கரூரில் திமுக., பெயரில் காட்டுமிராண்டிகள் அட்டூழியம்! காவல் துறை ‘கொர்’!

wall in karur - 2026

கரூர் : பாஜக வினரின் பொறுமையை சோதிக்கும் தி.மு.க வினரால் கரூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை ஆகியோரின் சுவர் வரைபடங்களை அழித்து திமுக வினர் அட்டூழியத்தில் இறங்கியுள்ளனர்!

கரூர் நகரில் முக்கியப் பகுதியாக விளங்கும், கரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு ஏற்கனவே திமுக., வினர் சுவர் விளம்பரம் செய்திருந்த நிலையில், அவர்கள் சுவர் விளம்பரம் செய்யாத ஓர் இடத்தில் மட்டும், பாரத பிரதமர் நரேந்திரமோடி அவர்களின் பிறந்த தினமான செப்டம்பர் 17 ம் தேதி அன்று கொண்டாடும் வகையில் கரூர் மாவட்ட பாஜக சார்பில் விளம்பரம் செய்யப்பட்டது.

ஏற்கனவே கரூரில் உள்ள தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, கோவை மற்றும் சென்னையே கதி என்று கிடக்கும் நிலையில் மாதத்திற்கு ஒருமுறையாவது கரூர் வந்தால் கரூர் பயணியர் மளிகையில் தங்குவார். அங்கே தங்கி கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பார்க்கும் போது அரசு சுவர் விளம்பரத்தினை கவனிப்பார் . ஆகவே, திமுக வினர் மட்டுமே அரசு சுவர் விளம்பரத்தில் அதுவும் மாநில அரசிற்குட்பட்ட கரூர் கோட்டாட்சியர் அலுவலக சுற்றுச்சுவர் வளாகத்தில் வரைவோம் என்று கூறி, பாஜக வினரை தாக்கி கரூரையே கலவரபூமியாக மாற்றினர்.

மீண்டும் பாஜக வினரை சீண்டும் விதமாக ஏற்கனவே, கரூர் திருவள்ளுவர் மைதானம் முன்பு உள்ள தனியார் சுற்றுச்சுவரில் பாரத பிரதமர் மோடி அவர்களின் பிறந்த தினத்தினை கொண்டாடும் வகையில் எழுதப்பட்டிருந்த சுவர் விளம்பரத்தினை அழித்ததோடு, மோடி அவர்களின் படத்தினை கரிப்பூசி அழித்தது போல் அழித்து, அதனை தொடர்ந்து பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை அவர்களது படத்தினையும் கரி பூசியுள்ளனர்.

கரூர் மாவட்ட தலைவர் வி.வி.செந்தில்நாதன் படத்தினையும் கரிப்பூசியுள்ளதால் இந்த பகுதியில் பதற்றம் நிலவுகின்றது.

ஏற்கனவே, பாஜக கரூர் மாவட்ட தலைவர் வி.வி.செந்தில்நாதன், கரூர் மாவட்டம் எங்கே செல்கின்றது 22 வயது இளைஞர் கஞ்சாவிற்று கைது செய்யப்படுகின்றான். குட்கா, கஞ்சா ஆகியவைகள் அதிகமாக கரூர் மாவட்டத்தில் விற்பனையாவதோடு, 24 மணி நேரமும் மதுவிலக்கு துறை அமைச்சர் தொகுதியிலேயே டூப்ளிகேட் சரக்குகளும் கிடைக்கின்றது என்றும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அதோடு,. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பட்டியல் அணி சார்பில் மறைந்த சட்டமாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களுக்கு புகழாஞ்சலி செலுத்தும் போது, கரூர் திண்ணப்பா கார்னரில் கரூர் நகர காவல்துறை ஆய்வாளர் செந்தூரபாண்டியன் என்பவர் பட்டியல் அணி நிர்வாகிகளையும், டாக்டர் அம்பேத்கர் அவர்களையும் இழிவுபடுத்தும் வகையில் நடந்து கொண்டதாக, டெல்லியில் உள்ள தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் செய்தார்.

இந் நிலையில்,. அதற்கு விளக்கம் கேட்டு கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறியதை அடுத்து, காவல்துறையினரின் தூண்டுதலின் பேரிலேயே, திமுக வினரின் தாக்குதலும், பாஜக வினரின் சுவர் விளம்பரத்தினை அழித்ததோடு, பாரத பிரதமர் படத்தினையும் கரிப்பூசி அழித்துள்ள நிகழ்வு அரங்கேறியுள்ளது.

இந்த சம்பவத்தினால் கரூர் ரவுண்டானா அருகே போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. மேலும் கரூர் மாவட்ட நிர்வாகத்தினை பொறுத்தவரை கரூர் மாவட்ட ஆட்சியரும், கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எந்நேரத்திலும் மாற்றப்படலாம் என்கின்றனர் அரசியல் வட்டாரங்கள்

wall in karur1 - 2026

ஏற்கனவே பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, பி.ஜி.ஆர். எனர்ஜி ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்து சுமார் பல கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதும், முறைகேடு செய்துள்ளதும் ஆதாரப்பூர்வமாக எடுத்துரைத்தார்.

இந்நிலையில், இந்த கரூர் சுவர் விளம்பரம் தகராறில், பாஜக பிரமுகர்களை தாக்கிய திமுக வினரிடையே செல்போன் மூலம் அமைச்சர் செந்தில்பாலாஜி பேசியதாகவும், இந்த விஷயத்தினை சும்மா விடாதீங்க, இதனை விட்டால் நாம் முன்னேற முடியாது என்றும் கூறியுள்ளதாகவும், ஏற்கனவே தமிழக அளவில் சாலை போடாமலேயே தார்சாலை போட்ட விவகாரத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் மனம் குளிரவைக்க வேண்டுமானால், கரூரில் ஏதேனும் பொதுக்கூட்டம் அல்லது சிறப்பான சம்பவம் செய்ய வேண்டுமென்றும் கூறியதாக கூறப்படுகின்றது.

இதனால் கரூர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் எழுதி வைக்கப்பட்டிருந்த சுவர் விளம்பரம் மட்டுமில்லாமல், கரூர் வேம்புமாரியம்மன் ஆலயத்தின் அருகே உள்ள பசுபதிபுரம் மற்றும் கோட்டாட்சியர் அலுவலக வளாக சுற்றுச்சுவர் பாஜக விளம்பரங்கள் ஆகியவை இரவோடு, இரவாக அழிக்கப்பட்டும், காவல்துறை இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றே கூறுகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories