ஊடகவியலாளர்களே உங்களின் ஆர்பாட்டம் எப்போது? – என்ற கேள்விக் கணையுடன் திருமுருகன் காந்திக்கு வக்காலத்து வாங்கி வளர்த்து விடும் ஊடகங்கள் குறித்த கேள்வி சமூக ஊடகங்களில் பலராலும் முன்வைக்கப் படுகிறது.
இது குறித்த ஒரு பதிவு….
நெறியாளர்கள் தமிழ் ஊடகத்தில் தனக்கு முட்டுக் கொடுத்து தூக்கி நிறுத்துவது போல் நினைத்துக் கொண்டு May 17, திருமுருகன் காந்தி News X சேனலில் தன் சண்டியர் தனத்தைக் காண்பித்தார். IPLக்கு ஆதரவாகவும், மத்திய மாநில அரசுகளை வரம்பு மீறி விமர்சிக்காமல் பேசிய 2கல்லூரி மாணவர்களை தடித்த வார்த்தைகளில் விமர்சித்த திருமுருகன் காந்தியை நாவடக்கத்துடன் பேசுமாறு News X நெறியாளர் வலியுறுத்தினார். இதில் ஆத்திரம் அடைந்த திருமுருகன் காந்தி ஏடாகூடமாகப் பேச நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். வெளியே வந்த நபர் தொலை பேசியில் தன் ஆதரவாளர்களை அழைக்க அந்த ஒரு சிலரும் SDPI, ம.க.இ.க போன்ற வெறியர்களை அழைக்க 10,15பேர் சென்னை CIT காலனியில்(கனிமொழி வீடு அருகே) உள்ள NEWS X அலுவலகத்தில் புகுந்து ரவுடித்தனம் செய்கின்றனர். உடனே காவல்துறை வரவழைக்கப்பட்டு பேச்சு வார்த்தை நடக்கிறது.
இப்போது என் கேள்வி இதுதான்.
நியாயமான முறையில் புதிய தலைமுறைக்கு நம் எதிர்ப்பை தெரிவித்த போது, இல்லாத பிரச்சினையை உருவாக்கி நம் இந்துமுன்னணி சகோதரர்கள் 20பேர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக ஊடகத்தை இந்து இயக்கங்கள் மிரட்டுகிறது என பொய் பிரச்சாரம் செய்து சுப.வீ, இதே மே17, நாம் தமிழர், இஸ்லாமிய இயக்கங்கள், கம்யூனிஸ்ட் என பல லெட்டர் பேட் இயக்கங்கள் வள்ளுவர் கோட்டத்தில் ஊடக சுதந்திரம் பார்க்கப்படுகிறது எனக் கூறி ஆர்பாட்டம் நடத்தினர்.
ஆனால் தற்போது திருமுருகன் காந்தி NEWS X அலுவலகத்திற்குள் அத்து மீறி நுழைந்து ரௌடி போல் மிரட்டுவதற்கு தமிழ் ஊடகங்கள் என்ன செய்யப் போகிறது.? எப்போது ஆர்பாட்டம் ஊடகவியலாளர்களே?
திருமுருகன் காந்தியின் பேஸ்புக் பதிவுகள்…
திருமுருகன் காந்தியின் அந்தப் பேச்சு (காணொளி)…