
எங்கள் வீட்டுக் கிணற்றில் கடந்த 15 ஆண்டுகளாக, சொட்டு நீர் கூட சேராமல், இப்படி வறண்டே கிடக்கிறது. இத்தனைக்கும் காவிரியில் இருந்து வெறும் 200 அடி தொலைவுதான்.
இப்படியான ஒரு நிலைக்குக் காரணம், நரேந்திர மோடியோ, கர்நாடகாவோ கிடையாது.முழுக்க முழுக்க திராவிட ஆட்சிகளின் மணல் கொள்ளை மாஃபியாதான் காரணம். தமிழகத்தின் விவசாயத்திற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக விளங்குவது! காவிரிக்காகப் போராடுபவர்கள் ஏன் மணல் கொள்ளை மாஃபியாவை எதிர்த்துப் போராட மறுக்கிறார்கள்? மணல் குவாரிகளை பூட்டு போடும் போராட்டங்களை நடத்த மறுக்கிறார்கள்? – என்ற கேள்விகளை எழுப்புகிறார்கள் பலர்.
அவர்களில் ஒருவரின் டிவீட் இது…
Our WELL in the backyard is dry for the past 15 years, from where #Cauvery is just 200 yards, reason is neither Karnataka, nor Narendra Modi, but Dravidian Sand Mafia, which poses greater threat to TN’s agriculture! Why don’t protesters lock down sand mines? #CauveryIssue pic.twitter.com/AvwH9fpNv7
— Ethirajan Srinivasan (@Ethirajans) April 4, 2018
#CauveryIssue இது போல், காவிரியில் மணல் அள்ளி வெளி மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ததில், இப்போது ஆறுகள் மலடாகிவிட்டன. ஆற்றை ஒட்டி இருக்கும் நிலத்திலும் வறட்சி.நிலத்தடி நீர் மட்டம் வெகுவாகக் குறைந்து கிணறுகளிலும் நீர் இல்லை. 300 அடிக்குக் கீழ் தோண்டினாலும், போர்வெல் தண்ணீர் வருவதில்லை. இத்தகைய வறட்சி நிலைக்குக் காரணம், திராவிட இயக்கங்களின் பேராசைதானே என்று அறிவார்ந்த கேள்விகளை எழுப்புகிறார்கள் நெட்டிசன்கள்.
இது போல், திமுக., ஆதரவு ட்விட்டர் பக்கத்தில் ஸ்ரீரங்கம் பகுதி மக்கள் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க போராடவில்லை என்று ஓர் அறிஞர் கேட்டு இருக்கிறார்.
ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் (ஆண்டவன் ஆசிரமம் அருகில் ) சுமார் 225 கோடி ரூபாய் செலவில் மிக பிருமாண்ட ஆழ்துளை கிணறுகள் அமைத்து ராமநாதபுரம் புதுக்கோட்டை பகுதிகளுக்கு குடிநீர் எடுத்து செல்லப்படுவது , ஸ்ரீரங்கத்து பகுதி மக்கள் பலருக்கு தெரியாது ..
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் மடப்பள்ளி மற்றும் புனிதமான சந்திர புஷ்கரணி … உத்திர வீதி மற்றும் சித்திரை வீதியில் எந்த வீடுகளிலும் கிணற்றில் நீர் இல்லை. காரணம் இந்த நீர் ஏற்றும் நிலையமே !!! ஒரே நிமிடத்தில் பல லக்ஷம் லிட்டர் தண்ணீரை உருஞ்சுவதால்!
அரங்கன் ஊரில் இன்று பல வீடுகள் பூட்டப்பட்டு .. அதன் வாசிகள் வாழமுடியாபடி உள்ளது பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. சில வீடுகளில் ஆழ்துளை கிணறுகள் இட்டாலும் நீர் இல்லை.
