தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமா, இல்லை தேவாலய பாதிரியார் தேர்வாணையமா? என்று, தமிழக அரசுக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் சார்பில் வெளியான அறிக்கை:
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தது கிறிஸ்தவர்கள் போட்ட பிச்சை என்று ஜார்ஜ் பொன்னையா என்ற பாதிரியார் பொதுவெளியில் பேசியது நாமெல்லாம் அறிந்ததே.! அதற்கு திமுகவோ முதல்வரோ எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மாறாக கடந்த 2021-ஆம் ஆண்டு CSI மிஷனரியின் 75 வது ஆண்டுவிழாவில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் திமுக ஆட்சிக்கு வந்தது கிறிஸ்தவர்களால்தான் என்று பேசினார். அதுமட்டுமில்லாமல் முதல்வரும் திமுக தலைவர்களும் இந்த அரசு சிறுபான்மையினருக்கான அரசு என்று மேடைதோறும் கட்டியம் கூறிவந்தார்கள்.
அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவராக கிறிஸ்தவரான லியோனி நியமிக்கபட்டார், தமிழக அரசு தேர்வாணைய உறுப்பினராக கத்தோலிக்க பாதிரியார் A.மரியசூசை என்பவர் உறுப்பினராக நியமிக்கபட்டார், பாதிரியார் நியமனத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் வேறு கிறிஸ்தவர்கள் நியமிக்கபட்டதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில் கடந்த 09/06/2024 அன்று Group-4 பணியிடங்களூக்கான தேர்வை தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தியது. இந்த தேர்வுக்கான வினாத்தாளில் முதல் கேள்வியே ஏசு கிறிஸ்துவின் வருகையை அறிவித்த முன்னோடி யார் என்று கேட்கப்பட்டுள்ளது. இந்த வினாவிற்கு கிறிஸ்தவர்கள் மட்டுமே சரியான விடையை தேர்வு செய்திருப்பார்கள், அதன்மூலம் இந்து இளைஞர்கள் வேலை வாய்ப்பை பறிக்கும் நோக்கத்தில் வினாத்தாள் வடிவமைக்கபட்டு உள்ளதோ என எண்ணத் தோன்றுகிறது .
Group-4 தேர்வு தமிழக அரசின் கடைநிலை ஊழியர்களை தேர்வு செய்யும் தேர்வாகும் அதற்கும் ஏசுவின் வருகையை அறிவித்தவருக்கும் என்ன தொடர்பு இருக்கிறது. குறிப்பாக இந்த வினா தேர்வின் தமிழ் மொழி பகுதியில் இருந்து கேட்கப்பட்டுள்ளது, தமிழ் மொழி சார்ந்து சங்க இலக்கியம் முதலாக பதிணென் மேல் கணக்கு நூல்கள் பதினென் கீழ் கணக்கு நூல்கள் ஐம்பெரும் காப்பியங்கள், எட்டுதொகை, புறநானூறு, அகநானூறு, பன்னிரு திருமுறை, நாலாயிர திவ்ய பிரபந்தம் என ஆயிரமாயிரம் பண்டைய நூல்கள் தமிழ் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் அவற்றையெல்லாம் பாட்த்திட்டத்தில் இருந்து புறந்தள்ளி விட்டு அதிகமான அளவில் கிறிஸ்தவ மதம் சார்ந்த பாடங்கள் மற்றும் திராவிட புரட்டுகளை பாடங்களாக சேர்க்கப்பட்டு வரலாற்றை அழிக்கும் வேலையை தமிழக அரசு செய்துவருகிறது. அதன் தொடர்ச்சியாக அரசு பணியாளர் தேர்வில் இவ்வாறான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இந்த மண்ணுக்கும் மொழிக்கும் சம்பந்தமில்லாத கிறிஸ்தவ மதம் பற்றி அரசு பணியாளர் போட்டி தேர்வில் கேள்வி எழுப்ப வேண்டிய அவசியம் என்ன? எனவே தமிழக அரசே மத மாற்றத்தினை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது என்றே கருத வேண்டியுள்ளது. கிறிஸ்தவ மிஷனரிகள் வீதி தோறும் மதமாற்ற பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழர் பண்பாடு, வாழ்வியல் முறை மற்றும் வழிபாட்டு முறையை அழிக்கும் வகையிலும் மதமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையிலும் தமிழக அரசே நூதன மத திணிப்பில் ஈடுபடுவதும், அரசு பணியாளர் தேர்வுக்கான போட்டி தேர்வில் ஏசு கிறிஸ்துவின் வருகை என்று கேள்வி எழுப்புவதும் கடும் கண்டனத்திற்குரியது .
தமிழக அரசு அரசு பணியாளர்களை தேர்வு செய்ய தேர்வை நடத்தியதா? அல்லது மதபிரச்சாரத்துக்கு பாதிரியார்களை தேர்வு செய்ய தேர்வு நடத்தியதா? என்று ஐயமுறும் வகையில் வினாத்தாள் அமைக்கபட்டிருப்பது கொடுமையிலும் கொடுமை.
தமிழக அரசு பணியில் சேர்வதற்கான போட்டி தேர்வுகளுக்கு தயார் செய்ய பல தனியார் பயிற்சி மையங்களில் இணைந்து இளைஞர்கள் முன் தயாரிப்பு செய்துவருகிறார்கள். இந்நிலையில் சமீபத்திய வினாத்தாளை பார்க்கும்போது இனி தமிழக அரசு பணியில் சேர இந்து இளைஞர்கள் பைபிள் வகுப்புக்கும் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்படுமோ என்று அச்சமும் ஏற்படாமல் இல்லை.
எனவே திமுக அரசு சிறுபான்மை வாக்கு வங்கி அரசியலுக்காக தமிழர்களின் அடையாளத்தை , பண்பாட்டை அழிக்கும் விதமாக செயல்படக் கூடாது என்றும் வினாத்தாள் மதமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் தயாரிக்க கூடாது என்றும் நடத்தப்பட்ட தேர்வை ரத்து செய்து மறு தேர்வு நடத்தவேண்டும் என்றும் இந்து முன்னணி பேரியக்கம் கேட்டுகொள்கிறது!
மதுரை அருகே, சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு காப்பு கட்டினர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் அமாவாசைக்குப் பின்னர் வரும் திங்கட்கிழமை திருவிழா கொடியேற்றம் நடந்து. 17 நாட்கள் திருவிழா நடைபெறும்.
இதையொட்டி தினசரி ஒவ்வொரு மண்டகப் படியுடன் திருவிழா விமர்சையாக நடைபெறும். இதேபோல் இந்த ஆண்டு நேற்று இரவு அர்ச்சகர் சண்முகவேல் திருவிழா கொடியேற்ற பொருட்களுடன் மேளதாளத்துடன் நான்கு ரத வீதிகளில் வலம் வந்து கோவில் வளாகத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் திருவிழா கொடியேற்றும் விழா நடந்து.சிறப்பு பூஜை நடைபெற்றது.
திருவிழா கொடியேற்ற உபயதார் சிங்கம் என்ற மந்தையன் சேர்வை மகன் அழகப்பன் மற்றும்குடும்பத்தார் அனைவருக்கும் பிரசாதம் வழங்கினார்கள்.
கொடியேற்ற விழாவில் பேரூராட்சி தலைவர் ஜெயராமன் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் வக்கீல்சத்திய பிரகாஷ் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கோவில் செயல்அலுவலர் இளமதி, கோவில் பணியாளர்கள் பூபதி,கவிதா,வசந்த், பெருமாள் ஆகியோர் திருவிழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டி தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
சுகாதாரப்பணி,குடிநீர்வசதி, கூடுதல் தெருவிளக்கு ஏற்பாடுகள் சோழவந்தான் பேரூராட்சி சார்பில் செய்திருந்தனர்.
கொடியேற்றத்தை தொடர்ந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பால்குடம், அக்னிச்சட்டி,பூக்குழி இறங்குதல் மற்றும் நேர்த்திக்கடன் செலுத்துபவர்கள் காப்பு கட்டினார்கள்.
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, தென்கரையில் டி.ஆர். மகாலிங்கத்தின் நூற்றாண்டு விழா ஜூன் 16ல் கொண்டாடப்பட உள்ளது .
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரையை சேர்ந்தவர் டி.ஆர்.மகாலிங்கம் இவர் ஜூன் 16ஆம் தேதி 1924-ல் பிறந்து 1978ஆம் ஆண்டுவரை வாழ்ந்தவர். இவர் இயல் இசை நாடக துறையில் கலைமாமணி விருது பெற்றவர். பல்வேறு படங்களில் பாடல், தயாரிப்பாளராகவும், நடிகராகவும், இசையமைப்பாளராகவும் விளங்கியவர்.
1940 – 1950களில் பிரபலமாக இருந்தவர் தமிழ்த் திரைப்பட நடிகர், பாடகர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர் டி.ஆர்.மகாலிங்கம். உச்சத் தொனியில் பாடும் திறமை பெற்ற இவர் நடித்த காதல் மற்றும் பக்திப் பாடல்கள் இவருக்குப் பெயர் வாங்கித் தந்தன.
39 படங்களில் நடத்த இவர் தனது 5 வயது முதல் நாடக மேடை ஏறி தனது பாடல் மூலம் பல்வேறு புகழடைந்தார். இவரது மேடை நாடக பாடலின் மெய்சிலிர்த்த ஏவி மெய்யப்பச் செட்டியார் டி.ஆர்.மகாலிங்கத்திற்கு 13-வது வயதில் பட வாய்ப்பு வழங்கினார். அதன் பிறகு, திரைத்துறையில், பல்வேறு சாதனைகள் புரிந்தார்.
முன்னாள் முதல்வர்கள் காமராஜர், கலைஞர், எம்ஜிஆர் ஆகியோருடன் நன்கு இணக்கமாக இருந்தவர். 1962-ல் சோழவந்தானில் வீடு கட்டி வாழ்ந்து வந்தவர் தற்போது அவருடைய நூறாவது பிறந்த நாள் வருகின்ற ஜூன் 16ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த நிலையில், அவரது நூற்றாண்டை கொண்டாடும் விதமாக, அவர் திரைத்துறையில் பங்காற்றி சாதனை புரிந்த விருதுகள் புகைப்படங்கள் ஆகியவற்றை அவர் வாழ்ந்து மறைந்த அவரது வீட்டில் படங்களாக சேகரித்து அவரது பேரன் ராஜேஷ் மகாலிங்கம் கண்காட்சிக்கு வைக்க உள்ளார்.
இந்த நிகழ்ச்சி ஜூன் 15, 16 ஆகிய தேதிகளில் மதுரை சோழவந்தான் பகுதியில் உள்ள தென்கரையில் அவர் வாழ்ந்து மறைந்த டி ஆர் மகாலிங்கத்தின் வீட்டில் கண்காட்சிக்கு வைக்கப்பட உள்ளது. அதில், திரைப்படத் துறையைச் சார்ந்த பல்வேறு கலைஞர்கள் வருகை தர உள்ளனர். மேலும், அவரது திருவுருவ சிலை திறப்பு விழா நடைபெற்று கண்காட்சிக்கு வைக்கப்படும் என, அவரது பேரன் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை ஆட்டங்கள் – லீக் சுற்று – 05 ஜூன் முதல் 10 ஜூன் வரை
முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
அட்டவணை
(10 ஜூன் வரை)
குரூப் A
குரூப் B
குரூப் C
குரூப் D
இந்தியா – 4 அமெரிக்கா ஐக்கிய நாடுகள் – 4 கனடா – 2 பாகிஸ்தான், அயர்லாந்து 0
ஸ்காட்லாந்து 5 ஆஸ்திரேலியா 4 நமீபியா 2 இங்கிலாந்து 1 ஓமன் 0
ஆப்கானிஸ்தான் 4 மேற்கு இந்தியத் தீவுகள் 4 உகாண்டா 2 பாபுவா நியூகினியா 0 நியூசிலாந்து,
தென் ஆப்பிரிக்கா 4 வங்கதேசம் 2 நெதர்லாந்து 2 நேபாளம் 0 இலங்கை 0
05 ஜூன் முதல் 10 ஜூன் வரை நடந்த லீக் சுற்று டி20 உலகக் கோப்பை ஆட்டங்களில் சில எதிர்பாராத முடிவுகள் கிடைத்துள்ளன. பாகிஸ்தான் அணியை அமெரிக்க அணி வென்றதும் ஆஃப்பானிஸ்தான் அணி நியூசிலாந்து அணியை வென்றதும் இலங்கை அணியை வங்கதேச அணி வென்றதும் சில நம்ப முடியாத முடிவுகள். இனி ஒவ்வொரு ஆட்டமாகப் பார்க்கலாம்.
அம்ரிக்க அணி பாகிஸ்தான் அணியை வென்றது
06.06.2024 அன்று மேற்கு இந்தியத்தீவுகளில் உள்ள ப்ராவிடன்ஸ் மைதானத்தில் நடந்த பாப்புவா நியூ கினியா (19.1 ஓவரில் 77) உகாண்டா (18.2 ஓவரில் 78/7) அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் உகாண்டா அணி 3 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. அதே நாள் அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை (159/7) அமெரிக்க அணி (159/3) வென்றது. இது ஓர் அதிர்ச்சி முடிவு ஆகும்.
