வாளமீனு வெலங்குமீனு… அன்சாரியை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை

road roko stalin - 2026

வாளமீனுக்கும் வெலங்குமீனுக்கும் கல்யாணம்.. இப்படி பாட்டைப் போட்டு, மீம்ஸ் கிரியேட்டர்ஸ்,  தமிமுன் அன்சாரியை கலாய்க்கிறார்கள்.

நேற்று சட்டமன்றத்தில், அன்சாரி ஆடிய ஆட்டத்தைக் கண்டு திமுக., செயல் தலைவரே செயலற்றுப் போய் விட்டார். ராமராஜ்ய ரத யாத்திரையை அனுமதிக்கக் கூடாது என்று கூறி சட்டமன்றத்தில் முதலில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தவர்கள், ஜெயலலிதா தயவில் அதிமுக., சின்னத்தில் உறுப்பினர்களான மூன்று பேர். தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் இம்மூவரும் உள்நோக்கத்துடன் கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்மானம் கண்டுகொள்ளப் படாமல் போக, அரசுக்கு எதிராக நெருக்கடியைக் கொடுக்க வேண்டும் என்ற அரசியலால், அதனை கையில் எடுத்துக் கொண்ட திமுக.,வினர் மறு நாள் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தனர்.

அரசியலில் வெகு காலம் அனுபவப் பட்டு, பண்பட்ட மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது பேசினார். ஆனால், அதனை அப்படியே திசை திருப்பி, கடுமையான ஆட்டம் போட்டு கோஷமிட்டு அவையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார் அன்சாரி. இதனால் ஏதோ பேசிக் கொண்டிருந்த மு.க.ஸ்டாலின் செய்வதறியாமல் திகைத்தார். வேறு வழியின்றி, அன்சாரி போட்ட ஆட்டத்துக்கு ஒத்து ஊத வேண்டிய செயலற்ற நிலைக்கு தள்ளப்பட்ட செயல் தலைவர் ஸ்டாலின், அன்சாரி போக்கிலேயே வெளியேற்றப் பட்டு சாலை மறியலில் அமர்ந்தார்.

இந்நிலையில், அன்சாரி ஆடிய ஆட்டம் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அதில் வாலமீனுக்கு வெலங்கு மீனுக்கும் கல்யாணம் என்ற சினிமா பாடலையும் இணைத்து இப்போது கலாய்த்து வருகின்றனர்…

https://twitter.com/twitter/statuses/976313777443373056

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.