October 9, 2024, 6:45 PM
31.3 C
Chennai

களை கட்டும் சென்னை சங்கீத சபாக்கள்
ஸ்ரீபார்த்தசாரதி சபா

100, டி.பி.கோயில் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-5 போன்: 2844 1837

இசை சபாக்களிலேயே மிகப் பழமையான பார்த்தசாரதி சபாவின் 106 வது இசை விழா இந்த வருடம் நடத்தப்படுகிறது. இந்த இசை விழாவில் ஆண்டுதோறும் சங்கீத கலா சாரதி என்ற உயரிய விருது மூத்த கலைஞர்களுக்கு வழங்கப்படுகிறது.

மியூசிக் அகாடமி (1928)

168, டி.டி.கே. சாலை, சென்னை போன்: 2811 2231/2811 5162

மியூசிக் அகாடமி, இசை வளர்ச்சியில் எடுத்துக் கொண்டிருக்கிற பங்கு மகத்தானது. இசை மட்டுமல்ல, நாட்டியம், நாடகம் ஆகிய கலைகளின் மேம்பாட்டிற்காகவும், அகாடமி அருந்தொண்டாற்றியிருக்கிறது.

சர்.சி.பி.ராமஸ்வாமி ஐயரால் துவக்கப்பட்டது மியூசிக் அகாடமி. பிரதமர் நேருவால் அடிக்கல் நாட்டப்பட்டு 1926 ல் மகாராஜா ஜெயசாமாராஜா வாடியார் பகதூரால் திறந்து வைக்கப்பட்ட மியூசிக் அகாடமி மையக் கலை அரங்கம் மிகப் பெரிய தொழிலபதிபரும், கலை ஆர்வலருமா;ன டி.டி.கிருஷ்ணாச்சாரியின் பெயரால் அழைக்கப்படுகிறது.

இந்தக் கலை அரங்கத்தில் கர்நாடக இசைக் கச்சேரிகள், ஹிந்துஸ்தானி கச்சேரிகள், ஜுகல் பந்திகள், ஃப்யூஷன் நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள் அரங் கேறுகின்றன. வெறும் கச்சேரிகளோடு நின்று விடாமல் பெரிய பெரிய இசை, நடன விற்பன்னர்களையும், மேதை களையும் அழைத்து வந்து இசை மற்றும் நடனம் குறித்து விளக்கவுரைகளையும், கருத்தரங்குகளையும் அகாடமியே நடத்துகிறது.

1982இல் கட்டப்பட்ட கஸ்தூரி சீனிவாசன் அரங்கில் இசை குறித்த கருத்தரங்குகளும், கச்சேரிகளும் நடக்கின்றன. மேலும் அரிய புத்தகங்கள் அடங்கிய நூலகம், ஒலிப்பதிவு மற்றும் விளக்கவுரைகளுக்கான அறைகளும் இருக்கின்றன. வருடா வருடம் டிசம்பர் மாதத்தில் மிகப் பெரிய இசை விழாவை நடத்துகிற மியூசிக் அகாடமி 1942 இல் இருந்தே இசையில் தனித்திறன் படைத்த கலைஞர்களுக்கு சங்கீத கலாநிதி என்கிற உயரிய விருதை வழங்கி கவுரவித்து வருகிறது. 1982 இல் இருந்து சங்கீத கலா ஆச்சார்யா என்கிற விருதையும் வழங்கி கலைஞர்களைப் பெருமைப்படுத்தி வருகிறது.

நம்பிக்கையூட்டும் இளம் கலைஞர்களை ஊக்கப்படுத்தும் நோக்கத்தோடு ற விழாவை ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் நடத்தி வரும் மியூசிக் அகாடமி,  இரண்டு இளைய இசைக்கலைஞர் களுக்கு உதவித் தொகையும் வழங்குகிறது. இவற்றோடு 30 க்கும் மேற்பட்ட பிரிவுகளில் இசைப் போட்டிகளும் நடத்தப்படுகின்றன. இசை குறித்த ஆராய்ச்சிகளும் இசைப் பள்ளியும் மியூசிக் அகாடமியில் நடத்தப்பட்டு வருகின்றன. 


ஆர்.ஆர். சபா (1930)30/1, சுந்தரேசுவரர் தெரு, மயிலாப்பூர், சென்னை- 4 போன்: 2494 1767

ரசிக ரஞ்சனி சபா என்பதன் சுருக்கமே ஆர்.ஆர். சபா. கடந்த 76 ஆண்டுகளாக இசை, நடனம், நாடகம் ஆகிய முக்கலை களின் மேம்பாட்டில் ஆர்.ஆர். சபா பாராட்டத்தக்க சேவை புரிந்து வருகிறது.

