Breaking News
மெரினாவில் பேரணி! தர்ணா நடத்திய ஸ்டாலின் உள்ளிட்டோர் கைது!
அவர்களை அங்கு செல்லக் கூடாது என்று போலீஸார் தடுத்தனர். இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து ஸ்டாலின், திருமாவளவன், திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் உழைப்பாளர் சிலை அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்
போராட்டங்கள் குறித்து ஆளுநரிடம் உரிய விளக்கம் அளித்தோம்: முதல்வர் எடப்பாடி
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி கூறியதாவது: தமிழகத்தில் நிலவும் காவிரிப் பிரச்னை உள்ளிட்ட போராட்டங்கள் குறித்த நிலவரங்களை கேட்டறியவே ஆளுநர் எங்களை அழைத்தார். தமிழகத்தில் நடக்கும் போராட்டங்கள் குறித்து ஆளுநரிடம் விளக்கமளித்தோம். .
‘வாய்ஸ்’ கொடுக்கவில்லை! ரஜினியை முதல்வராக முன்னிறுத்தும் தமிழருவி மணியனின் மாநாடு ரத்து!
காவிரிப் பிரச்சனை, ஸ்டெர்லைட் எதிர்ப்பு, நியூட்ரினோ ஆய்வகத்திற்கு எதிரான போராட்டம் என்று தமிழகம் முழுவதும் ஒரு பதட்டமான சூழல் நிகழ்வதால் கோவையில் காந்திய மக்கள் இயக்கம் மே.20 அன்று நடத்தவிருக்கும் மாநாடு கைவிடப்படுகிறது. மாநாட்டை நடத்துவதற்காக மாநிலம் முழுவதும் காந்திய மக்கள் இயக்கத்தின் சார்பில் திரட்டப்பட்ட நிதி, வழங்கியவர்களிடமே திரும்பத் தரப்பட்டு விடும்” என்று கூறியுள்ளார்.
பிரபாகரன் உயிருடன் இல்லை என்று கருதிக் கொண்டிருக்கிறார் சீமான்; ஆனால் உண்மை என்னவென்று அவருக்குத் தெரியாது…!
இப்போதும், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார், மறைந்திருக்கிறார் என்றெல்லாம் பேசிவருகிறார் வைகோ. உண்மை தனக்குத் தெரியும் என்று முழங்கி வரும் வைகோ, இந்த முறை, சீமானுக்கு எச்சரிக்கை விடுக்கும் முகமாகப் பேசியிருக்கிறார்.
ஆத்து மண்ணை அள்ளி அள்ளி… எங்க வாழ்க்கைல மண்ண அள்ளிப் போட்டுட்டீங்களே..!
ஸ்ரீரங்கம் பகுதியில் பெரும்பான்மையினராக வசிப்பவர்கள் முத்திரையர் குடியினர் .. அந்தக் குடியைச் சேர்ந்தவரே தேர்தலில் வெற்றியும் பெற்று வருகிறார்கள். திமுக MLAவாக வென்ற . தி ப மாயவன் அந்த குடியினரே! இவர் அவர்களைத்தான் சொல்லுகிறாரோ??
காவிரிக்காக ஐபிஎல்.,லைப் புறக்கணிக்க கிளம்பும் குரல்கள்!
இது ஏதோ விவசாயிகளின் பிரச்சனை என நினைத்துவிட வேண்டாம். நம் அன்றாட வாழ்வின் உணவுப் பிரச்சனை. தமிழ்நாட்டின் தலையாயப் பிரச்சனை.இது தமிழர்களின் பிரச்னை என்று தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிற பிறமொழியினர் தவறாக புரிந்துகொள்ள வேண்டாம். நீங்களும் இதில் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
செங்கோட்டை – கொல்லம் ரயில் பாதையில் குகைகளினூடே பயணம்
செங்கோட்டையில் இருந்து கொல்லம் செல்லும் ரயில் பாதையில், தென்மலை அருகே பதிமூன்று கண் பாலத்தில் ரயில் செல்லும் போது உற்ஸாகம்.
ராமநாதபுரத்தில் பாஜக., பிரமுகரை வெட்டிய கும்பல்: பயங்கரவாத அதிர்ச்சி பின்னணி!
ராமநாதபுரத்தில் கடந்த வாரம் பாஜக., பிரமுகரை வெட்டிய 3 பேர் கொண்ட கும்பல் குறித்து அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. வாட்ஸ்-அப்’ மூலம் இயங்கிய பயங்கரவாத கும்பலைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் கீழக்கரையில் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
மதுரை சந்தையூர் கிராம சாதிப் பிரச்னை; தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவரிடம் மனு!
தமிழகத்தின் மதுரை மாவட்டம் பேரையூர் அருகில் உள்ள சந்தையூர் கிராமத்தில், பறையர் -அருந்ததியினர் இடையே நிலவி வரும் தீண்டாமை பிரச்னைக்கு சுமூக தீர்வு காணப் பட வேண்டும் என்றும், அங்கே தாழ்த்தப் பட்டோரை முஸ்லிம்களாக மதமாற்றம் செய்யும் நிகழ்வைத் தடுக்கக் கோரியும், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் ராமாசங்கர் கட்டேரியாவை சந்தித்து மனு அளிக்கப்பட்டுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வன்கொடுமை சட்டத்தை அரசியல் அமைப்பு சட்டத்தில் சேர்க்ககோரி ஆர்ப்பாட்டம்
அறந்தாங்கி
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை அரசியல் அமைப்பு சட்டத்தில் சேர்க்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் முத்தமிழன் நாகமுத்து தலைமை வகித்தார்.இதில் நிர்வாகிகள்...
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி கடையடைப்பு
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி முழுக்கடையடைப்பு நடந்தது.புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் அனைத்து வர்த்தகர்களும் இணைந்து காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசுஉடனே அமைக்ககோரி கடையடைப்புசெய்தனர் இதனால் அனைத்து வணிக...
அறந்தாங்கி அருகே நாவினிவயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு பூட்டு
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே நானாகுடி தொடக்கவேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு வேட்பு மனுதாக்கல் செய்தவர்கள் பட்டியல் ஒட்டாமல் போன அதிகாரிகளை கண்டித்து வங்கியை பூட்டினர்.
அறந்தாங்கி அருகே நானாகுடியில் நாவினிவயல் தொடக்கவேளாண்மை கூட்டுறவுவங்கி உள்ளது...