அதிமுக தலைமை அலுவலகத்தில் மூத்த நிர்வாகிகள் திடீர் ஆலோசனை..

Published:

அதிமுக தலைமை அலுவலகத்தில் மூத்த நிர்வாகிகள் திடீர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.தி.மு.க.வின் ‘பி’ டீம் என்பதை ஓ.பி.எஸ். நிரூபித்துள்ளதாக ஜெயக்குமார் கருத்து தெரிவித்து உள்ளார்.

images 64 1 - 2026

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுவதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்தார். ஆனால் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர் செல்வம் ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் தாங்கள் போட்டியிடுவதாக தெரிவித்தார்.

மேலும், இடைத்தேர்தல் தொடர்பாக ஜி.கே.வாசனை சந்தித்தன நிலையில் இன்று மலை பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை ஓ.பன்னீர் செல்லம் சந்திக்க உள்ளார்.

இந்த நிலையில் அதிமுக மூத்த நிர்வாகிகள் தலைமை அலுவலகத்தில் திடீரென முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி. முனுசாமி, ஜெயக்குமார், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் பங்கேற்றுள்ளனர். இந்த ஆலோசனையின் முடிவில் கமலாலயம் சென்று பா.ஜ.க முக்கிய தலைவர்களை சந்திக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

ALSO READ:  தமிழின் மாண்பை இழிவுபடுத்திய நிதி அமைச்சர் மரியவில்சனுக்கு இந்து முன்னணி கண்டனம்!

இந்த நிலையில் தி.மு.க.வின் ‘பி’ டீம் என்பதை ஓ.பி.எஸ். நிரூபித்துள்ளார் என ஜெயக்குமார் கருத்து தெரிவித்து உள்ளார். அ.தி.மு.க. வேட்பாளரை எதிர்த்து போட்டியிட போவதாக அறிவித்து இருப்பதன் மூலம் அவர் தி.மு.க.வின் ‘பி.டீம்’ என்பதை நிரூபித்து விட்டார். என ஜெயக்குமார் கூறியுள்ளார்.ஓ.பன்னீர்செல்வத்தை பொறுத்தவரை அவர் தனி மனிதர்தான். ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடப்போவதாக ஓ.பன்னீர்செல்வமும் அறிவித்துள்ளார். இதற்காக பா.ஜனதாவிடம் ஆதரவு கோரப்போவதாகவும் கூறினார். இதுதொடர்பாக டி.ஜெயக்குமார் கூறியதாவது:- ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுவதாக ஏற்கனவே கூறி வந்தோம். இப்போது அ.தி.மு.க. வேட்பாளரை எதிர்த்து போட்டியிட போவதாக அறிவித்து இருப்பதன் மூலம் அவர் தி.மு.க.வின் ‘பி.டீம்’ என்பதை நிரூபித்து விட்டார். அ.தி.மு.க.வை வீழ்த்தத்தான் அவர் வேட்பாளரை நிறுத்துகிறார். ஆனால் அவர் கனவில்கூட வீழ்த்த முடியாது.

ஓ.பன்னீர்செல்வத்தை பொறுத்தவரை அவர் தனி மனிதர்தான். தனி மனிதராக ஆதரவு கேட்பதற்கும் கட்சி ஆதரவு கேட்பதற்கும் வித்தியாசம் உள்ளது. தனி மனிதருக்கு எந்த கட்சியும் ஆதரவு அளிக்காது. நாங்கள் கூட்டணி தர்மப்படி இன்று மாலையில் பா.ஜனதா தலைவரை சந்தித்து ஆதரவு கேட்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

ALSO READ:  பழங்குடியினர் சலுகைகள் - யாருக்கு?
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img