
இங்கிலாந்து, மாலத்தீவு பயணம் முடிந்து நேராக தாய்நாட்டில் பிரதமர் மோடி! தமிழகத்துக்கு இரண்டு நாள் பயணமாக வரும் பிரதமர் மோதி ஜியை தமிழகம் வரவேற்கிறது!
நேற்று மாலத்தீவில் பாரதத்தின் உதவியுடன் கட்டப்பட்ட பாதுகாப்பு அமைச்சக கட்டடத்தை மாலத்தீவு ஜனாதிபதி முய்சுவுடன் சேர்ந்து பாரதப் பிரதமர் திறந்து வைத்தார்!
‘கெட் அவுட் மோடி’ என்று ஆரம்பித்த முய்சு, சீனாவுக்கு சாமரம் வீசினார். பலனில்லை. துருக்கி எர்டோகனுக்கு சாமரம் வீசினார். பலனில்லை. முடிவில் ‘கெட் அவுட் மோடி’ என்ற வாசகம் ‘வெல்கம் மோடி’ என்று ஆகியிருக்கிறது.
ஏற்கனவே ருபே கார்டுகளை ஏற்று வந்த மாலத்தீவு இனி இந்திய ரூபாயை ஏற்கும் என்கிறார்கள். இலங்கையிலும் அதே நிலைமை – இந்திய ரூபாய்க்கு வரவேற்பு.
நேபாளத்தில் கோவிலுக்குள் மாற்று மத மைனோவை அனுமதிக்காததால், நேபாளத்துடனான உறவைக் கெடுத்த பிரதமர் ராஜீவ் காந்தி. இன்று நேபாளம் கம்யூனிச நாடு. பாக் – சீன ஆதரவு நாடு ஆகியிருக்கிறது. பாரதத்துக்கு தலைவலியாக இருக்கிறது நேபாளம்.
அதே வேளையில், தன்னை அவமதித்த மாலத்தீவு எந்த துவேஷம் பாராட்டாமல், அந்த நாட்டை சீன – பாக் – துருக்கி வலையில் விழாமல் மீண்டும் பாரதத்தின் பக்கம் கொண்டு வந்திருக்கிறார் மோதிஜி.
இதனிடையே பிரதமர் மோடியை தமிழகத்துக்கு வரவேற்று சமூகத் தளங்களில் கருத்துகள் பகிரப்படுகின்றன. அவற்றில் ஒன்று…
இன்று இங்கிலாந்து,மாலத்தீவு நாடுகளுக்கு சென்று சிறிதும் ஓய்வின்றி நாட்டு மக்களின் முன்னேற்றம் ஒன்றே குறிக்கோளாக கொண்டு கீழ் கண்ட திட்டங்களவு துவக்கி வைக்க/அடிக்கல் நாட்ட தமிழகம் வருகிறார் நமது மோடி ஜி அவர்கள்.
ரூ.4,800 கோடியில் மத்தியஅரசின்திட்டங்களை அறிவிக்கிறார்.
தூத்துக்குடி விமானநிலையம் ரூ.381 கோடி செலவில், சர்வதேச தரத்துக்கு இணையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 1,350 மீட்டர் நீளமுள்ள விமான ஓடுதளம் தற்போது 3,115 மீட்டர் நீளமுள்ள ஓடுதளமாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரே நேரத்தில் 5 விமானங்களை நிறுத்த முடியும். இன்று 26-ஆம் தேதி தூத்துக்குடி வருகை தரும் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள், விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்து வைத்து நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கவுள்ளார்.
இதுமட்டுமல்லாமல்,தமிழகத்தில், மத்திய அரசு சார்பில் நிறைவேற்றப்பட்டுள்ள பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைக்கவுள்ளார்.
தஞ்சாவூர்விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தில் 2-ம் கட்டமான சோழபுரம் முதல் சேத்தியாத்தோப்பு வரையில் ரூ.2,357 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலை திட்டம்
ரூ.200 கோடி மதிப்பில் ஆறுவழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ள தூத்துக்குடி துறைமுகச் சாலை
ரூ.99 கோடியில் மதுரை- போடிநாயக்கனூர் இடையே மின்மயமாக்கப்பட்டுள்ள ரயில் பாதை
ரூ.650 கோடியில் நாகர்கோவில் டவுன் – நாகர்கோவில் சந்திப்பு – கன்னியாகுமரி இடையிலான இரட்டை ரயில் பாதைரூ.283 கோடியில் ஆரல்வாய் மொழி – நாகர்கோவில் சந்திப்பு மற்றும் திருநெல்வேலி – மேலப்பாளையம் இடையிலான இரட்டை ரயில் பாதை என, சுமார் ரூ.4,800 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைக்கிறார்.
மாண்புமிகு பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கட்டப்பட்டு வரும் அலகு-3 மற்றும் அலகு 4-ல் உற்பத்தியாகும் மின்சாரத்தை வெளியேற்றுவதற்காக, ரூ.548 கோடியில் மின்பரிமாற்ற அமைப்புக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.
தமிழகத்திற்கு, தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு பல கோடி ரூபாய் திட்டங்களை அள்ளித் தரும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திரமோடி அவர்களுக்கு, தமிழகமக்கள் சார்பாக எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். அதற்காக தமிழகம் வரும் மாண்புமிகு பாரதப்பிரதமர் உலகம் போற்றும் உத்தமர் மோடிஜி அவர்களை தமிழக மக்கள் சார்பாக அன்புடன் வரவேற்கிறேன்.!





