
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நடந்து வரும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா பகல்பத்து உத்ஸவத்தில் 10ம் நாளான இன்று (24.12.2020) காலை ஸ்ரீ நம்பெருமாள், மோகினி அலங்காரத்தில் எழுந்தருளினார். நாச்சியார் திருக்கோலத்தில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடாகி அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
ஸ்ரீரங்கம் அரங்கநாதஸ்வாமி திருக்கோயில் வைகுந்த ஏகாதசி பெருவிழாவில், நம்பெருமாள் அர்ஜுன மண்டபத்தில் பகல் பத்து.. பத்தாம் நிறைவு திருநாள் 24.12.2020 காலை நாச்சியார் திருக்கோலத்தில் (மோஹிணி அலங்காரம்) பக்தர்களுக்கு சேவை!

நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலத்தில் கிளிமாலையுடன் மாலை புறப்பாடு கண்டருளினார்.