annamalai k - 2026

திமுக.,வினருடன் ஊழல் குறித்த விவாதப் போட்டி: தொடங்கி வைத்தார் அண்ணாமலை!

அரசியல் Featured சற்றுமுன் தமிழகம்
annamalai k - 2026

திமுகவினர் என்னுடன் ஊழல் குறித்து விவாதிக்க விரும்புவதால், நான் அதை எதிர்கொள்ள ஆவலுடன் இருக்கிறேன்… என்று தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் பாஜக., மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் கட்டியிருக்கும் வாட்ச் குறித்து கருத்து வெளியிட்ட மாநில அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பதிலளிக்கும் விதத்தில் அண்ணாமலை சில பதிவுகளை டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இது குறித்து கே.அண்ணாமலை வெளியிட்ட தகவல்…

திமுகவினர் என்னுடன் ஊழல் குறித்து விவாதிக்க விரும்புவதால், நான் அதை எதிர்கொள்ள ஆவலுடன் இருக்கிறேன்.

நான் தமிழக பாஜகவின் தலைவராக பொறுப்பேற்றதுக்கு முன்பு, மே மாதம் 2021ல் வாங்கிய எனது ரஃபேல் கடிகாரத்தின் விவரங்கள், அதன் ரசீது மற்றும் எனது வாழ்நாள் வருமான வரி அறிக்கைகள், 10 ஆண்டுகால எனது வங்கிக் கணக்குகளின் பரிவர்த்தனைகள் (எனது ஒவ்வொரு வருமானமும் காட்டப்படும்), ஆகஸ்ட் 2011 முதல் ஐபிஎஸ் அதிகாரியாக நான் பொறுப்பேற்றது முதல் ராஜினாமா செய்யும் வரை ஈட்டிய வருமானம் , எனக்குச் சொந்தமான அசையும் அசையா சொத்துகளின் விவரங்கள், என்னிடம் உள்ள ஆடு மற்றும் மாடுகளின் எண்ணிக்கை என அனைத்தையுமே விரைவில் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களை போற்றும் நம் தமிழக மக்களைச் சந்திப்பதற்காக மாநிலம் முழுவதும் நான் மேற்கொள்ளவிருக்கும் பாதயாத்திரையின் முதல் நாளில் வெளியிடுவேன்.

அன்றைய தினம் நான் பத்திரிக்கையாளர்களை சந்தித்து மேல் குறிப்பிட்ட அனைத்து விபரங்களையும் பொதுவெளியில் வெளியிட உள்ளேன்.

நான் அறிவித்ததை விட ஒரு பைசா அதிகமான சொத்தை யாரேனும் கண்டுபிடித்தால், எனது சொத்துக்கள் அனைத்தையும் அரசிடம் ஒப்படைக்க நான் தயார்.

இதே போல வருமான விவரங்களையும் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் விவரங்களையும் திமுகவினர் மற்றும் திமுக தலைவர்கள் தமிழக சகோதர சகோதரிகளின் முன்னிலையில் வெளியிட தயாரா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − thirteen =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.