தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

pm modi in madurai meet - 2026

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, அங்கிருந்து பிரதமர் நரேந்திர மோடி, இன்று மாலை 5:45க்கு திருச்சி வருகிறார். அங்கே, அரசு நிகழ்ச்சியில் ரூ. 5,650 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். மேலும், புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். 

நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில், ரூ.3,680 கோடி முதலீட்டில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம், குழாய் வழித்தடத்தில் இயற்கை எரிவாயு வினியோகம் செய்யும் திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். 

சென்னை அடுத்த மணலியில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ரூ.1,490 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள மசகு எண்ணெய் கலவை ஆலையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். 

பிரதமர் கிராமச் சாலைகள் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 370 கி.மீ., நீளமுள்ள 89 கிராமப்புற சாலைகளை திறந்து வைக்கிறார். 

தேசிய நெடுஞ்சாலை 81ல் கங்கைகொண்டசோழபுரம் அருகே பசுமை புறவழிச்சாலை அமைக்க அடிக்கல் நாட்டுகிறார்.

இரண்டு அம்ரித் பாரத் விரைவு ரயில்கள் இரு விரைவு ரயில்கள் மற்றும் ஒரு பயணியர் ரயில் சேவையையும், மோடி கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்.

மாலை, 6:30க்கு திருச்சியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுப் பேசுகிறார்.

இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ‘எக்ஸ்’ பதிவு:

திருச்சிராப்பள்ளியில், பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, சாலைகள், ரயில்வே மற்றும் பல துறைகளை உள்ளடக்கிய வளர்ச்சித் திட்டங்களை நாளை நான் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவுள்ளேன். நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் பிபிசிஎல் நகர எரிவாயு விநியோக வலையமைப்பிற்கான அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்ட முக்கியத்  திட்டங்களும் இதில் அடங்கும். 89 கிராம  சாலைத் திட்டங்களும் தொடங்கி வைக்கப்படும்.

திருச்சியில் நடக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில், கூட்டணி கட்சி தலைவர்களுடன் பங்கேற்கிறேன். தமிழகம் முழுதும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிகரித்து வரும் மக்கள் ஆதரவை பார்த்து, தி.மு.க., பதற்றம் அடைந்துள்ளது.  தி.மு.க.,வின் தவறான நிர்வாகமும், நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளும் குறித்து, தமிழக மக்கள் உணர்ந்து விட்டனர். அதனால் தான் நம்பிக்கையும், முன்னேற்றமும் உடைய தேசிய ஜனநாயக கூட்டணி திட்டங்களுடன் மக்கள் அதிகமாக இணைந்து வருகின்றனர். 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories