காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க விவசாயி காலவரையற்ற உண்ணாவிரதபோராட்டம் நடத்துகிறார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகாவில் அறந்தாங்கி பட்டுக்கோட்டை சாலையில் எருக்கலக்கோட்டை கிராமத்தில் உள்ள விவசாயி அறிஞர்(55) இவர் எருக்கலக்கோட்டை பஸ் ஸ்டாப் அருகில் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்கவேண்டும் என்று வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதத்தை துவக்கியுள்ளார்.தமிழகம் முழுவதும் பல போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் இவர் ஒரு வித்தியாசமாக தனிநபராக போராடி வருகிறார்..




