அறிகுறியாக காவிரி டெல்டாவில் துணை ராணுவம் இறக்கப்பட்டிருக்கிறது' என்று கூறியுள்ளார்.

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை: ஆஜராக திவாகரனுக்கு சம்மன்

இந்நிலையில் சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி அவர் மே 3ஆம் தேதி ஆஜராவார் என கூறப் படுகிறது.

மத்திய அரசு விருதுகளில் சம்ஸ்க்ருதமா? : சீற்றத்தின் உச்சத்தில் ஸ்டாலின்!

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் உடனடியாக தனது சுற்றறிக்கையை திருத்தி வெளியிட்டு, தமிழ் மொழியிலிருந்து சிறந்த அறிஞர்களையும் விருது வழங்குவதற்கு அனுப்பி வைக்க, அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் தாமதமின்றி உடனடியாக கடிதம் எழுத வேண்டும்.

காவிரி பாசன மாவட்டங்களில் துணை ராணுவம் நடமாட்டம்: வழக்கமான பயிற்சி என்கிறார் எடப்பாடி பழனிசாமி

இதுகுறித்து கும்பகோணம் ஏஎஸ்பி கணேசமூர்த்தியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, அவர்கள் கோவையில் உள்ள 105-வது படை பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும், 40 வீரர்கள் கும்பகோணம் வந்து பதற்றம் நிலவக்கூடிய பகுதிகள் குறித்து ஆய்வு செய்ததாகவும் கூறினர்.

சிதம்பரம் பல்கலை.,யில் பயங்கரம்: ஒருதலையாய் காதலித்து இளம்பெண் கழுத்தை அறுத்த இளைஞர் கைது!

சிதம்பரம்: சிதம்பரத்தில் அதிர்ச்சியூட்டும் விதமாக, பல்கலையில் பயின்று வந்த இளம் பெண் ஒருவர் இளைஞர் ஒருவரால் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் மயங்கிச் சரிந்தார். அவர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
- 2026

Recent articles