லட்ச ரூபாய் செலவு செய்ய முடியாதவர்கள் வீட்டை பூட்டி விட்டு வாடகை வீட்டில் வெளியே வசிப்பது எனக்கு தெரியும். இந்த புத்திசாலி எழுத்தாளர் என்னுடன் வந்தால் இந்த 225 கோடி செலவு செய்த கட்டிய pumping station ஐ அடித்து நொறுக்கி .(டோல் பூத்தை அடித்து ஓடைத்தால் காவேரி மேலாண்மை வாரியம் வரும் என்பதுதானே அறிவு ….. ஸ்ரீரங்கத்தை காக்க நான் தயார் .. இந்த பம்ப் ஸ்டேஷன் அழிந்தால் ஸ்ரீரங்கம் பிழைக்கும் …
காவேரி வாரியம் என்பது இந்த திராவிட அறிவிலிகளுக்கு என்ன என்று புரியவில்லை.. காவேரி ஆற்றின் ஆரம்பம் முதல் கடலில் கலக்கும் வரை ஆற்றின் அனைத்து அணைகள் மற்றும் அதில் இருந்து பிரியும் உப பாசன வாய்க்கால்கள் வரையிலான எல்லா உரிமைகளும் அதற்க்கான செயல் வரைமுறைகளும் நான்கு மாநில அதிகாரிகள் அனுமதியுடன் நடக்கும்.
ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் ரோட்டில் ராஜ கோபுரத்தை நெருங்கும் பொது நீங்கள் வரும்போது ஒரு பாலம் தாண்டுவீர்களே, அது ஸ்ரீரங்கம் நாட்டு வாய்க்கால். இந்த வாய்கால் மூன்றாம் குலத்துங்க சோழன் காலத்தே 1193 CE இல் கூரநாராயண ஜீயர் வெட்டியது.
அது முன்பு ஸ்ரீரங்கம் மற்றும் திருவனைகா பகுதியில் இருந்த வயல்கள் மற்றும் தோப்புகளுக்கு பாசன நீர் எடுத்து செல்வது. தற்போது அதில் 10 சதவீதம் கூட விவசாயம் இல்லை அனைத்து நிலங்கள் தோப்புகள் வீடுகளாக மாறிவிட்டது ..
இந்த வாய்காலில் நீர் விட அந்த வாரிய வெளி மாநில அதிகாரி நிச்சியம் எதிர்ப்பு தெரிவிப்பார். அதாவது, இருக்கும் மொத்த தண்ணீரில் பாக பிரிவினை செய்யும் போது, இந்த ஐம்பது ஆண்டு முன்பு இருந்த வயல்களை காட்டி நீர் தேவை அளவிட முடியாது .
இப்படி பாசனமில்லா பாழ் பட்டு இருக்கும் வீடு கட்டி ரியல் எஸ்டேட் தொழில் செய்து விவசாயத்தை பாழ் பண்ணிவிட்டு பாகத்துக்கு சென்று நின்றால் வெறும் கையோடுதான் திரும்ப வேண்டும் ..
திராவிடன் … கன்னடத்துக்காரன் அணையில் தனது உரிமையை நிலை நாட்ட இது பயன் படும் என்று நினைக்கையில், தமிழக வாய்க்காலின் உரிமைகளும் அழித்து போகும் அவல நிலை பற்றி ஒரு பயலும் பேச போவதில்லை ..
அது செயலாக்கப் பட்டால் இந்த வாய்க்கால் அழிந்து போகும் !!! இந்த முட்டாள் தனத்துக்கு .. ஸ்ரீரங்கத்து மக்களை அழைக்கிறார்கள் ..
குறிப்பு :- ஸ்ரீரங்கம் பகுதியில் பெரும்பான்மையினராக வசிப்பவர்கள் முத்திரையர் குடியினர் .. அந்தக் குடியைச் சேர்ந்தவரே தேர்தலில் வெற்றியும் பெற்று வருகிறார்கள். திமுக MLAவாக வென்ற . தி ப மாயவன் அந்த குடியினரே! இவர் அவர்களைத்தான் சொல்லுகிறாரோ??



