கோவை: சூலூர் குட்கா ஆலை விவகாரத்தில் திமுக எம்.எல்.ஏ., கார்த்திக் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது. கார்த்திக் உள்ளிட்ட 3 பேரை போலீஸார் தேடிவருகின்றனர்.
கோவை கண்ணம்பாளையத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த குட்கா ஆலை கடந்த 28ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டு, மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
இந்த விவகாரத்தில், வெளிப்படையான விசாரணை நடத்த வலியுறுத்தி, சிங்காநல்லூர் திமுக எம்.எல்.ஏ. கார்த்திக், உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 10 பேர் மீது அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல், அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், 7 பேரைக் கைது செய்தனர். எம்.எல்.ஏ. கார்த்திக் உள்ளிட்ட 3 பேரை தேடி வருகின்றனர்.