ஆட்டம் சூப்பர் ஓவர் வரை சென்றது. சூப்பர் ஓவரில் முதலில் ஆடிய அமெரிக்க அணி ஒரு அனுபவ அணியைப் போன்று தன்னுடைய ஓவரில் நன்றாக விளையாடியது. இந்த அணி சூப்பர் ஓவரில் 18 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தானின் அனுபவ பந்துவீச்சாளர் முகம்மது அமீர் ஓவரில் நிறைய வைட்கள் கொடுத்தார். அதற்குப் பின்னர் பாகிஸ்தான் ஆடியபோது அமெரிக்காவின் சௌரப் நேத்ரவால்கர் சிறப்பாக பந்துவீசி பாகிஸ்தான் அணியை ஒரு விக்கட் இழப்பிற்கு 13 ரன்கள் மட்டுமே எடுக்க வைத்தார். இதனால் சூப்பர் ஓவரில் அமெரிக்கா வென்றது. .
அதே நாள் பிரிட்ஜ்டவுன் நகரில் நடந்த மூன்றாவது ஆட்டத்தில் நமீபியா அணியை (155/9) ஸ்காட்லாந்து அணி (18.3 ஓவரில் 157/5) 5 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது
07.06.2024 அன்று நியூயார்க்கில் நடந்த ஆட்டத்தில் கனடா அணி (137/7) அயர்லாந்து அணியை (125/7) 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
அதே நாள் மே.இ. தீவுகளில் உள்ள ப்ராவிடன்ஸ் மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் (159/6) அணி நியூசிலாந்து அணியை (75) 84 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதுவும் ஒரு அதிர்ச்சி முடிவாகும். கடந்த உலகக் கோப்பை போட்டியில் இரண்டாவது இடம் பிடித்த அணி, கடந்த மூன்று உலகக் கோப்பைப் போட்டிகளில் அரையிறுதி வரை வந்த அணி, இந்த முறையும் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாகக் கருதப்படும் அணி ஆஃப்கானிஸ்தானிடம் தோற்றது ஒரு மிகப் பெரிய அதிர்ச்சி ஆகும்.
அதே நாளில் பகலிரவு ஆட்டமாக டல்லாஸில் நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை (124/9) அணியை வங்கதேச அணி (19 ஓவரில் 125/8) இரண்டு விக்கட் வித்தியாசத்தில் வென்றது.
08.06.2024 அன்று நியூயார்க்கில் நடைபெற்ற நெதர்லாந்து (103/9) அணியை தென் ஆப்பிரிக்கா அணி (18.5 ஓவரில் 106/6) 4 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இந்த ஆட்டம்கூட ஒரு திரில்லர் ரக ஆட்டம்தான். சென்ற முறை நெதர்லாந்து தென் ஆப்பிரிக்க அணியை வென்றிருந்தது. இந்த முறையும் அதற்கான வாய்ப்புகள் இருந்தன. ஆயினும் டேவிட் மில்லரின் நிதானமான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றியைப் பெற்றது.
அதே நாள் ப்ரிட்ஜ்டவுனில் நடபெற்ற ஆட்டதில் ஆஸ்திரேலியா அணி (201/7) அதன் வழமையான எதிரி அணியான இங்கிலாந்து அணியை (165/6) அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
அன்றைய தினம் மே.இ. தீவுகளில் உள்ள ப்ராவிடன்ஸ் மைதானத்தில் நடந்த மேற்கு இந்தியத் தீவுகள் (173/5) உகாண்டா (39) அணிகளுக்கிடையேயான ஆட்டத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் 134 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இந்தியா பாகிஸ்தான் ஆட்டம்
09.06.2024 அன்று நியூயார்க்கில் இந்தியா (119), பாகிஸ்தான் 113/7) அணிகளுக்கிடையேயான ஆட்டத்தில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இந்த ஆட்டம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. தொடக்கத்திலேயே மழையின் குறுக்கீட்டால் டாஸ் தாமதமாக போடப்பட்டது.
பின்னர் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீசியது. இந்தியாவின் தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா 13 ரன்களிலும், விராட் கோலி 4 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.
ரிஷப் பந்த் 40 ரன்களும், அக்சர் பட்டேல் 20 ரன்களும் எடுத்தனர். ஆனால் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்ததால் 19 ஓவர்களில் 119 ரன்களை மட்டும் எடுத்து இந்திய அணி ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் நசீம் ஷா 3 விக்கெட்டுகளையும், அமிர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி நிதானமாக ஆட்டத்தை தொடங்கியது.
