தலைமை தேர்தல் ஆணையத்தின் முடிவுக்காக காத்திருக்கும் இபிஎஸ்,ஓபிஎஸ் அணியினர்..

757357 ops epd - 2026

அ.தி.மு.க.வில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கட்சியை கைப்பற்ற தீவிரமாக களம் இறங்கினார்கள். 66 எம்.எல்.ஏ.க்களில் 63 பேரின் ஆதரவையும், மொத்தம் உள்ள பொதுக்குழு உறுப்பினர்களில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஆதரவை தக்க வைத்துள்ள எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் பொதுக்குழுவை கூட்டி இடைக்கால பொதுச்செயலாளரானார்.

இதுபற்றி தகவலையும் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி இருக்கிறார். அதேபோல் ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது பற்றியும் தகவல் அனுப்பி இருக்கிறார்கள். பெரும்பான்மை ஆதரவு இருப்பது பற்றியும் உரிய ஆவணங்களுடன் புகார் கொடுத்துள்ளார். அதே நேரம் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் அந்த பொதுக்குழுவே செல்லாது. கட்சியின் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்பதையும் சுட்டி காட்டி இருக்கிறார்கள்.

இரு தரப்பினரின் கோரிக்கைகளையும் தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது. கோர்ட்டு மூலம் கட்சி அலுவலகம் எடப்பாடி பழனிசாமி கைகளுக்கு வந்து விட்டது. இதற்கிடையில் தமிழக தேர்தல் அதிகாரி நேற்று நடத்திய அனைத்து கட்சி கூட்டத்துக்கு அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு கடிதம் அனுப்பினர். இதன் மூலம் தேர்தல் ஆணையமும் அங்கீகரிப்பதற்கான முதல் வெற்றி என்று எடப்பாடி அணியினர் கொண்டாடுகிறார்கள் இதற்கிடையே ஓ.பன்னீர்செல்வமும் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி அணைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி பெற்றார்.

இரு தரப்பும் கலந்துகொண்டதால் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்றது எந்த அணி? என்ற கேள்வி எழுந்தது. எந்த அணிக்கு அங்கீகாரம் என்பது தொடர்பாக மத்திய தேர்தல் ஆணையம் தான் முடிவெடுக்கும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார். இதனால் தலைமை தேர்தல் ஆணையத்தின் முடிவுக்காக இரு அணிகளும் காத்திருக்கின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories