
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரியாபட்டியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் யாத்திரையை துவக்கி பொதுமக்களை சந்தித்தார்.
விருதுநகர் பாரதீய ஜனதா கட்சி அலுவலகத்தில் பாரதமாதா சிலையை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கையில் கருப்பு பேட்ச் உடன் பாதயாத்திரையில் பாஜகவினர் பங்கேற்றனர்.

தமிழகம் முழுவதும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக இன்று விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரியாபட்டியில் பத்திரபதிவு அலுவலகம் முன்பு பாதயாத்திரையை துவங்கி, பஜார், காவல்நிலையம், ஜெகஜீவன்ராம் தெரு, பள்ளத்துப்பட்டி, அரசு மருத்துவமனை, கள்ளிக்குடி சாலை, முக்குரோடு, பேருந்து நிலையம் வழியாக பாதயாத்திரை மேற்கொண்டார். அப்போது ஜெக ஜீவன் ராமன் காலணி குடியிருப்பு ஓலை பெட்டி பின்னும் வீட்டிற்கும் நாதஸ்வர கலைஞர் வீட்டிற்கும் சென்ற அண்ணாமலை தன்னை சந்திக்க வந்த பொது மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

மேலும் தன்னை சந்திக்க வந்த தாய்மார் ஒருவரின் குழந்தையை தூக்கி கையில் வைத்து கொஞ்சிப்புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேலும் அனைவருக்கும் வீடு திட்டத்தில் பிரதமர் குடியிருப்பு திடட்த்தில் கட்டப்பட்ட வீடுகளையும் பார்வையிட்டார்.
பாதயாத்திரையின் போது உள்ளூர் பத்திரிக்கையாளர்களை பாஜகவினர் வீடியோ எடுக்க அண்ணாமலை அருகில் அனுமதிக்காததால் பத்திரிகையாளர்கள் பாஜகவினரிடம் எங்களை அண்ணாமலை அருகில் அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தினர் அதனைத் தொடர்ந்து பாஜகவினர் பத்திரிக்கையாளர்களை அனுமதித்தனர். காரியாட்டியை தொடர்ந்து திருச்சுழி பூமிநாதர் கோவிலுக்கு சென்ற தரிசனம் மேற்கொண்டார்.