ஆனாலும் சீரான இடைவெளியில் அந்த அணி விக்கெட்டுகளை இழந்தது. இறுதி கட்டத்தில் ரன்களை சேர்க்க முடியாமல் தடுமாறிய பாகிஸ்தான், 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த ஜஸ்பிரித் பும்ரா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
அன்றைய தினம் ஆண்டிகுவாவில் உள்ள நார்த் கிரௌண்ட் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் ஓமன் அணியை (150/7) ஸ்காட்லாந்து அணி (153/3) 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
10.06.2024 அன்று நியூயார்க் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் வங்கதேச (109/7) தென் ஆப்பிரிக்க (113/6) அணிகள் மோதிய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இதை அடுத்து ஜூன் 09 ஞாயிற்றுக் கிழமை இன்று மாலை 7.15 மணி அளவில் தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். இதை அடுத்து 7.25க்கு பிரதமர் மோடி கையெழுத்திட்டார்.
அவரைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். நரேந்திர மோடியின் மூன்றாவது அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் கூட்டணிக் கட்சியினர் உள்ளிட்ட அமைச்சர்களின் பட்டியல்…
மத்திய அமைச்சர்கள் பட்டியல்
1)பிரதமர் மோடி 2)ராஜ்நாத் சிங் 3)அமித்ஷா 4)நிதின் கட்கரி 5)ஜே.பி.நட்டா
6)சிவராஜ் சிங் செளகான் 7)நிர்மலா சீதாராமன் 8)ஜெய்சங்கர் 9)மனோகர்லால் கட்டார் 10)H.D.குமாரசாமி (கூட்டணி)
11)பியூஸ் கோயல் 12)தர்மேந்திர பிரதான் 13)ஜித்தன் ராம் மாஞ்சி (கூட்டணி) 14)ராஜீவ் ரஞ்சன் என்ற லாலன் சிங் (நிதிஷ்குமார் கட்சி) 15)சர்பானந்த சோனாவால் 16)டாக்டர் வீரேந்திர குமார் 17)ராம்மோகன் நாயுடு (தெலுங்குதேசம்) 18)பிரகலாத் வெங்கடேஷ் ஜோஷி 19)ஜுவல் ஓரம் 20)கிரிராஜ் சிங்
நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக ஜூன் 9 ஞாயிற்றுக் கிழமை இன்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
மக்களவைத் தேர்தலில் பாஜக., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களில் வென்று, கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது.
இதை அடுத்து, இன்று மாலை புதிய அமைச்சரவைக்கான பதவிப் பிரமாணம், தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது. இந்த விழாவில் தொடர்ந்து முன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி இன்று பதவியேற்றார். மிகச் சரியாக 7.25க்கு அவர் பதவி ஏற்பு உறுதிமொழியும் ரகசியக் காப்புப் பிரமாணமும் எடுத்துக் கொண்டு, கையெழுத்திட்டார்.
அவரைத் தொடர்ந்து ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, ஜே.பி.நட்டா, சிவராஜ் சிங் சவுகான், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், மனோஹர் லால், தர்மேந்திர பிரதான், ஹெச்டி குமாரசாமி, ஜிதன் ராம் மாஞ்சி உள்பட பாஜக.,வினர் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மத்திய அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.
அவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வெளிநாட்டு தலைவர்கள் உள்பட பாரதத்தின் முக்கியத் தலைவர்கள், கட்சியினர், பொதுமக்கள் என சுமார் 8000 பேர் கலந்து கொண்டுள்ளனர்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
இதையடுத்து இன்று மாலை 7.15 மணி அளவில் புதுதில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் மோடி மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்கிறார். பிரதமருடன் 30 அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக அமைச்சர் பதவிகள் பங்கீடு தொடர்பாக கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் அமித் ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோர் விடிய விடிய ஆலோசனை நடத்தினர்.
பிரதமர் பதவியேற்பினை முன்னிட்டு, தில்லியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதவியேற்பு விழாவில் 8000க்கும் அதிகமான அழைப்பாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெளிநாட்டுத் தலைவர்கள் வருகை
பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பல்வேறு நாட்டின் தலைவர்கள் வர உள்ளனர். வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத், செஷல்ஸ் அதிபர் வேவல் ராம்கலவன், பூடான் மன்னர் ஜிக்மே கேசர் வார்நாம்கியேல் உள்ளிட்ட அண்டை நாடுகளின் தலைவர்கள் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜவாஹர்லால் நேரு சாதனை சமன்!