ஒவ்வொரு டிசம்பரிலும், இசை மற்றும் நடன விழாவை பெரிய அளவில் நடத்தி வரும் ஆர்.ஆர். சபா, வருடா வருடம் சிறந்த வித்வான்களுக்கு கலாரத்னா என்ற விருதை வழங்கி கவுரவிக்கிறது.

இவற்றோடு இளைய கலைஞர்களை ஊக்கப்படுத்தும் பொருட்டு, அவர்களுக் கென்றே பிரத்யேகமான இசை விழா ஒன்றும் நடத்தப்படுகிறது. நவராத்திரி கொண்டாட்டங்களின் போதும் நடன விழாவை ஒருவார காலத்திற்கு நடத்து கிறது. அழிந்து வரும் நாடகக் கலைக்கு உயிர் கொடுக்கும் நோக்கத்தோடு ஒவ்வொரு ஆகஸ்ட் மாதமும் நாடக விழாவையும் இந்த சபா நடத்தி வருகிறது. அந்த விழாவின் போது சிறந்த மேடைக் கலைஞர்களுக்கு பணமுடிப்பும் வழங்கப் படுகிறது. இளைய கலைஞர்களுக்கு சம்பிரதாய முறைப்படி வாய்ப்பாட்டும், பக்க வாத்திய இசையும் கற்றுத் தரப் படுகிறது.

இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் (1932)

48, ஸ்டிங்கர்ஸ் தெரு, சென்னை?போன்:2538 0015

74 வது வயதில் அடியெடுத்து வைக்கிறது இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ். வடசென்னையிலுள்ள கலை ஆர்வலர் களின் தாகத்தைத் தீர்க்கும் பொருட்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த சபா, வருடந் தோறும் இசை, நடன விழாவை சிறப்புடன் நடத்தி வருகிறது.

ஒவ்வொரு வருடாந்திர விழாவின் போதும், சிறந்த இசைக் கலைஞர்களுக்கு சங்கீத கலாசிகாமணி விருதையும், சிறந்த நடனக் கலைஞர்களுக்கு நாட்டிய கலா சிகாமணி விருதையும் வழங்கி பெருமைப்படுத்துகிறது, இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சபா.

இந்த இசை விழா தவிர்த்து ஒவ்வொரு மாதமும் முத்துஸ்வாமி தீட்சிதர், தியாகராஜர் போன்ற ஏதாவதொரு சாஹித்ய கர்த்தாக்களின் விழாவையும் நடத்தி வருகிறது. சம்பிரதாயத்தையும், பாரம்பரியத்தையும் இளைஞர்களுக்கு உணர்த்தும் வகையில் வாத்திய இசையிலும், வாய்ப்பாட்டிலும் வருடம் தோறும் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன. நடனக் கலைக்கான போட்டியும் நடத்தப்படுகிறது. இந்தப் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு வருடாந்திர இசை விழாவில் வாய்ப்பு வழங்கப்படுகிறது. 


தமிழிசைச் சங்கம் (1943)ராஜா அண்ணாமலை மன்றம், சென்னை?#2986;ோன்: 2534 1425

தமிழிசைச் சங்கம் உயிர் பெற்றுத் தழைக்க வேண்டும். தமிழ்ப் பாடல்கள் இசை ரசிகர்களுக்கு போய்ச் சேர வேண்டும். பாடல்களின் பொருளை உணர்ந்து, அவர்களும் அதன் சுவையை உணர வேண்டும். இந்த நோக்கங்களின் அடிப்படையில் 1929 இல் திரு.அண்ணாமலை செட்டியாரால் தோற்றுவிக்கப்பட்டது தான் தமிழிசை இயக்கம். 1943 ல் அதுவே தமிழிசைச் சங்கமாக பரிணாமம் பெற்றது.

தமிழிசைச் சங்கம் ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் தமிழ் இசை விழாவை மிகச் சிறப்பாக நடத்தி வருகிறது. விழாவில் இசை நிகழ்ச்சிகளோடு, தமிழ்ப் பண்கள் பற்றிய சொற்பொழிவுகளும் நடத்தப்படுகின்றன. சிறந்த தமிழிசை அறிஞர்களுக்கு, இசைப் பேரறிஞர் பட்டம் வழங்கப்படுகிறது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்கவாசகர் ஆகியோரை நினைவு கூரும் நால்வர் விழாவையும், ஆழ்வார்கள் விழாவையும் நடத்தி வருகிறது தமிழிசைச் சங்கம்.

