விழுப்புரம் 25 ஆசிரமவாசிகளை மீட்டு போலீசார் அதிரடி நடவடிக்கை

images 2023 02 16T133602.582 - 2026

விழுப்புரம் அன்புஜோதி ஆசிரம விவகாரத்தில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் மேலும் ஒரு ஆசிரமத்தில் வீட்டில் சிறைவைக்கப்பட்டு இருந்த 12 பெண்கள் உள்பட 25 ஆசிரமவாசிகளை மீட்டு போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள குண்டலப்புலியூரில் ‘அன்புஜோதி’ என்ற பெயரில் செயல்பட்டு வந்த ஆதரவற்றோர் ஆசிரமத்தில் போதை மருந்து கொடுத்து பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவையை சேர்ந்த ஜூபின்பேபி தனது மனைவி மரியாவுடன் இணைந்து 17 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஆசிரமத்தை தொடங்கி நடத்தி வந்துள்ளார். இங்கு வெளி மாநிலங்களை சேர்ந்த ஆதரவற்ற பெண்கள், வெளிமாவட்டங்களை சேர்ந்த பெண்கள் என சுமார் 150 பேர் தங்கி இருந்துள்ளனர்.

இவர்களில் ஒடிசாவை சேர்ந்த பெண் ஒருவர் தன்னை சிறைவைத்து சங்கிலியால் கட்டிவிட்டு ஆசிரம நிர்வாகியான ஜூபின் பேபி கற்பழித்து விட்டதாக கூறி இருக்கும் குற்றச்சாட்டுக்கு பிறகே ஆசிரமம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது.

இந்த ஆசிரமத்தில் இருந்து ஜாபருல்லா என்கிற பெண் மாயமாகி இருப்பதும் தெரியவந்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு ஆசிரமத்தில் சேர்த்துவிடப்பட்ட ஜாபருல்லா பெங்களூரில் இருப்பதாக ஆசிரம நிர்வாகிகள் தெரிவித்த நிலையில் அவரது உறவினர்கள் அங்கு சென்று பார்த்தனர். ஆனால் பெங்களூரிலும் அவர் இல்லை என்பதும் இவரைப்போல சுமார் 50 பேர் வரையில் காணாமல் போயிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுவும் அன்பு ஜோதி ஆசிரம விவகாரத்தில் புதிய பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது.

இதைத்தொடர்ந்து அன்பு ஜோதி ஆசிரமத்துக்கு சீல் வைக்கப்பட்டு நிர்வாகி ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அன்பு ஜோதி ஆசிரம விவகாரத்தில் மேலும் ஒரு திருப்பமாக இன்னொரு வீடும் சித்ரவதை கூடமாக செயல்பட்டு வந்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

தமிழகம்-புதுவை எல்லையையொட்டிய பகுதியான கோட்டக்குப்பம் அருகே உள்ள சின்ன முதலியார் சாவடியில் அன்பு ஜோதி ஆசிரமத்தின் இன்னொரு கிளை போல இந்த இல்லம் செயல்பட்டு வந்துள்ளது. இதுபற்றி தகவல் கிடைத்தும் அங்கு விரைந்து சென்ற போலீசார் வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அந்த வீட்டில் 12 பெண்கள் உள்பட 25 பேர் இருந்தனர். இவர்கள் அனைவரையும் போலீசாருடன் இணைந்து மாவட்ட வருவாய் அதிகாரிகள் மீட்டனர்.

அன்புஜோதி ஆசிரமத்தில் சிறைவைத்து சித்ரவதை செய்யப்பட்டவர்களை போன்றே இந்த வீட்டில் இருந்தவர்களும் சித்ரவதைக்குள்ளானது போன்ற தோற்றத்தில் உடல் மெலிந்து காணப்பட்டனர். இதையடுத்து மீட்கப்பட்ட 25 பேரும் உடனடியாக விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அனைவருக்கும் உடல்நிலை பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இதையடுத்து சகல வசதிகளுடன் கூடிய அரசு காப்பகங்களில் ஆதரவற்றோர் அனைவரையும் சேர்க்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அன்புஜோதி ஆசிரமத்தில் குரங்குகளை ஏவி விட்டு பெண்கள் சித்ரவதை செய்யப்பட்டதும், போதை மருந்து கொடுத்து பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து சின்ன முதலியார் சாவடியில் உள்ள வீட்டிலும் அதே போன்று பெண்கள் பாலியல்தொல்லைக்குட்படுத்தப்பட்டிருக்கலாம் என்கிற தகவலும் வெளியாகி உள்ளது.

இதனை உறுதிபடுத்தும் விதத்தில் ஆதரவற்ற ஆசிரம பெண்களுக்கும் மருத்துவ பரிசோதனையும் நடத்தப்பட்டு உள்ளது. அன்புஜோதி ஆசிரமம் கடந்த 17 ஆண்டுகளாக லைசென்ஸ் இல்லாமலேயே செயல்பட்டு வந்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட வருவாய் அதிகாரிகள் மற்றும் சமூகநலத்துறையை சேர்ந்த அதிகாரிகளிடமும் விளக்கம் கேட்க மாவட்ட நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆசிரமத்தில் முறையாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகளை எடுக்காமல் விட்டதே அங்கு முறைகேடுகள் மற்றும் பாலியல் அத்துமீறல்கள் நடைபெற காரணமாக அமைந்துள்ளது. இதுபற்றி உரிய விசாரணை நடத்த சம்பந்தப்பட்ட துறைகளின் உயர் அதிகாரிகளும் அறிவுறுத்தி உள்ளனர்.

அன்பு ஜோதி ஆசிரமத்தில் நடைபெற்றுள்ள அத்துமீறல்கள் தொடர்பாக முதலில் போலீசில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்துள்ளது. இந்த ஆசிரமத்தில் இருந்து மாயமான ஜாபருல்லாவை மீட்டு தரக்கோரி போலீசில் புகார் அளிக்கப்பட்டு அதில் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் தான் அந்த பெண்ணின் உறவினர்கள் ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தனர்.

இதன்பிறகே போலீசார் தலையிட்டு ஜாபருல்லாவை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுதொடர்பாக ஆசிரம நிர்வாகிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஜாபருல்லா பெங்களூர் ஆசிரமத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறி இருந்தனர். போலீஸ் விசாரணையில் அவர் அங்கும் இல்லை என்பது தெரியவந்தது. இதனால் ஜாபருல்லா எங்கே? என்கிற கேள்வி பலமாகவே எழுந்துள்ளது. இவரைப்போல மாயமான 50 பேரும் எங்கிருக்கிறார்கள்? என்பதும் மர்மமாகவே உள்ளது.

இச்சிக்கலுக்கு நடுவே, வானூர் அருகே புளிச்சபள்ளம் கிராமத்தில் உள்ள ஆதரவற்ற இறக்கும் தருவாயில் உள்ள அனாதைகளுக்கான கருணை இல்லத்தை நேற்று மாலை 5 மணி அளவில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலர் தங்கவேலு தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வில் 53 ஆண்கள், 39 பெண்கள் என மொத்தம் 92 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 50 பேர் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்பது வருவாய் துறையின் நேரடி விசாரணையில் தெரிய வந்தது. விசாரணையின் போது, கருணை இல்ல நிர்வாகிகள் அரசு அங்கீகாரம் பெற்றதற்கான ஆவணங்களை அதிகா ரிகளிடம் சமர்ப்பிக்கவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

அதிகாரிகள் அடுத்தடுத்து நடத்தப்படும் விசாரணையில் விழுப்புரம் ஆசிரம விவகாரத்தில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories