Breaking News
சசிகலா அளித்த பிரமாண பத்திரம் தகவல் -விசாரணை ஆணையம் மறுப்பு
ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா அளித்த பிரமாண பத்திரம் என ஆங்கில நாளிதழில் வெளியான தகவல்கள் தவறானது என ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.இது குறித்து ஆணையம் தெரிவித்திருப்பதாவது: ஜெயலலிதா...
ராம ராஜ்ய ரத யாத்திரையின் பின்னணி என்ன? ஏன் இவ்வளவு சர்ச்சை ஆனது?
இதைத்தான், தமிழக அமைச்சர் ஜெயக்குமாரும், சட்டமன்றத்தில் முதலமைச்சரும் தெளிவாகச் சொன்னார்கள். இது ஒரு தனிப்பட்ட அமைப்பின் வழக்கமான ரத யாத்திரை. இதன் பின்னணியில் விசுவ இந்து பரிசத்தோ ஆரெஸ்ஸெஸ்ஸோ இல்லை என்று சொன்னார்கள்.
நிரவ் மோடியின் முன்னோடி மோசடி: வெளிச்சத்துக்கு வந்த கனிஷ்க் ஜுவல்லர்ஸ்
சென்னை வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள பிரஷாந்த் டவர்ஸில் செயல்பட்டு வருகிறது தங்க நகை தயாரிப்பு நிறுவனமான கனிஷ்க். இந்த நிறுவனமும் வங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
ஓடிய ரயிலில் திடீரென கழன்ற மின்சார ரயில் பெட்டிகள்: அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்!
சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை செல்லும் இந்த மின்சார ரயிலில் தான் சென்னை பொத்தேரி பகுதியில் உள்ள கல்லூரிகளுக்கு ஆயிரக்கணக்கில் மாணவர்கள் வருகின்றனர். மேலும் பரனூர் பகுதியில் உள்ள ஐ.டி. நிறுவனங்களுக்கு சென்னையில் இருந்து தினமும் சென்று வருபவர்களும் பலர்.
ஜெயலலிதா ஆவி துரத்துவது உண்மையா? அடுத்தடுத்த மரணங்களால் சசிகலா குடும்பம் ‘திகில்’!
இன்றும், சசிகலா, நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், சில தகவல்களைக் கூறியிருக்கிறார். ஆனால், அவை முன்னுக்குப் பின் முரணாகப் பார்க்கப் படுகின்றன. ஆவி வேண்டுமானால் பொய்யாக இருக்கலாம், ஆனால் ஆவியால் துரத்தப்பட்டு ஏற்படுவதாகக் கூறப்படும் மரணங்களும் ஆவி குறித்த மக்களின் நம்பிக்கையும் இன்றும் உண்மையாகவே இருக்கின்றனவே!
இந்து மதத்தினர் வாக்குகள் வேண்டாம் என்பாரா ஸ்டாலின்?: மாஃபா பாண்டியராஜன் கேள்வி
ரத யாத்திரையை தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது என்று எதிர்க்கும் ஸ்டாலின், இந்து மதத்தினரின் வாக்குகளும் வேண்டாம் என்று புறக்கணிப்பாரா என்று கேள்வி எழுப்பினார். மேலும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும்; அனைவரின் உரிமைகளும் மதிக்கப்படும்
குற்றவாளி என்றதால் ஜெ.வுக்கு மன அழுத்தம் அதிகரித்தது; ஸ்டிராய்டு மருந்துகளும் எடுத்துக் கொண்டார்: சசிகலா!
தனக்கு உடல் நிலை மோசமாக இருந்ததால்தான், வெகு தொலைவில் போட்டியிடாமல், அருகில் உள்ள ஆர்.கே.நகரில் போட்டியிட்டார் ஜெயலலிதா என்றும், நான் நலமோடு இருக்கிறேன். சில நாட்கள் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர், நாம் வீட்டிற்கு சென்று விடலாம் என ஜெயலலிதா செப்டம்பர் 27ஆம் தேதி கூறினார் என்றும் சசிகலா இந்தப் பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார்..
வாளமீனு வெலங்குமீனு… அன்சாரியை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!
அரசியலில் வெகு காலம் அனுபவப் பட்டு, பண்பட்ட மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது பேசினார். ஆனால், அதனை அப்படியே திசை திருப்பி, கடுமையான ஆட்டம் போட்டு கோஷமிட்டு அவையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார் அன்சாரி.
தனியரசுக்கு இந்து முன்னணி எதிர்ப்பு
ஈரோடு மேற்கு மாவட்டம்
கவுந்தப்பாடி இந்து முன்னணி தொண்டர்கள் உருவப்பொம்மை எதிர்த்து முதல் எதிர்ப்பை பதிவு செய்தனர்.மேலும் பல இடங்களில் தனியரசு கட்சி பலகை மீது சாணத்தை வீசியும் எதிர்ப்பை பதிவு செய்துவருகின்றனர்
சட்ட விரோத செபக் கூடங்களை அகற்றக் கோரி இந்து முன்னணி நாளை கண்டன ஆர்ப்பாட்டம்!
இது, சென்னையில் புதன்கிழமை (மார்ச் 21) நாளை காலை 10 மணி அளவில் நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறுகிறது. இதற்குத் தலைமை தாங்குகிறார் மாநகரத் தலைவர் ஏ.டி. இளங்கோவன். மாநிலச் செயலாளர் த. மனோகரன், நிறுவன அமைப்பாளர் ராம கோபாலன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்துகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.
கடையநல்லூரில் மின்னல் வேகத்தில் கடந்த ரத யாத்திரை
நெல்லை மாவட்டம் செங்கோட்டை வழியாக இன்று கேரளத்தில் இருந்து நுழைந்த ரத யாத்திரை, தொடர்ந்து தென்காசிக்குச் சென்று, கடையநல்லூர் வழியாக ராஜபாளையம் நோக்கிச் சென்றது. இஸ்லாமியர்கள் அதிக அளவில் வசிக்கும் கடையநல்லூரைக் கடந்த...