முன்னாள் அமைச்சர் ஆ..ராஜா, திமுக எம்பி கனிமொழி உள்பட ஒருசிலர் மீது 2ஜி அலைக்கற்றை வழக்கு நடந்து கொண்டிருந்த நிலையில் சமீபத்தில் இந்த வழக்கின் தீர்ப்பில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் ஆ..ராஜா, கனிமொழி உள்பட இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களின் விடுதலையை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளது. அதேபோல் சிபிஐ தரப்பில் இருந்தும் நேற்று மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த மேல்முறையீடு குறித்து பாஜக தேசிய செயலாளர் தனது டுவிட்டரில் கூறியபோது, 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சி.பி.ஐ டில்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. நிச்சயமாக குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்கிற நம்பிக்கை உள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.