பிரதமராக தொடா்ந்து 3-ஆவது முறையாக நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை இன்று பதவியேற்கவுள்ள நிலையில், அவர் முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் சாதனையை சமன் செய்துள்ளார்.
நாட்டில் தொடா்ந்து மூன்று முறை பிரதமரான முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் சாதனையை மோடி தற்போது ‘சமன்’ செய்கிறாா். மேலும், காங்கிரஸ் அல்லாத முதல் மூன்று முறை பிரதமர் என்ற சாதனையை மோடி படைத்துள்ளார்.
முன்னதாக, தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி புதிய எம்.பி.க்களின் கூட்டத்தில், கூட்டணியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக மோடி ஒருமனதாக தோ்வு செய்யப்பட்டாா். இதையடுத்து, பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா தலைமையில் கூட்டணிக் கட்சிகளின் தலைவா்கள், குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவை சந்தித்து, ஆட்சியமைக்க உரிமை கோரினா்.
அதன்பேரில், மத்தியில் ஆட்சியமைக்க மோடிக்கு குடியரசுத் தலைவா் அழைப்பு விடுத்தாா். பிரதமராக மோடியை நியமித்து, அதற்கான ஆணையை அவா் வழங்கினாா்.
இந்நிலையில், மோடி மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் பதவியேற்கும் விழா, குடியரசுத் தலைவா் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை இரவு 7.15 மணியளவில் நடைபெறவுள்ளது.
இதில், பிரதமராக தொடா்ந்து மூன்றாவது முறையாக மோடி பதவியேற்கவுள்ளாா். அவருக்கு குடியரசுத் தலைவா் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைப்பாா். இந்த விழாவில், நாடு முழுவதும் இருந்து பாஜக கூட்டணிக் கட்சிகளின் தலைவா்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வா்கள், முக்கியப் பிரமுகா்கள் உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா்.
அமைச்சரவை எப்படி?
மத்திய அரசில் கூட்டணிக் கட்சிகளுக்கான பிரதிநிதித்துவத்தை இறுதி செய்ய தெலுங்கு தேசம் தலைவா் சந்திரபாபு நாயுடு, ஐக்கிய ஜனதா தளம் தலைவா் நிதீஷ் குமாா், சிவசேனை தலைவா் ஏக்நாத் ஷிண்டே போன்ற தலைவா்களுடன் பாஜக மூத்த தலைவா்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், கட்சியின் தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா ஆகியோா் சனிக்கிழமை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனா்.
மிக முக்கியத்துவம் வாய்ந்த உள்துறை, நிதித் துறை, பாதுகாப்புத் துறை, வெளியுறவுத் துறை மற்றும் சித்தாந்த ரீதியில் முக்கியமான கலாசாரம், கல்வி ஆகிய துறைகளை பாஜக தன்வசம் வைத்துக் கொள்ளும் என்று தெரிகிறது. ரயில்வே உள்ளிட்ட துறைகள் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது.
பாஜக தரப்பில் அமித் ஷா, ராஜ்நாத் சிங் போன்ற முக்கியத் தலைவா்கள் மீண்டும் மத்திய அமைச்சா்களாக பதவியேற்பா்; அதேநேரம், மக்களவைத் தோ்தலில் வெற்றி பெற்ற முன்னாள் முதல்வா்கள் சிவராஜ் சிங் செளஹான், பசவராஜ் பொம்மை, மனோகா் லால் கட்டா், சா்வானந்த சோனோவால் உள்ளிட்டோா் பெயா்களும் பரிசீலிக்கப்படுவதாகத் தெரிகிறது.
தெலுங்கு தேசம் கட்சியின் ராம் மோகன் நாயுடு, ஐக்கிய ஜனதா தளத்தின் லாலன் சிங், சஞ்சய் ஜா, ராம்நாத் தாக்கூா், லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) தலைவா் சிராக் பாஸ்வான் உள்ளிட்டோரும் மத்திய அமைச்சராக வாய்ப்புள்ளது.
