திருச்சி விமான நிலையத்தில்15 கிலோ தங்கம் பறிமுதல்..

images 2022 08 21T114026.963 1 - 2026
images 96 - 2026

வெளிநாடுகளில் இருந்து ஏழு விமானங்களில் வந்த 35 பயணிகளிடம் சுமார் 15 கிலோ தங்கம், திருச்சி விமான நிலையத்தில் இன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.திருச்சியில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, துபை, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு சர்வதேச விமான போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

திங்கள் கிழமை இரவு சிங்கப்பூர், மலேசியா, துபை, சார்ஜா நாடுகளில் இருந்து வந்த மொத்தம் 7 சர்வதேச விமானங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் திருச்சி வந்தனர். 

வெளிநாடுகளிலிருந்து அதிக அளவில் தங்கம் கடத்தி வருவதாக கிடைத்த தகவலின் பெயரிலும், சந்தேகத்தின் அடிப்படையிலும் அனைத்து பயணிகளிடமும் சுங்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதில், சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த 35 பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் பிரத்தியேகமாக வைத்து தீவிர சோதனை மேற்கொண்டதில் அவர்களிடம் சுமார் 15 கிலோ தங்கம் இருந்து தெரியவந்துள்ளது.

அனைத்து விமானங்கள் மற்றும் பயணிகளிடம் நடைபெற்ற இந்த சோதனை திங்கள் இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை பகலிலும் தொடர்ந்து வருகிறது. இதுவரை மொத்தம் 15 கிலோ தங்கம், பயணிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  அதில், பயணிகள் உரிய வரி செலுத்தி வாங்கி செல்லும் தங்கமும் அடக்கம். எனவே, கடத்தல் தங்கம் பறிமுதல் குறித்த விவரம் இன்று மாலை தெரிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு கோவை விமான நிலையத்தில் நடைபெற்ற சோதனையில், வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கம் அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்டதன், தொடர்ச்சியாக திருச்சி சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

Topics

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

Entertainment News

Popular Categories