மனநோயாளிகள் ஆகிவிட்ட பாகிஸ்தான் அரசியல்வாதிகள்!

Reporters Diary அடடே... அப்படியா? இந்தியா உரத்த சிந்தனை உலகம்

06 June11 Pakistan - 2026

இந்தியாவின் உரிமைக்குரிய பகுதியான காஷ்மீர் விவகாரத்தில் இந்திய அரசு எடுத்த முடிவால் கடும் அதிர்ச்சி அடைந்துள்ள பாகிஸ்தான் அரசியல்வாதிகள் இப்போது மனநோயாளிகள் ஆகியுள்ளனர்.

பாகிஸ்தானின் தூண்டுதலில் அந்நாட்டுக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்திய அரசியல்வாதிகளும் தற்போது பொய்களைப் பேசிக் கொண்டு, நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் விதத்தில் இந்திய ராணுவம் மற்றும் அரசின் மீது புழுதி வாரித் தூற்றி வருகின்றனர்.

பாகிஸ்தான் தன்னை உலக நாடுகள் ஒதுக்கியுள்ள சுழலில், வெறுத்துப் போயுள்ளது. எனவே, உலக நாடுகள் இந்தியா குறித்து தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதற்காக, பெருமளவில் நிதி கொடுப்பதாக உறுதி அளித்து, இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகளை வளைத்துப் போட்டுள்ளது. அவர்களை தங்கள் நாட்டுக்கு ஆதரவாகவும், காஷ்மீர் இந்தியாவின் பகுதி அல்ல என்றும் பேச வைத்து வருகிறது.

இதனிடையே, பாகிஸ்தான் அரசியல்வாதிகள், குறிப்பாக அதிகாரிகள், தூதரக அதிகாரிகள், அரசு ஆட்சியில் உள்ள அரசியல்வாதிகள் கண்களை மூடிக் கொண்டு, இந்தியாவைக் குறிப்பிட்டு பொய்களை அவிழ்த்து விட்டு வருகின்றனர்.

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

பாகிஸ்தானின் தூதரக அதிகாரியாக இருந்த மலீஹா லோதி, 2017 செப்டம்பரில் போலியான புகைப்படங்களை ஐ.நா.வில் பகிர்ந்து, மூக்குடை பட்டார்.

இப்போது, அலிஹைதர் ஸைதி அதே வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இப்படி பொய்யான தகவல்களையும், புனையப்பட்ட புகைப்படங்களையும் பகிர்ந்து கொள்பவர்கள் யார் என்று பார்த்தால்… அவர்கள் பாகிஸ்தானின் தூதரக அதிகாரிகளாகவும், பாகிஸ்தானின் அமைச்சர்களாகவும் இருக்கின்றனர். உலகத்தில் இவ்வளவு கேவலமான ஒரு நாடு இருக்கவே இருக்காது; இவ்வளவு கேவலமான ஒரு பயங்கரவாத ரவுடி நாட்டுக்கு அதைவிடக் கேவலமான ஆதரவாளர்கள் இந்தியாவில் தவிர வேறு நாட்டில் இருக்கவே முடியாது என்று குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் இந்தியர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

ALSO READ:  அன்புத் தம்பி அண்ணா மலைக்கு...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.