December 6, 2025, 1:51 AM
26 C
Chennai

நான் ‘பெரும் பக்தன்’ அத்திவரதரை தரிசிக்க வந்ததில் என்ன தவறு?!: வரிச்சியூர் செல்வம் கேள்வி!

varichurselvam - 2025

காஞ்சிபுரம், அத்திவரதர் தற்போது மக்களிடையே அதிகம் பேசப்பட்டு டிரெண்டாகி இருக்கும் வார்த்தைகள். இதுவரை அத்திவரதரை தரிசிக்காதவர்கள் கூட, அடுத்த மாத மத்திக்குள்ளாவது அத்திவரதரை தரிசித்துவிட மாட்டோமா என்ற ஏக்கத்தில் இருக்கிறார்கள்!

தமிழகத்தின் பெரும்பாலான மக்கள் அத்திவரதரை நோக்கிப் பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். இதனால் காஞ்சிபுரமே பக்தர்கள் கூட்டத்தால், திக்குமுக்காடி வருகிறது.

இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் விவிஐபிக்கள் செல்லும் வழியில் தனது சகாக்களுடன், அத்திவரதருக்கு நெருக்கமாகச் சென்று குடியரசுத் தலைவர் வந்த போது எங்கு அமர்ந்து சுவாமியை தரிசனம் செய்தாரோ அதே இடத்தில் அமர்ந்து தரிசனம் செய்து திரும்பியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

கழுத்தில் கிலோ கணக்கில் தங்க நகைகளுடன் தனக்கே உரிய தனித்துவ ஸ்டைலில் வந்த வரிச்சியூர் செல்வம், சுவாமியை தரிசித்து வெளியே வந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இது, கூட்டத்தில் சிக்கி அத்திவரதரை தரிசிக்கக் காத்திருந்தவர்களுக்கு கடுப்பை வரவழைத்தது.

ஒரு ரவுடி எப்படி விவிஐபி தரிசனம் செய்ய முடியும் என்று கேள்விகள் எழுந்தன. பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கும் ஒரு ரவுடிக்கு விஐபி தரிசனம் கிடைத்தது எப்படி என்ற கேள்வியும் எழுந்தது.

இது குறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த வரிச்சியூர் செல்வம், நான் அத்திவரதரை தரிசித்து விட்டு வந்ததை இவ்வளவு தூரம் பிரச்னை ஆக்குவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இப்படி எல்லாம் ஆகும் என்று தெரிந்திருந்தால் நான் இவ்வாறு வந்திருக்க மாட்டேன் என்று வருத்தத்துடன் கூறினார்.

varichurselam - 2025அவர் மேலும் கூறிய போது, நான் மிகப்பெரிய தெய்வ பக்தன். 36 ஆண்டுகள் ஐயப்பனை சென்று தரிசித்துள்ளேன். அப்படிப்பட்ட நான் அத்திவரதரை தரிசித்ததில் என்ன தப்பு. கடவுளை வணங்குவதால்தானே நானும் அத்திவரதரை தரிசித்துள்ளேன்!

இதோ என் கையில் பாருங்கள்… ஒரு விரலில் மயில் நகை. கழுத்தில் பிள்ளையார், அம்பிகை என்று டாலர்கள். நானும் பக்தன் தான். நான் விஐபி  பகுதியில் நின்று தரிசித்ததை கேள்வி கேட்கிறார்கள்…  நான் வைத்திருக்கும் ஒரு காரின் விலை ஒரு கோடி ரூபாய். இதுபோல் என்னிடம் 7 கார் இருக்கிறது. என்றால் நான் விஐபி இல்லையா?  என்று கேள்வி கேட்கிறார்.

அதற்காக  ஒரு ரவுடி போலவே அத்திவரதரை தரிசிக்கச் செல்ல வேண்டுமா என்று  செய்தியாளர் கேட்க,. அதற்கு பதிலளித்த வரிச்சியூர் செல்வம்,  என்ன நான் தாதாவா? எனக்கு 4 பேரன், பேத்திங்க இருக்கிறார்கள். நான் தாதாவெல்லாம் கிடையாது. இப்போது வெறும் தாத்தாதான்” என்கிறார் சிரித்தபடி.

பளிச்சென்று தெரிய வேண்டும் என்பதற்காகவே ஆடை அலங்காரத்தோடு இருப்பேன். கழுத்தில் வெறும் 250 சவரன் நகை மட்டும்தான் போட்டிருக்கிறேன். அதுவும் முருகன், அம்மன் சிலை டாலர்கள் கொண்ட செயின்தான் என்கிறார்…

சரி இதை எல்லாம் விடுங்கள். என்னைப் பற்றி பத்திரிகைகளில் தவறாக எழுதுகிறார்கள். ஆனால் நானே ஒரு பத்திரிகையின் துணை ஆசிரியர்தான் என்றார் வரிச்சியூர் செல்வம்..

ஒரு பக்தனான வரிச்சியூர் செல்வம்  அத்திவரதரை தரிசனம் செய்தது குறித்து யாரும் குற்றம் சொல்லவில்லை! ஆனால் தரிசனத்துக்கு அவர் எடுத்து கொண்ட முறையே சர்ச்சையை கிளப்பி உள்ளது.

லட்சக்கணக்கான பக்தா்கள் அத்திவரதரை காண அரை நொடி கிடைக்காதா என ஏங்கி தவித்து நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கும் வேளையில் வரிச்சியூர் செல்வம் தனது அடியாட்கள் புடைசூழ வந்து அரை மணி நேரமாக சாமி முன்னால் அமர்ந்து சிறப்பு தரிசனம் செய்ததுதான் பலரது விமர்சனத்தைக் கிளப்பியது. அதுவும் நாட்டின் உயர் பதவி வகிக்கும் குடியரசுத் தலைவருக்குக் கொடுக்கப்பட்ட மரியாதையைப் போல் ஒரு ரவுடிக்குக் கொடுப்பதா என்பதுதான் பலரது கேள்வியே!

குறிப்பாக தரிசனத்துக்காக திமுக விஐபிகளிடம் விவிஐபி பாஸ் வாங்கி வந்து மற்ற பக்தா்களை தரிசிக்கவிடாமல் சாமி தரிசனம் செய்ததுதான் சர்ச்சையான விஷயமாக, பக்தா்கள் உள்ளக் குமுறலுக்கு காரணமாகி உள்ளது.

1 COMMENT

  1. திருக்குவளை குடும்பம் தரிசிக்கும்போது, நான் தரிசிப்பதால் என்ன தவறு என்பதுதான் உள்ளர்த்தமோ ?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories