
காங்கிரஸ் தலைவர் ராகுலின் 50வது பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸார் மரம் நடு விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்
கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுக் குழு உறுப்பினர் கரூர் மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் பேங்க் சுப்பிரமணியம் தலைமையில் கரூர் மாவட்டத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நடும் இந்த நிகழ்ச்சியில், மாவட்ட காங்கிரஸ் பொது செயலாளர் சுரேகா பாலச்சந்தர் வட்டார தலைவர் ஆடிட்டர் ரவிச்சந்திரன் நகர பொருளாளர் தாந்தோணி குமார் இளைஞர் காங்கிரஸ் ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, மரக்கன்றுகள் நட்டனர்.