திரையுலகில் அடுத்தடுத்து நிகழும் பிரபலங்கள் மரணம்..

IMG 20230205 WA0047 - 2026

தமிழ்‌ திரையுலகில் அடுத்தடுத்து நிகழும் பிரபலங்கள் மரணம் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளிக்கிழமை இரண்டு கலைஞர்கள் மறைந்தார்கள். சனிக்கிழமை ஒருவர்.தொடர்ந்து இன்றும் ஒருவர் மறைவுசெய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கு திரையுலகை உச்சத்திற்கு கொண்டு சென்றவர்  இயக்குனர் நடிகர் கே.விஸ்வநாத். சங்கராபரணம் படம் மூலம் பல சாதனைகள் நிகழ்த்தியவர். கமலஹாசனின் நடனத்திறமையை சலங்கை ஒலியில் முழுமையாக கலை நயம் மாறாமல் வெளிப்படுத்தியவர். தாதாசாகேப் பால்கே விருது பெற்றவர். தமிழில் நடிகராகவும் முத்திரை பதித்தவர்  கே.விஸ்வநாத்.

இவர் மறைவு செய்தி பெரிய சோகத்தை ஏற்படுத்தி வந்த நிலையில் நெல்லை சீமையில் பிரபலமான நடிகர் ஒருவர் மரணம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியது.

nellai thangaraj edi - 2026

பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த நலிவடைந்த கிராமியக் கலைஞரான  நெல்லை தங்கராஜ் மை அவ்வளவு சீக்கிரம் மறந்து விடமுடியாது.படத்தில் இவரை காட்சிப்படுத்திய கால அளவு குறைவு என்றாலும் நெஞ்சை பதரவைக்கும் அளவுக்கு அவரது நடிப்பு எதார்த்தமாக இருந்தது.அவரது நடிப்பு ஒரு நல்ல அறிமுகமாக அமைந்தது. தமுஎகச அமைப்பு “நாட்டுப்புற கலைச்சுடர்” விருதை அவருக்கு வழங்க முடிவு செய்த போது தகவல் தெரிவிக்க அவரிடம் அலைபேசி கூட இல்லை. நேரில் சென்ற தமுஎகச மாநிலத் தலைவர்களில் ஒருவரான  நாறும்பூநாதன் அவர் வீட்டிற்குச் சென்ற போது மின்சார வசதியில்லா குடிசை வீடு என்ற நிலையை அறிந்தார்.

நெல்லை மாவட்ட ஆட்சியரின் உதவியோடு தமுஎகச முயற்சியில் அவருக்கு ஒரு வீடு கட்டித்தரப்பட்டது. பாவம் ஒரு வருடம் கூட அவரால் அந்த வசந்தத்தை அனுபவிக்க முடியவில்லை. வெள்ளிக்கிழமை மறைந்து விட்டார்.

நள்ளிரவிலும் தூக்கம் வராமல் தவித்த விழிகளை தன் வசீகரிக்கும் குரலால்  தாலாட்டு பாடி துயிலுரங்க வைத்தவர் பின்னணி பாடகி வாணி ஜெயராம் . என  அவருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்ட போது எழுதி பத்து நாட்கள் கூட முடியவில்லை. அந்த விருதைப் பெறுவதற்குள் அவர் மறைந்து விட்டார்.

இந்த மூவரின் மறைவு நெஞ்சை விட்டு நீங்காத நிலையில் இன்று பிரபல திரைப்பட இயக்குனரும், நகைச்சுவை நடிகருமான டி.பி.கஜேந்திரன்(68) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள இல்லத்தில் இன்று காலமானார்.

02 1443785452 gajendiran46 - 2026

இயக்குநராக மட்டுமின்றி 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடிகராகவும் முத்திரை பதித்தவர் டி.பி.கஜேந்திரன். பட்ஜெட் பத்மநாபன், மிடில் கிளாஸ் மாதவன், உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியுள்ளார்.

நேற்று முன்தினம் இருவர் நேற்று  பாடகி வாணிஜெயராம் உயிரிழந்த நிலையில் இன்று இயக்குனர் டி.பி.கஜேந்திரன் மறைவால் திரையுலகினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories