Breaking News
செங்கோட்டை பகுதிகளில் மழை; குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு
இந்நிலையில் குற்றாலத்தில் அனைத்து அருவிகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் நேற்றே குற்றாலத்தில் குவியத் தொடங்கியுள்ளனர். நாளை சனி மற்றும் மறுநாள் ஞாயிறு என்பதால், மேலும் பலர் குற்றாலத்தில் குவிவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. சுற்றுலா பயணிகளின் வருகையால் அப்பகுதியிலுள்ள கடை வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்வதாக ஆளுநர் உறுதி: சந்திப்புக்குப் பின் மு.க.ஸ்டாலின் தகவல்
காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் மே 3ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. அதுவரையில் தமிழக அரசு பொறுத்துக் கொண்டிருக்காமல், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு முழு முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று அழுத்தம் கொடுக்க வேண்டும். இது தொடர்பாக பிரதமரிடம் வலியுறுத்த வேண்டும்.
தீக்குளித்து உயிர் ஊசலாடும் வைகோவின் மைத்துனர் மகன்
எத்தனையோ துன்பங்களைத் துயரங்களை என் துணைவியார் தாங்கியிருக்கிறார்கள். இன்று அவர்கள் அலைபேசியில் கதறி அழுவது என் நெஞ்சைப் பிளக்கிறது. நொறுங்கிப்போன இதயத்தோடு யாரும் தீக்குளிக்காதீர்கள் என்று மீண்டும் கரம்கூப்பி வேண்டுகிறேன்.
தமிழர்களுக்கு பிரதமர் மோடி தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து!
சென்னை : சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவ மைய வைரவிழாக் கட்டடத்தைத் திறந்து வைத்துப் பேசினார் பிரதமர் மோடி. அப்போது அவர் பேசுகையில், தமிழர்களுக்கு நெஞ்சம் நிறைந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூறி தனது பேச்சைத் தொடங்கினார்.
யாரும் தீக்குளிப்பில் ஈடுபட வேண்டாம்: அன்புமணி உருக்கமான வேண்டுகோள்!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், பிரதமர் நரேந்திரமோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தீக்குளித்த ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் என்ற இளைஞர் மருத்துவம் பயனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன்.
#GoBackModi க்கு போட்டியாக டிவிட்டரில் ட்ரெண்ட் ஆகும் #ThankYouModi
டிவிட்டரிலும், பேஸ்புக்கிலும் இந்த #ThankYouModi ஹாஸ்டேக்கை இன்று இரவு 7 மணி முதல் 9 மணி வரை பயன்படுத்தி டிரென்ட் ஆக்குவோம் என்ற வேண்டுகோள் சமூக வலைத்தளங்களில் உலா வருகிறது.
காவிரி விவகாரத்தில் நடவடிக்கை கோரி மோடியிடம் எடப்பாடி கோரிக்கை மனு!
சென்னை: சென்னை விமான நிலையத்துக்கு வந்த பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் கோரி ஒரு கோரிக்கை மனுவை அளித்தார்.
காவலர் மீது கொலைவெறித் தாக்குதல்! கைதாகிறார் சீமான்? போலீஸார் குவிப்பு!
சென்னையில் இன்று பிரதமருக்கு எதிராக போராட்டம் மற்றும் கருப்புக் கொடி காட்டியதாக 8 எம்எல்ஏக்கள் உட்பட 3,070 பேர் கைது செய்யப் பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதனூடே சீமானை முந்தைய ஜாமீனில் வெளிவர இயலாத வழக்குகளில் கைது செய்ய காவல் துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏப்.20க்குள் ஐபிஎல் டிக்கெட் பணத்தை திரும்பப் பெறலாம்!
வரும் ஏப்.,14ஆம் தேதியிலிருந்து 20ஆம் தேதிக்குள் பெற்றுக் கொள்ளலாம் எனவும், அதற்கு பின்னர் கட்டணங்களை திரும்பப் பெற முடியாது எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது.
போரினால் அல்ல, அன்பினால் வெல்வதே இந்தியாவின் வழி: பிரதமர் மோடி!
தமிழகம், உத்தரப் பிரதேசத்தில் இரண்டு தொழில் பாதுகாப்பு வழித்தடங்கள் அமைக்கப்படுகின்றன. இதன் மூலம் தொழில்துறை மேம்படும். வேலைவாய்ப்புகள் பெருகும். எதிர்காலத்தில் இந்த 2 வழித்தடங்கள் தான் இந்தியாவின் தொழில் வளர்ச்சியை நிர்ணயிக்கப் போகின்றன. தளவாட உற்பத்திக்கு தேவையான உதவிகள் மேற்கொள்ளப் படும் என்று பேசினார் மோடி.
மேக் இன் இந்தியா; தளவாடங்கள் ஏற்றுமதி: நிர்மலா சீதாராமன் பெருமிதம்!
கண்காட்சியை துவக்கி வைக்க வந்த பிரதமரை வரவேற்ற அவர், பிரதமரின் மேக் இன் இந்தியா கனவை நனவாக்கும் வகையில், தமிழகத்தில் தொழில்புரிய எளிய நடைமுறை திட்டங்களை மாநில அரசு அமல்படுத்தி வருகிறது என்று கூறினார்.
கறுப்புச் சட்டை; கறுப்புக் கொடி: கருணாநிதியின் மஞ்சள் துண்டில் மாற்றமில்லை!
இந்நிலையில் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திமுகவின் தலைமையகமான சென்னை அண்ணா அறிவாலயம், கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் வீடு, ஆழ்வார்பேட்டையில் உள்ள திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வீடு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வீட்டில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளது.