December 6, 2025, 1:18 AM
26 C
Chennai

நீட் தேர்வில் ஆள் மாறாட்டத்திற்கு வித்திட்டவர் கமல்ஹாசன்: அமைச்சர் ஜெயக்குமார்!

jayakumar - 2025

வசூல் ராஜா MBBS படம் மூலம் நீட் தேர்வில் ஆள் மாறாட்டத்திற்கு வித்திட்டவர் கமல்ஹாசன் என்று கூறியுள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.

தற்போது தமிழகத்தை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கும் செய்திகளாக இருப்பவை, நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம் தான்! வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகள் ஒவ்வொரு நாளும் சாதாரண மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகின்றன.

கடுமையான சோதனைகளுக்கு பிறகே நீட் தேர்வுக்கு உள்ளே அனுமதிக்கின்றனர். ஆனால், அந்த சோதனைகளை ஊடகங்கள் மூலம் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாக்கி, அரசியல் செய்து வந்தனர் திமுக., அதிமுக., உள்ளிட்ட திராவிடக் கட்சிகள். காரணம், தமிழகத்தில் எம்.ஜி.ஆர். இருந்த போது மானாவாரியாக அதிமுக.,வினராலும், பின்னர் கருணாநிதி காலத்தில் திமுக.,வினராலும் தொடங்கப்பட்ட மருத்துவக்கல்லூரிகள் ஏராளம்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளைக் கொண்டு பணம் பார்த்து, அதனையே வாக்காளர்களுக்கு வாக்குக்கு ரூ. 200ம், ரூ. 500ம் ஆயிரமும் எனக் கொடுத்து, மீண்டும் பதவிக்கும் ஆட்சிக்கும் வந்துவிடுகின்றனர்.

கடந்த ஏழு ஆண்டுகளாக, மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சிப் பொறுப்பில் இல்லாவிட்டாலும் திமுக.,விடம் பணம் புகுந்து விளையாடுவது, மணல் கொள்ளை, டாஸ்மாக் நிறுவனத்துக்கு சரக்கு சப்ளை, பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகள், ரியல் எஸ்டேட் என்று முறைகேடான அத்தனை வழிகளிலும்தான்! இவற்றை தக்க வைத்துக் கொள்ளவே இந்தக் கட்சிகள் தாங்களே ஊடகங்களை நடத்திக் கொள்கின்றன. அதன் மூலம், ஓர் ஊடகம் மற்ற கட்சி ஊடகத்தின் முறைகேடுகளை வெளியில் சொல்லாமல் ஊடக தர்மத்தை பாதுகாத்து வருகின்றன.

இந்த நிலையில், நீட் தேர்வுக்கு பெரும் எதிர்ப்பு தெரிவித்தும், இன்றளவும் எதிர்ப்பை தெரிவித்தும் வரும் கட்சியினர் நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் அமுக்கியே வாசிக்கின்றனர். காரணம், இந்த முறைகேடுகளின் பின்னால் இருப்பவர்கள் அவர்களின் ஆட்களே என்கின்றனர் விமர்சனம் செய்பவர்கள்.

இந்த நிலையில், தற்போது நடைபெறும் நீட் ஆள் மாறாட்டத்திற்கு அன்றே வசூல் ராஜா MBBS என்கிற படம் மூலம் ஆலோசனை சொன்னவர் கமலஹாசன் என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

அடடா..! நல்லவேளை MGR படம் ஏதும் நினைவுக்கு வரலை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories