apple pay - 2026

நிதி சேவைகளை தொடங்க உள்ள ஆப்பிள்!

சற்றுமுன் அடடே... அப்படியா? தொழில்நுட்பம்
apple pay - 2026

கூகுள், பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் நிதி சார்ந்த செயலிகள் தனது சேவைகளில் கவனம் செலுத்தி வருவதால் ஆப்பிள் தனது வாடிக்கையாளர்களுக்கு என நிதி சேவைகளை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் புதிய நிதி சார்ந்த தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகின்றது தற்போது அமெரிக்காவில் மட்டுமே ஆப்பிள் பே உள்ளிட்ட சேவைகள் செயல்பட்டு வரும் நிலையில் அனைத்து நாடுகளிலும் இந்த சேவைகளை கொண்டு வரவேண்டும் என்பதற்கான சில ஏற்பாடுகளை செய்து வருகிறது.

ஆப்பிள் ஏற்கனவே கிரெடிட் கார்டு மற்றும் பணம் அனுப்பும் சேவையை வழங்கி வருகின்றது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் வட்டி இல்லாத இ.எம்.ஐ சேவையையும் அறிமுகம் செய்தது.

இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் அனைத்து நிதி சார்ந்த சேவைகளையும் உள்ளடக்கிய ‘Apple Pay in 4’ போன்ற சேவையை அமல்படுத்துவதற்கான பணியை மேற்கொண்டு வருகின்றது.

இந்த சேவை 70க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ளது. ஆனால் ஆப்பிள் கார்ட், ஆப்பிள் கேஷ் போன்ற சேவைகள் அமெரிக்காவில் மட்டும் தற்போது நடைமுறையில் உள்ளது. இவற்றை விரிவுபடுத்த வேண்டும் என்பதற்காக பல ஏற்பாடுகளை ஆப்பிள் நிறுவனம் செய்து வருகின்றது.

தற்போது கூகுள், பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் நிதி சார்ந்த செயல்கள், சேவைகளில் கவனம் செலுத்தி வரும் நிலையில் தற்போது ஆப்பிலும் தனது வாடிக்கையாளர்களுக்கு சில நிதி சேவைகளை தொடங்க உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.