மோடி என்ற சாதனை வீரர்
பாஜக.,வின் முக்கியக் கொள்கைகள் மூன்று : காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து 370 ரத்து அயோத்தி ராமர் கோவில் பொது சிவில் சட்டம்
இதில் இரண்டு இரண்டு கால ஆட்சியில் படிப்படியாக நிறைவேற்றப்பட்டது. மூன்றாவதற்கு கடந்த ஆட்சியிலேயே வெள்ளோட்டம் பார்க்கப்பட்டு, தொடக்க வேலைகள் நடந்தன. ஆனால் இந்த முறை தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில், பாஜக.,வின் கொள்கையை நிறைவேற்ற கூட்டணிகள் ஒத்துழைக்குமா என்பது தெரியாத நிலையில், பொது சிவில் சட்டம் அமலாகுமா என்ற கேள்வி எழுகிறது. இதையும் செய்து முடித்தால், பிரதமர் மோடி நிறைநிலை எய்தியவராவார்.
இஸ்ரோவின் வீனஸ் ஆர்பிட்டர் மிஷன் (சுக்ராயன்) திட்டம் தயாராக உள்ளது மற்றும் அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது என்று, இஸ்ரோ தலைவர் எஸ். சோம்நாத் கூறியுள்ளார். உண்மையில், விண்வெளித் துறையில் பாரதத்தின் சாதனையைச் சொல்லியே ஆக வேண்டும். சந்திரயான், மங்கள்யான் என தொடர்ந்த வெற்றி, நிலவின் தென்பகுதியில் இறங்கி சாதித்த சாதனை, சூரியனை ஆய்வு செய்யச் சென்ற கலம் என தொடர்ந்த வெற்றிகளால் ஏற்பட்ட நற்பெயர் காரணமாக, இப்போது வர்த்தக ரீதியில் இஸ்ரோ செயற்கைக் கோள்களை ஏவி, சாதனை புரிந்து வருகிறது. அதற்கு முக்கியக் காரணம், பிரதமர் மோடி கொடுத்த தன்னம்பிக்கை, உற்சாகம், அதிக நிதி ஒதுக்கி விடுவிப்பு என சொல்லலாம். அதன் வெளிப்பாடுதான், பாரதம் வல்லரசாகும் என்ற நம்பிக்கையை நாட்டு மக்களுக்கு விதைப்பதில் இஸ்ரோவின் பங்கு மிக முக்கியமானது.
ராணுவத்தினருடன் சேவையாளர் மோடி
2014 முதல் ஒரு பிரதமராக தீபாவளியை அவர் கொண்டாடிய விதம், நம் நாட்டின் ராணுவத்தினருக்கும் மக்களுக்கும் உற்சாகமூட்டும் விஷயம்தான். 2014 தீபாவளியை சியாச்சினில் கொண்டாடினார்: மத்தியில் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த ஆண்டான 2014ஆம் ஆண்டு சியாச்சினில் பாதுகாப்புப் படையினருடன் தீபாவளியை பிரதமர் கொண்டாடினார். “சியாச்சின் பனிமலையின் உச்சி உயரத்தில் இருந்து, துணிச்சலான ஜவான்கள் மற்றும் ஆயுதப்படை அதிகாரிகளுடன், உங்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்” என்று அவர் அந்த நேரத்தில் ட்வீட் செய்தார்.
2015 தீபாவளியை பஞ்சாபில் கழித்தார்: 1965 போரில் இந்திய ராணுவத்தின் வெற்றிகளைப் போற்றும் வகையில், 2015ல், மோடி பஞ்சாபில் உள்ள மூன்று நினைவிடங்களுக்குச் சென்றார். இது 1965 ஆம் ஆண்டு போரின் 50 வது ஆண்டு நினைவு நாளில் அமைந்தது! அப்போது, “இந்திய ஆயுதப் படைகளின் துணிச்சலான வீரர்கள் இரத்தம் சிந்திய மற்றும் அந்தப் போரின் போது மிக உயர்ந்த தியாகம் செய்த இடங்களைப் பார்வையிடத் தேர்ந்தெடுத்ததாக” மோடி கூறினார். டோக்ராய் மற்றும் பார்கி களங்கள் 1965 போரின் போது பெற்ற முக்கிய வெற்றிகள்.
2016 தீபாவளி அன்று, ஹிமாச்சலப் பிரதேசத்தில் இருந்தார் மோடி: சீன எல்லைக்கு அருகே ராணுவ வீரர்களுடன் ஹிமாச்சலப் பிரதேச எல்லையில் தீபாவளியைக் கொண்டாடிய அவர், இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் (ITBP), டோக்ரா சாரணர்கள் மற்றும் இராணுவத்தைச் சேர்ந்த ஆண்களுடன் சும்தோவில் உரையாடினார். சாங்கோ என்ற கிராமத்தில் திட்டமிடப்படாத வகையில் திடீர் விசிட் அடித்தார். அங்கு மக்கள் அளித்த வரவேற்பும் அவர்களின் மகிழ்ச்சியும் தன்னை ஆழமாகத் தொட்டதாகக் கூறினார்.
