புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே நானாகுடி தொடக்கவேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு வேட்பு மனுதாக்கல் செய்தவர்கள் பட்டியல் ஒட்டாமல் போன அதிகாரிகளை கண்டித்து வங்கியை பூட்டினர்.
அறந்தாங்கி அருகே நானாகுடியில் நாவினிவயல் தொடக்கவேளாண்மை கூட்டுறவுவங்கி உள்ளது இந்த வங்கிக்கு இயக்குநர் பதவிக்கு 63 பேர் மனுதாக்கல் செய்த நிலையில் நேற்றும் இன்றும் பெயர் பட்டியல் ஒட்டாமல் போனதால் முன்னாள் திமுக எம்எல்ஏ உதயம் சண்முகம் தலைமையில் நிர்வாகிகள் ராமநாதன்,பாரதிராஜா கேசவன் முன்னிலையில் தினகரன் அணியை சேர்ந்த விஜயன் ராமநாதன்உட்பட கிராமத்தினர் ஒன்றாக இணைந்து காலையும் மாலையும் தொடர் மறியல் செய்து அதிகாரிகள் வராமல் போனதால் வங்கியை பூட்டிவிட்டுசென்றனர் அதனால் அங்கு
பரபரப்பு நிலவியது.