தமிழிசைப் பண்கள் குறித்த ஆராய்ச்சியும் 1949 இல் இருந்து நடத்தப்பட்டு வருகிறது. இதில், பழந்தமிழ் ஓதுவார்கள், இயற்றமிழ் புலவர்கள், இசைத் தமிழ் புலவர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.


தியாக பிரம்ம கான சபா (1945)

103, ஜி.என்.செட்டிசாலை, தி.நகர், சென்னை17 போன்: 2828 2166

மயிலாப்பூரில் மட்டுமே மையம் கொண்டிருந்த கான மழையை, மாம்பலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பொழிய வைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் ஆரம்பிக்கப்பட்டதே தியாக பிரம்ம கான சபா. தனது 27 வயது ஆண்டு இயல், இசை, நடன விழாவை நடத்துகின்ற தியாக பிரம்ம கான சபா, ஆண்டுதோறும் வாணி கலா சுதாகரா என்ற விருதை சிறந்த கலைஞர்களுக்கு வழங்கி வருகிறது.

சங்கீத மும்மூர்த்திகளின் நினைவாக டிரினிட்டி டே என்று சங்கீதத் திருநாளை கொண்டாடுகிற இந்த சபா இசைப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவதோடு, குறைந்த கட்டணத்தில் இசை வகுப்புகளையும் நடத்தி வருகிறது. வாணி மஹால் என்ற சொந்தக் கட்டிடம், இந்த சபாவின் சிறப்பம்சம்.

மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் (1951)16, முசிறி சுப்பிரமணியம் சாலை, சென்னை 4 போன்: 2499 7755

இயல், இசை, நாடகம் ஆகிய கலைகளின் மேம்பாட்டிற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ள மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ், நாடகக் கலைக்காகத்தான் 1951 இல் ஆரம்பிக்கப்பட்டது. நாளடைவில் நடனத்தையும் சேர்த்துக் கொண்டது.

1974 ஆம் வருடத்திலிருந்து இசை, நடன விழாக்களை மார்கழியில் நடத்தி வரும் இந்த சபா, உயர்ந்த இசைக் கலைஞர்களுக்கு சங்கீத கலா நிபுணா என்ற விருதை வழங்கி பெருமைப்படுத்துகிறது.

இளம் கலைஞர்களை ஊக்கப்படுத்தும் பொருட்டு ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதத்தில் ஒரு மினி இசை விழாவையும் 10 நாட்களுக்கு நடத்துகிறது. இளைய திறமையாளர்களை அடையாளம் காணும் நோக்கத்தோடு தியாகராஜர், முத்துஸ்வாமி தீட்சிதர் போன்ற வாக்கேயக்காரர்களின் கிருதிகளிலும், வாத்தியக் கருவிகளிலும் 14 வகையான போட்டிகள் நடத்தப்படுகின்றன. வெற்றி பெற்றவர்களுக்கு இசை விழாவில் பரிசளிக்கப்படுவதோடு பாட வாய்ப்பும் வழங்கப்படுகிறது.

நாரத கான சபா (1958)

314, டி.டி.கே. சாலை, சென்னை போன்: 2499 3201/2499 0850

டிசம்பர் சீசனில் சென்னை நகரை இசை மழையில் நனைய வைப்பதில் நாரத கான சபாவுக்கு பெரும் பங்குண்டு. பழமையான சங்கீதத்தை மேம்படுத்துவதையே தனது அடிநாதமாகக் கொண்டு ஒலிக்கும் நாரத கான சபா, இசை, நாட்டிய, நாடக விழாவை கடந்த 47 ஆண்டுகளாக மிகச் சிறப்பாக நடத்தி வருகிறது.

இவ்விழாவில், இசை, நாட்டிய, நாடக நிகழ்ச்சிகளோடு, பல்வேறு கருத்தரங்குகளும், விளக்கவுரைகளும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. ஒவ்வொரு வருடமும், சிறந்த இசைக் கலைஞர்களுக்கு நாத பிரம்மம் விருதையும், மூத்த இசைக் கலைஞர் விருதையும் வழங்குகிறது.

சிறந்த இசைவாணர்களின் விழா, நாட்டியாஞ்சலி விழா போன்றவையும் நடத்தப்பட்டு வருகின்றன. பொதுமக்களுக்கு சாஸ்தீரிய இசை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில், ஒவ்வொரு மாவட்டத் தலைநகரங்களிலும் மும்மூர்த்திகள் விழா, சியாமா சாஸ்திரி விழா போன்றவற்றை நடத்தி மிகப் பெரிய இசைக் கலைஞர்களை அதில் பங்கேற்க வைக்கிறார்கள்.

