மோடி ஆவணப்படம் திரையிட முயற்சி: ஜாமியா மிலியா பல்கலை. மாணவர்கள் 4 பேர் கைது..

934049 - 2026

இந்தியா – மோடிக்கான கேள்விகள்’ என்ற பிபிசி ஆவணப்படம் திரையிடப்படும் என்று அறிவித்த ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் உள்ள இந்திய மாணவர்கள் கூட்டமைப்பு மாணவர்கள் சிலர் ‘இந்தியா – மோடிக்கான கேள்விகள்’ என்ற பிபிசி ஆவணப்படம் மீதான தடையை மீறி, பல்கலைக்கழகத்தில் திரையிடப்படும் என அறிவித்தனர். இந்த நிலையில், ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் 4 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழ துணை வேந்தர் நஜ்மா அக்தர் கூறும்போது, “வளாகத்தில் எந்த தொந்தரவும் ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை. பல்கலைக்கழகத்தில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேண விரும்புகிறோம். இங்குள்ள இந்திய மாணவர் கூட்டமைப்பின் (SFI) சிறிய குழு ஒன்று போராட்டத்தை நடத்துகின்றனர்.

மாணவர்களின் இந்த மாதிரியான நடவடிக்கைகளை நாங்கள் ஏற்கவில்லை. வளாகத்தில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் சீர்குலைப்பதே போராட்டக்காரர்களின் நோக்கம். நாங்கள் இதனை அனுமதிக்க மாட்டோம். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் குறித்து அறிக்கை கேட்டுள்ளோம். தேவைப்பட்டால் நடவடிக்கை எடுப்போம்” என்றார்.

கடந்த 2002-ம் ஆண்டில் குஜராத்தில் கலவரம் ஏற்பட்டபோது அந்த மாநில முதல்வராக நரேந்திர மோடி பதவி வகித்தார். இந்தக் கலவரம் தொடர்பாக இங்கிலாந்து அரசு ஊடகமான பிபிசி கடந்த 17-ம் தேதி ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது. “இந்தியா – மோடிக்கான கேள்விகள்” என்ற தலைப்பிலான அந்த ஆவணப்படத்தில் பிரதமர் மோடி குறித்து எதிர்மறையான கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

பிபிசியின் ஆவணப்படத்தை யூடியூப், ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட மத்திய அரசு கடந்த 18-ம் தேதி தடை விதித்தது. என்றாலும், பிபிசி ஆவண படம் தொடர்பான கருத்துகள் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வருகின்றன. அதோடு பிபிசி ஆவணப்படத்துக்கான இணைப்பும் சமூக வலைதளங்களில் பதிவிடப்படுகிறது. இத்தகைய சமூக வலைதளப் பதிவுகளுக்கும் மத்திய அரசு தடை விதித்தது.

இந்த நிலையில் இந்த ஆவணப்படம் பல்கலைகழக வளாகத்தில் திரையிடப்படும் என ஜேஎன்யூ, ஜாமியா மிலியா இஸ்லாமியா போன்ற பல்கலைக்கழக மாணவர்கள் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories