திருக்குற்றாலம் – செண்பகாதேவி அருவிக்குச் செல்லும் பாதை இது. மெயின் சாலையில் இருந்து சிற்றருவிக்குச் செல்லும் வழி இது. இதனைத் தொடர்ந்து இன்னும் மலை மேல் சுமார் 3 கி.மீ ஏற வேண்டும். மெயின் அருவிக்குச் செல்லும் தண்ணீரில் சிறுதடுப்பு ஏற்படுத்தி சிற்றருவிக்கு தண்ணீர் வர வழி ஏற்படுத்தினார்கள். இந்த சிற்றருவியில் பெண்களும் குழந்தைகளும் மிகவும் பாதுகாப்பாகக் குளிக்கலாம். தனி அறை போன்ற அமைப்பு ஏற்படுத்தியிருக்கிறார்கள். எனவே கொஞ்சம் கட்டணமும் உண்டு. மலை மேல் ஏறும் அசத்தல் அனுபவமே அலாதிதான். வாய்ப்பு கிடைத்தால் விட்டுவிடாதீர்கள். முன்பெல்லாம் எல்லோருமே இந்த சிற்றருவி தாண்டி, செண்பகாதேவி அருவிக்குச் சென்றார்கள். எந்த வித கெடுபிடிகளும் இல்லாமல்! ஆனால், இப்போது கெடுபிடிகள் அதிகம். பெரும்பாலும் சிற்றருவி தாண்டி யாரையும் அனுமதிப்பதில்லை. வருங்காலத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக, செண்பகாதேவி அருவிக்கும்கூட யாருமே செல்ல முடியாத சூழலும் ஏற்படலாம். இப்போது தேனருவிக்கு செல்ல அப்படி ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளிக்கூட வயதில் அடிக்கடி இந்த மலை மேல் ஏறி தேனருவிக்குச் சென்றிருக்கிறேன். காலையில் அம்மா தோசை வார்த்துத் தருவார்கள். கையில் எடுத்துக்கொண்டு நண்பர்களுடன் மேலே ஏறுவோம். மதிய நேரத்தில் தோசை சற்றே கடினமாக இருக்கும். அப்படியே அந்தத் தேனருவித் தண்ணீரில் தோசையை ஒரு முக்கு முக்கி, சாப்பிட்டால்… அவ்வளவு டேஸ்ட். தண்ணீர் தெள்ளத்தெளிவாக இருக்கும். அருவிகள் நம் தாய் போன்றவை. அதுபோன்ற வாய்ப்பு இனியும் கிடைக்குமா என்பது சந்தேகம். காரணம் எல்லாவற்றுக்கும் பாதுகாப்புக் காரணம் என்று சொல்வது தற்போது வழக்கமாகி விட்டதே! தீபாவளியை ஒட்டி செண்பகாதேவி அருவிக்கு செங்கோட்டை நண்பர்கள் ஐவரோடு சென்று வந்தேன். வேறு யாருமே அந்த மலைப்பகுதியில் இல்லை. சிற்றருவியிலேயே தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். மிகவும் அன்யோன்யமான அருவிக்கு, அன்யோன்யமான காவலர் நண்பர் ஒருவர் அங்கே இருந்ததால், நீண்ட நாட்களுக்குப் பிறகு செல்ல வாய்ப்பு ஏற்பட்டது. அந்தப் படங்களை இங்கே நீங்கள் காணலாம்…
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
சற்றுமுன்
வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!
பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!
மதுரை
மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!
மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

அரசியல்
‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!
உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.
கட்டுரைகள்
ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?
ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
Entertainment News
Next article