கபாலி ஃபைன் ஆர்ட்ஸ் (1969)

21, லஸ் அவின்யு, மயிலாப்பூர், சென்னை போன்: 2499 4741

தனது வருடாந்திர கலை விழா மூலமாக நிறைய இளம் கலைஞர்களை உருவாக்கிய பெருமை உடையது கபாலி ஃபைன் ஆர்ட்ஸ். இசை, நடனம், நாடகத் துறைகளில் இன்றைய தினம் சுடர் விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருக்கிற பல இளைய கலைஞர்கள் கபாலி ஃபைன் ஆர்ட்?00; எளிதில் மறக்க மாட்டார்கள்.

டிசம்பரில் இசை, நடன விழாவை மிகப் பெரிய அளவில் நடத்தி வரும் கபாலி ஃபைன் ஆர்ட்ஸ், மாதந்தோறும் நாடகங்களையும், அவ்வப்போது இசை, நாட்டிய நிகழ்ச்சிகளையும் நடத்துகிறது. இசை, நாட்டியம், நாடகம் ஆகிய கலைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு சங்கீத ஜோதி, நாடக ஜோதி, நாட்டிய ஆச்சார்யா ஆகிய விருதுகள் வழங்கப்படுகின்றன. 

author avatar
செங்கோட்டை ஸ்ரீராம்
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – அக்.09 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் 2,236 பேருக்கு அப்ரென்டிஸ் பணிவாய்ப்பு!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் 2,236 பேருக்கு அப்ரென்டிஸ் பணிவாய்ப்பு!

‘நிமுசுலைடு’ மாத்திரைகளை குழந்தைகளுக்கு பரிந்துரைக்க தடை!

நிமுசுலைடு (Nimesulide) என்ற மாத்திரை, கால் வலி, மூட்டு வலி, காது, மூக்கு, தொண்டை வலி, தீவிர காய்ச்சல் மற்றும் உடல் வலிக்கு தீர்வை அளித்து வருகிறது.

இந்திய விமானப் படை தினம் இன்று!

அடுத்த வரும் நான்கு ஆண்டுகளில் வானில் பறக்கும் போர் விமானங்கள் இந்திய தயாரிப்பாக இருக்கும். அல்லது இந்தியாவில் தயாரான உதிரி பாகங்களை கொண்டதாக இருக்கும் என்பதே நிதர்சனமான உண்மை.

ஆன்லைன் பட்டாசு வியாபாரத்தில் மோசடி: தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் சங்கம்!

சிவகாசியில் தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் மாநில தலைவர் ராஜாசந்திரசேகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

Topics

பஞ்சாங்கம் – அக்.09 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் 2,236 பேருக்கு அப்ரென்டிஸ் பணிவாய்ப்பு!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் 2,236 பேருக்கு அப்ரென்டிஸ் பணிவாய்ப்பு!

‘நிமுசுலைடு’ மாத்திரைகளை குழந்தைகளுக்கு பரிந்துரைக்க தடை!

நிமுசுலைடு (Nimesulide) என்ற மாத்திரை, கால் வலி, மூட்டு வலி, காது, மூக்கு, தொண்டை வலி, தீவிர காய்ச்சல் மற்றும் உடல் வலிக்கு தீர்வை அளித்து வருகிறது.

இந்திய விமானப் படை தினம் இன்று!

அடுத்த வரும் நான்கு ஆண்டுகளில் வானில் பறக்கும் போர் விமானங்கள் இந்திய தயாரிப்பாக இருக்கும். அல்லது இந்தியாவில் தயாரான உதிரி பாகங்களை கொண்டதாக இருக்கும் என்பதே நிதர்சனமான உண்மை.

ஆன்லைன் பட்டாசு வியாபாரத்தில் மோசடி: தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் சங்கம்!

சிவகாசியில் தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் மாநில தலைவர் ராஜாசந்திரசேகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பஞ்சாங்கம் அக்.08- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

வான் சாகச நிகழ்ச்சி உயிரிழப்பு: திமுக அரசின் நிர்வாக சீர்கேடு

வான் சாகச நிகழ்ச்சி உயிரிழப்பு: திமுக அரசின் நிர்வாக சீர்கேடு என...

சாதனை படைத்த விமானப்படை நிகழ்ச்சி சோகத்தில் முடிந்தமைக்கு திமுக அரசே காரணம்!

உலகமே வியந்து பாராட்டிய சென்னை விமானப்படை சாகச நிகழ்ச்சியில் பங்கேற்ற அப்பாவி மக்கள் 5 பேர் உயிரிழந்துள்ள செய்தி கேட்டு நெஞ்சம் பொறுக்கவில்லை

Related Articles

Popular Categories

Previous article
Next article