உள்ளூர் செய்திகள்

கடும் எதிர்ப்பையும் மீறி… தமிழகத்தில் நுழைந்தது ராம ராஜ்ய ரத யாத்திரை! பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!

விஸ்வ இந்து பரிஷத் சார்பில் ராம ராஜ்ய ரத யாத்திரை அயோத்தியில் துவங்கி 5 மாநிலங்களை கடந்து இன்று காலை தமிழகம் வந்தது.விஸ்வ ஹிந்து பரிஷத்தின் “ராமராஜ்ஜிய ரத யாத்திரை” கடந்த மாதம்...

பஞ்சாங்கம் என்ன சொல்லுது; ரஜினியின் அரசியல் வாழ்க்கை பற்றி…!

ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பாஜக ஒரு தொகுதி கூட வெற்றி பெறாது எனவும் கூறப்பட்டுள்ளது.

ராம ராஜ்ய யாத்திரைக்கு அனுமதி கொடுத்து முதல்வர் பிணரயி விஜயன் பாஜக., அடிமை ஆகிவிட்டார்!

ராமர் ரத யாத்திரைக்கு அனுமதி கொடுத்ததால், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பாஜக., அடிமையாம். போராளீஸ்... அதே ரத யாத்திரைக்கு கேரளத்தில் அனுமதி கொடுத்த கம்யூனிஸ்ட் முதலமைச்சர் பிணரயி விஜயன் என்னபாஜக., அடிமையா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர் மீம்ஸ் க்ரியேட்டர்கள்!

பெரியார் மண்ணில் அரசு ஏன் அறநிலையத் துறையை நிர்வகிக்கிறது?

இந்த மண்லதான் அரசு நிர்வஹிக்கும் 58 ஆயிரம் கோயில்கள் உள்ளது. உண்டியல் பணம், கோயில் சொத்து வேணும். ஆனா சாமி வேணாமாம். வெங்காயம். - என்று கேட்டுள்ளார்.

அது வேற வாயி.. இது நாற வாயி…: திமுக.,வை கிண்டலடிக்கும் ராமதாஸ்

மதுக்கடை பார்களை நடத்துவதற்கு திமுக தயார்: சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் ரகுபதி பேச்சு - ஆட்சிக்கு வந்தால் முழுமதுவிலக்கு என்று முழக்கமிட்டது வேறு வாய் என்றால் இப்படி பேசுவது என்ன வாய்?

சாலை மறியலில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்டோர் கைது! கண்டித்து தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் சாலைமறியல்!

இதனிடையே, ஸ்டாலின் கைதைக் கண்டித்து, தஞ்சாவூர் உள்ளிட்ட சில இடங்களில் திமுக.,வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் அப்புறப்படுத்தினர்.இந்நிலையில் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப் பட்டுள்ள மு.க.ஸ்டாலினை அந்தப் பகுதி வழியே வந்த புதுச்சேரி முதல்வர் நாராயண சாமி சந்தித்துப் பேசினார். .
- 2026

மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசுகிறார் ஸ்டாலின்: ஓபிஎஸ் கடும் கண்டனம்

ரத யாத்திரையால் மதக் கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளது. விஸ்வ ஹிந்து பரிஷத் இந்த ராம ராஜ்ய ரத யாத்திரையை அனுமதித்ததற்கு கண்டனம் தெரிவிக்கிறோம். மத சார்பற்ற தன்மைக்கும் நாட்டின் பன்மைத் தன்மைக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் இந்த அரசு அனுமதித்துள்ளது. தற்போது நடப்பது அதிமுக ஆட்சியா? பாஜக ஆட்சியா? என்று கேள்வி எழுப்பினார்.

‘வெளிநடப்பு ஸ்பெஷலிஸ்ட்’ ஸ்டாலின் உள்ளிட்டோர் அவையில் இருந்து வெளியேற்றம்!

ஏற்கெனவே, அவையில் இருந்து அடிக்கடி வெளிநடப்பில் ஈடுபடுவது ஸ்டாலின் வழக்கம். இந்த முறை எதிர்க்கட்சித் தலைவராக இருந்து உருப்படியாக பயனுள்ள விவாதம் எதிலும் கலந்து கொள்ளாமல், எப்போது பார்த்தாலும் வெளிநடப்பில் ஈடுபட்டு வந்தார். இன்று அவராக வெளியேறாவிட்டாலும், தனது செயல்பாடுகளால் அவைக்காவலர்களால் வெளியேற்றப்பட்டார். பின் அனைவரும் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

சட்டம் ஒழுங்கு சீர்குலைவை ஏற்படுத்த உள்நோக்கத்துடன் செயல்படுகிறார்கள்: அமைச்சர் ஜெயக்குமார்

ரத யாத்திரை எல்லா மாநிலங்களும் வந்தது இங்கே மட்டும் சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்கும் உள்நோக்கத்துடன் செயல்படுகிறார்கள். அவர்கள் வட மாநிலங்களில் இருந்து கிளம்பி 5 மாநிலங்கள் வழியே இங்கே வந்து, ராமேஸ்வரம் போய், பின் கன்னியாகுமரி போய் அப்படியே ஊருக்கு போய் விடுவார்கள். அவர்கள் அவர்களின் வழியில் அமைதியாக அப்படியே சென்று கொண்டிருக்கிறார்கள்.

தமிழகம் வந்த ரத யாத்திரை: செங்கோட்டை எல்லையில் உற்சாக வரவேற்பு

ரத யாத்திரை வருவதையொட்டி செங்கோட்டையில் பல்வேறு இடங்களில் சாலை மறியல் நடைபெற்றது. தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமானோரை போலீசார் கைது செய்துள்ளனர். 

ஆலங்குடி அருகே ஈ.வே.ரா. சிலை சேதம்: மர்ம நபர்களுக்கு போலீஸார் வலைவீச்சு!

ஆலங்குடி அருகே புதுக்கோட்டை விடுதி கிராமத்தில் பெரியார் படிப்பகம் செயல்பட்டு வருகிறது. அதன் அருகில்  ஈ.வே.ரா., திருவுருவச் சிலை வைக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு இந்த சிலையின் தலையை மர்ம நபர்கள் துண்டித்துள்ளனர்.

மொழிப்போர் நிகழ்வுகளை மறந்துவிட முடியாது: ம.நடராசன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்

ம.நடராஜன் மறைவுக்கு, தி.க.தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், ஜவாஹிருல்லா, புகழேந்தி, வேல்முருகன், சுப.வீரபாண்டியன், இயக்குநர் பாரதிராஜா, வைரமுத்து உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
- 2026

Recent articles