images 7 1 - 2026

இன்று முதல் மயிலாடுதுறை வரை செல்லும் செங்கோட்டை – மதுரை ரயில் பயணிகள் ரயிலாக இயங்குமா?

Reporters Diary

செங்கோட்டை – மதுரை சிறப்பு விரைவு ரயிலானது இன்று முதல் மயிலாடுதுறை வரை செல்கிறது.இந்த ரயில் மீண்டும் பயணிகள் ரயிலாக குறைந்த கட்டணத்தில் பழையபடி 18பெட்டிகளுடன் இயங்கவேண்டும் என்பதை பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர் .

நாளை முதல் செங்கோட்டை – மதுரை சிறப்பு விரைவு ரயில் (வண்டி எண் 06662) மற்றும் திண்டுக்கல் – மயிலாடுதுறை விரைவு ரயில் (வண்டி எண்:16848) ஆகிய இரண்டு ரயில்களும் ஒன்றாக இணைக்கப்பட்டு ஒரே ரயிலாக செங்கோட்டை – மயிலாடுதுறை இடையே இயக்கப்பட உள்ளது.

அதன்படி செங்கோட்டை – மயிலாடுதுறை முன்பதிவற்ற விரைவு ரயிலானது (வண்டி எண் : 16848) செங்கோட்டையிலிருந்து காலை 7.00 மணிக்கு புறப்பட்டு மாலை 05.10 மணிக்கு மயிலாடுதுறையை சென்றடையும்.

இந்த ரயில் தென்காசி, கடையநல்லூர், பாம்பகோவில் சந்தை, சங்கரன் கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, திருத்தங்கல், விருதுநகர், கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், வையம்பட்டி, மணப்பாறை, திருச்சி, மஞ்சத்திடல், திருவெறும்பூர், பூதலூர், தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், ஆடுதுறை, குத்தாலம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

கொரோனாவுக்கு முந்தைய காலத்தில் இந்த ரயில் செங்கோட்டை மதுரை இடையே பயணிகள் ரயிலாக பயணிகள் ரயில் கட்டணத்தில் இயங்கியது.ஏழை எளியவர்களுக்கு மதுரை சென்று வர வசதியானதாக இருந்தது.16பெட்டிகளுடன் ரெகுலராக இயங்கிய இந்த ரயில் 18பெட்டிகளுடனும் இயக்கப்பட்டது.தற்போது இந்த ரயில் 12பொது பெட்டிகள் இரு சரக்கு பெட்டிகளும் சேர்த்து விரைவு ரயிலாக இயங்கும்.இந்த ரயிலை தொடர்ந்து பயணிகள் ரயிலாக பயணிகள் ரயில் கட்டணத்தில் பழையபடி இயக்க பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

images 7 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.