karur-students-web-conference
karur-students-web-conference

கரூர் மாவட்டத்தில் கார்க்கில் வெற்றி தின கொண்டாட நினைவுதின நாளும்.. வருகின்ற சுதந்திர தினத்தையொட்டி தியாகத்தை போற்றுவோம் தேசப்பற்று கொள்வோம்
என்ற தலைப்பில் பள்ளி மாணவர்கள் இணையவழி கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வினை வரவேற்புரையாற்றி மணவாசிப்பள்ளி தலைமையாசிரியர் தேன்மொழி துவக்கினார். மாணவர்களுக்கு கார்க்கில் நினைவு தினம் பற்றி அறிமுக உரையாற்றினனார் நல்லோர் வட்டம் மற்றும் எல்லைப்படை வீரர் கிள்ளி வளவன்.

மாணவச் செல்வங்களுக்கு இந்திய ராணுவத்தின் நிலைகளையும் எல்லைப்பட வீரர்களின் தியாகத்தையும் மாணவர்களிடையே ஓங்கி வளர வேண்டிய தேசப்பற்று குறித்தும் கருத்துகளை சிறப்புரையாக வழங்கினார் கரூர் மாவட்டக்கல்வி அலுவலர் சிவராமன்.

karur-students-web-conference1
karur-students-web-conference1

இந்நிகழ்வின் முத்தாய்பாக ஹானரரி நாயக் சுபேதார் ஆரோக்கியச்சாமியும் தற்போது எல்லையில் பணியாற்றி வரும் இராணுவ அதிகாரி மார்டின் பிரிட்டோவும் தங்களது அனுபவங்களையும் சாலை விதிகளை கடைப்பிடித்தல், பொதுச்சொத்துகளை பாதுகாத்தல் போன்ற தகவல்களை இராணுவ சீருடை அணிந்து கலந்து கொண்டு பகிர்ந்து கொண்டனர்.

நாட்டுப்பற்று என்பது தன்னையே இந்நாட்டிற்கு அர்ப்பணிப்பது போன்ற பத்து தலைப்பில் பன்னிரெண்டு மாணவர்கள் தனுஜா, கோபிநாத், தர்ஷினி, மோனிஷா, மகதி, கீர்த்திகா, அனீஷ், ஆசிபா பிரியதர்ஷினி ஹர்சிதா, சரவணன், சந்திரமதி, பிரகாசிகா கருத்தரங்கில் கலந்து கொண்டு உணர்வுகளை பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் ஆசிரியர்களும் மாணவர்களும் பங்கு பெற்றனர்.

ALSO READ:  காணாமல் போன நயா பைசா கணக்கு!

இந்நிகழ்வினை நல்லோர் வட்டம் சார்பாக ஏற்பாடு செய்து ஒருங்கிணைப்புச் செய்து நன்றி கூறினார் ஆசிரியர் திலகவதி . நிகழ்வின் இறுதியில் மாணவர்கள் அனைவரும் ஜெய்ஹிந்த் கூறி தேசம் காப்போம் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

  • செய்தி: ஆனந்தகுமார், கரூர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending