செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பிரதமர் படங்கள்…

Published:

1736871 against modi protest 1 - 2026

செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று துவங்கி நடைபெற உள்ள நிலையில் இது குறித்த விளம்பர பேனர்களில் பிரதமர் மோடி படம் இல்லாததால் அவரது படத்தை இணைப்பதும்‌ அதன் மீது சிலர் பூசி மறைக்கும் சம்பவம் நடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று தொடங்கி ஆகஸ்ட் 10ந் தேதிவரை 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இது குறித்த விளம்பர பேனர்கள் மாநிலத்தின் முக்கிய ஊர்களில் வைக்கப்பட்டுள்ளன.  இந்நிலையில் புதுக்கோட்டையில் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், பி.எல்.ஏ. ரவுண்டானா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த விளம்பர பதாகைகளில் பிரதமர் மோடியின் புகைப்படம் இல்லாமல் இருந்தது. இதனை கண்ட பாஜக நிர்வாகிகள் பிரதமரின் புகைப்படத்தை எடுத்துச் சென்று அந்த பேனர்களில ஓட்டினர். 

1736872 against modi protest 2 - 2026

இதே போல் மதுரையிலும் தமிழக அரசு சார்பில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகளில் பிரதமர் படம் இடம் பெறவில்லை. இதை கண்ட இந்து முன்னணியின்ர் முதலமைச்சரின் படத்திற்கு மேலே பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஒட்டிச் சென்றனர்.  இந்நிலையில், சென்னை அடையாறு பகுதியில் இருந்த பேனர்களில் பாஜகவினர் பிரதமர் மோடியின் புகைப்படத்தை ஓட்டிச் சென்றனர்.

ALSO READ:  அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

இதையடுத்து அங்கு வந்த பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் பிரதமர் மோடியின் புகைப்படம் மீது கருப்பு வண்ண ஸ்பிரே அடித்தனர். இது குறித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் மூன்று பேரை கைது செய்துள்ளனர்.

1736873 against modi protest - 2026
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img