விருதுநகர் மாவட்டத்தை இந்தியாவின் பின்தங்கிய மாவட்டமாக மாற்றி விட்டார்கள் என விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரியாபட்டியில் அண்ணாமலை பேசினார்.
விருதுநகர் மாவட்டம் சாதாரண மாவட்டம் கிடையாது காமராஜர் ஐயா பிறந்த ஊர். மக்கள் தலைவராக ஏழைகளின் நாயகனாக மாபெரும் முதலமைச்சராக மாமனிதராக இருந்தவர் காமராஜர்.
தமிழகத்திலேயே மிகவும் அடிப்படையில் பின் தங்கிய தொகுதி திருச்சுழி. இருந்த போதும் தமிழகத்தில் பொன் சிரிப்போடு எப்போதும் இருக்கக் கூடிய ஊர் திருச்சுழி. பிரதமர் மோடி நேரடியாக கண்காணிக்க கூடிய 112 மாவட்டங்களில் இரண்டு மாவட்டம் தமிழகத்தைச் சார்ந்தது ஒன்று இராமநாதபுரம் மற்றொன்று விருதுநகர். மேற்கண்ட இரண்டு மாவட்டங்களும் தமிழகத்தில் பின்தங்கி உள்ளது.
இதனால் மத்திய அரசின் கண்காணிப்பில் நேரடியாக இந்த இரண்டு மாவட்டங்களும் இருக்கிறது. என்னுடைய கோபம் அரசியல்வாதிகள் உங்களை பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பது தான். மக்களுடைய நேர்மையை, அன்பை, உண்மையை அரசியல்வாதிகள் பயன்படுத்திக் ஓட்டை மட்டும் வாங்கி உங்களுடைய பகுதியை பின்தங்கிய பகுதியாக வைத்திருக்கிறார்கள் என்கின்ற நியாயமான கோபம் எனக்கு வருகிறது. ஒரே ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இந்த தொகுதி இருக்கிறது. தங்கம் தென்னரசு நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் இரண்டு முறை மந்திரியாகவும், தங்கம் தென்னரசின் உடன் பிறந்த சகோதரி தென் சென்னை பாராளுமன்ற உறுப்பினராக இருக்கிறார்.
திருச்சுழி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்பது அறவே இல்லாமல் இருக்கிறது. விருதுநகர் மாவட்டத்தில் 89 சதவீதம் ஆஸ்பத்திரியிலும் 11% வீட்டிலும் பிரசவம் நடந்து வந்த நிலையில் மோடி அரசின் தலைமையில் மத்திய அரசு கண்காணித்த பிறகு 100% ஆஸ்பத்திரியில் பிரசவம் நடைபெறுகிறது. இதேபோல் 87 சதவீதம் பள்ளிகளில் மட்டுமே தான் பெண்களுக்கு கழிவறை இருந்தது ஆனால் தற்பொழுது நூற்றுக்கு நூறு சதவீதம் பள்ளிகளில் பெண்களுக்கு கழிவறை உள்ளது. கிராமப்புறங்களில் 25 சதவீதம் மட்டுமே சிமெண்ட் வீடுகள் இருந்த நிலையில் தற்போது 95 சதவீதம் சிமெண்ட் வீடுகள் இருக்கின்றன. மிகவும் பெருமைப்படக்கூடிய விஷயம் 112 பின்தங்கிய மாவட்டங்களில் விருதுநகர் மாவட்டம் முதன்மை மாவட்டமாக வந்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் குறையில்லை மக்களிடம் குறை இல்லை ஆட்சியாளர்களிடம் தான் குறை உள்ளது. பின்தங்கிய மாவட்டம் ஆன விருதுநகர் மாவட்டத்தை கையில் எடுத்து தற்போது முன்னேற்றம் அடைந்து முதன்மை மாவட்டமாக மோடி அரசு காட்டி இருக்கிறது. முதலமைச்சர் துபாய் சென்று 6000 கோடி ரூபாய் முதலீடு கொண்டு வந்திருக்கிறேன் என்றார் ஆனால் துபாயில் இருந்து இரண்டு ரூபாய் கூட கொண்டு வரவில்லை.
முதலமைச்சர் துபாய்க்கு ஏன் போனார் என்பதும் வேற கணக்கு.
மத்திய அரசு செயல்படும் திட்டங்களில் திராவிட மாடல் ஸ்டிக்கர் ஒட்டுகிறது. நான் சொல்லும் புள்ளி விவரங்கள் அனைத்தும் பொய் என்றும், மத்திய அரசு பணம் எதுவும் விருதுநகர் மாவட்டத்திற்கு கொடுக்கவில்லை என்றும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சொல்லட்டும் கர்மவீரர் காமராஜர் பிறந்த ஊர் இந்தியாவில் பின்தங்கிய 112 மாவட்டங்களில் ஒன்றாக இருக்கிறது என்றால் இதை விட சாபக்கேடு வேறு ஒன்றும் இல்லை. எப்படி இருந்த ஊரை எப்படி நாசம் செய்திருக்கிறார்கள் என்பதை பார்த்து காமராஜரின் சாபம் திமுக அரசியல் சும்மா விடாது.
திமுக அரசு மோடி கொண்டு வந்திருக்கக்கூடிய எய்ம்ஸ் பற்றி குறை சொல்கிறார்கள்.
எய்ம்ஸ் மருத்துவமனை 2026ல் மே மாதம் மக்கள் பயன்பாட்டுக்கு வரும். எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி ஏற்கனவே திறக்கப்பட்டு 120 பிள்ளைகள் ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி படித்து வருகிறார்கள். தமிழகத்தில் கல்வியில் முதன்மை மாவட்டமாக இருக்கக்கூடிய விருதுநகர் மாவட்டத்திற்கு எத்தனை ஆண்டுகளாக யாரும் மருத்துவக் கல்லூரி கொண்டு வர முயற்சிக்கவில்லை. விருதுநகரில் மருத்துவக் கல்லூரி கொண்டு வருவதற்கு மோடி தேவைப்பட்டார்.
விருதுநகரை பொறுத்தவரை இரண்டு அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் இவரிடம் மனு கொடுக்க சென்றாலே தலை மீது பேப்பரை கொண்டு அடிப்பார். மூன்று நாள் கழித்து செல்லமாக அடித்தேன் என்பார். அவர் வீட்டிற்கு யாராவது சென்றால் நம் கைகட்டி நிற்க வேண்டும். ஏனென்றால் இவர்களெல்லாம் அரசு குடும்பம் மன்னர் ஆட்சி என பேசினார்.





