நீட்.,க்கு எதிரான பிரசாரம்… ஏன் செய்கிறது எஸ்.ஆர்.எம்.மின் ‘புதிய தலைமுறை’?

Published:

neet2 - 2026

நீட் – தேர்வுக்கு எதிராக ஏன் தமிழகத்தில் ஊடகப் பிரசாரம் வலிமையாக மேற்கொள்ளப் படுகிறது என்பது குறித்து பல்வேறு கருத்துகள் வந்த வண்ணம் உள்ளன. அவற்றில், தமிழகத்தில் முக்கிய இடத்தில் உள்ள செய்தி சேனலான ’புதிய தலைமுறை’ யை வைத்துக் கொண்டிருக்கும் எஸ்.ஆர்.எம்.,  பல்கலைக்கழகம் ஏன் குறிப்பாக அவ்வளவு தீவிரமாக பிரசாரம் செய்கிறது என்பதை சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

தமிழகத்தைச் சேர்ந்த பாஜக., மூத்த தலைவரும், ம.பி.யில் இருந்து தேர்வான மாநிலங்களவை உறுப்பினருமான இல.கணேசன், தனது பேஸ்புக் பதிவில், இதனைப் பகிர்ந்துள்ளார்.

SRM மருத்துவ கல்லூரியில் மொத்த இடம் 150.
அதில் 15% ALL INDIA RANK கோட்டாவுக்கு போய் விடும்.
மீதம் 150-23=127 சீட்.
இந்த 127 சீட்டில் 50% தமிழ்நாடு அரசு சட்டதிட்டங்களுக்குட்பட்டு,சுமார் 64 சீட் ஒதுக்கப்படும்.

மீதம் 64 சீட் MANAGEMENT கோட்டா.அதை அவர்கள் வைக்கும் தேர்வின் அடிப்படையில் யாருக்கு வேண்டுமானாலும் ஒதுக்கிக் கொள்ளலாம்.
64 சீட்டையும் நன்கொடை சுமார் 50 லிருந்து 1 கோடி வரை கொடுக்கப்படும் (மதன் பிரச்சனை,வழக்கை கவனத்தில் கொள்ளவும்)

ALSO READ:  ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

பெரும்பாலும் பிற மாநில பணக்கார மாணவர்களுக்கே கொடுக்கப்பட்டு வந்துள்ளது,
தமிழ்நாட்டு மாணவர்களும் உண்டு,பணக்காரர்களாக இருந்தால் மட்டுமே, எந்த ஏழை ₹40 லட்சத்தை நன்கொடையாகக் கொடுக்க முடியும்?

இத்துடன் TUTION FEES உட்பட ₹50 லட்சம்வரை கட்டியாக வேண்டும்.அரசுக் கல்லூரியில் 69% இட ஒதுக்கீட்டில் சேருவோருக்கு TUITION FEES ₹1 லட்சத்துக்கும் ஏன் ₹50 ஆயிரத்துக்கும் குறைவு (₹20000 என்று நினைக்கிறேன்) (கோவை மாணவி ₹40 லட்சம் நன்கொடை கொடுத்து,மேலும் tution fees கட்ட முடியாமல் வெளியேறியதை கவனத்தில் கொள்ளவும்)

இது NEET க்கு முன்பு இருந்த நிலை.

2017 NEET ஐ உச்சநீதிமன்றம் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் போலவே தமிழ்நாட்டு மாணவர்களுக்கும் NEET கட்டாயம் என்று தீர்ப்பு வழங்கிய பிறகு SRM கல்லூரியின் நிலை :

150 சீட்டில் 23 (15%) ALL INDIA RANK க்கு போக மீதமுள்ள அனைத்து சீட்டுகளும் 127 சீட்டுகளையும் NEET RANK படியும்,அதிலும் 69% இட ஒதுக்கீட்டின்படியும் நிரப்ப வேண்டும் என்பது நடைமுறை படுத்தப்பட்டு விட்டது.

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

அதாவது NEET க்கு முன்பு நன்கொடை வாங்கி ஒதுக்கிய 64 இடங்களையும் சேர்த்து 127 சீட்டுகளையுமே 2017 உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்தில் பிறந்து படித்து NEET எழுதி தகுதி மார்க் பெற்ற தமிழ்நாட்டின் SC,ST,MBC,BC போன்றவர்களுக்கு 69% இடஒதுக்கீட்டின்படி (88 சீட்)யும்,மீதி 40 சீட்டுகளை OC களுக்கும் ஒதுக்கப்பட்டு ஒரு பைசா நன்கொடையின்றி வழங்கப்பட்டுள்ளது. இந்த OC ஒதுக்கீட்டிலும் SC,ST,MBC,BC மாணவர்களுக்கும் இடம் உண்டு.

மொத்தம் 24 தனியார் கல்லூரிகள் தமிழ்நாட்டில் உண்டு.சுமார் 3000 சீட் தனியார் வசம் உள்ளது.AVERAGE ஆக ஒவ்வொரு தனியார் கல்லூரியிலும் இப்படி 127 சீட்டுகளுமே தமிழனுக்கு ஒதுக்கப்பட்டால் NEET க்கு முன்பை விட 1400 சீட்டுகள் (BDS உட்பட) போன ஆண்டிலிருந்து அதிகமாகி உள்ளது.

வேண்டுமானாலும் தனியார் கல்லூரிகள், சீட் விபரத்தை கூகுளில் போய் பார்த்து கணக்கிட்டுக் கொள்ளுங்கள்,அப்பத் தெரியும் ஏன் புதியதலைமுறை டிவிக்காரன் வால் வால் வ்வீல் வீல் என்று கத்துகிறான்

இப்ப சொல்லுங்க NEET
வேண்டுமா? வேண்டாமா?
Rajendran Vtr

ALSO READ:  உங்களால் இந்த தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்!

Related articles

Recent articles

spot_img