2017 தீபாவளி அன்று, காஷ்மீரின் குரேஸ் செக்டாரில் இருந்தார் மோடி. வடக்கு காஷ்மீரில் உள்ள குரேஸ் செக்டருக்குச் சென்ற அவர், “எங்கள் படைகளுடன் நேரத்தை செலவிடுவது எனக்கு புதிய ஆற்றலை அளிக்கிறது” என்றார்.
2018 தீபாவளியை மோடி உத்தராகண்டின் ஹர்சிலில் கழித்தார், அங்கே அவர் படை வீரர்கள் முகாமுக்கு திடீர் விஜயம் செய்தார். தொடர்ந்து கேதார்நாத் ஆலயத்துக்கும் சென்றார்.
2019ல் இரண்டாவது முறையாக பிரதமர் ஆன பின், காஷ்மீரின் ரஜோரி சென்றார். ரஜோரி முகாமில் ராணுவ வீரர்களுக்கு இனிப்பு ஊட்டி, அவர்களுடன் அன்றைய தினத்தைக் கழித்தார்.
2020ல் கோவிட் தொற்றுக் காலத்திலும் தயங்காமல், தீபாவளி அன்று லோங்கேவாலா சென்றார். ராஜஸ்தானில் உள்ள லோங்கேவாலாவின் எல்லைப் பகுதிக்குச் சென்ற மோடி, பனி படர்ந்த மலைகளில் இருந்தாலும் சரி, பாலைவனத்தில் இருந்தாலும் சரி, ராணுவ வீரர்களுடன் இருக்கும்போதுதான் என் தீபாவளி நிறைவடைகிறது என்று குறிப்பிட்டார்.
2021ல் காஷ்மீரின் நவ்ஷேராவில் மோடி தீபாவளி கொண்டாடினார். “நவ்ஷேராவில் உள்ள நமது துணிச்சலான வீரர்களுடன் தீபாவளியை பிரதமராக அல்ல, அவர்களது குடும்ப உறுப்பினராகக் கழித்ததை நான் பாக்கியமாக உணர்கிறேன்” என்று சமூகத் தளத்தில் மகிழ்ச்சியைப் பகிர்ந்தார்.
2022 தீபாவளி அன்று, கார்கிலில் ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடிய மோடி, 1999 கார்கில் போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். ராணுவ வீரர்களிடையே உரையாற்றிய மோடி, இந்தியா போருக்கு எதிரானது, ஆனால் அமைதியை உறுதிப்படுத்த வலிமையின் அவசியம் எந்த அளவுக்குத் தேவை என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார். வளர்ந்து வரும் நம் வலிமை, உலகளாவிய அமைதி மற்றும் செழிப்புக்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது என்றார்.
2023ல் ஹிமாசலப் பிரதேசத்தின் லேப்சாவில் ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடிய பிரதமர் மோடி, நம் வீரர்களின் மன உறுதியும் திறமையும் நாட்டு மக்களுக்கு உத்வேகம் அளிப்பது என்றார்.
இப்படி ஒரு நாட்டின் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதமராக இருந்து, ராணுவ வீரர்களுடன் இருந்து, நாடும் அரசும் உங்களுடன் என்ற வலிமையான செய்தியை அவர்களுக்குக் கொடுத்து நாட்டின் வலிமைக்கு உரமூட்டிய பிரதமர் மோடி, இப்போது மூன்றாவது முறையாகப் பிரதமர் பதவி ஏற்று, தன் வழக்கமான பழக்கத்தைத் தொடர்வார் என்று எதிர்பார்க்கலாம்.
மக்களின் குரலை எதிரொலித்த மனதின் குரல்
பிரதமர் நரேந்திர மோடி தன் எளிமையான கருத்துக்களை எளிய மக்களிடம் பகிர்ந்து கொள்ளும் ஒரு முக்கியமான முதன்மையான நிகழ்ச்சியாக அமைந்தது தான் நம் அகில இந்திய வானொலியில் முதலில் ஒலிபரப்பான மன் கி பாத் எனும் மனதின் குரல் நிகழ்ச்சி.
எங்கோ ஒரு தொலை தொடர்பு அற்ற ஓர் எல்லை கிராமத்தில் அங்கிருந்த மனிதர்கள் வானொலிப் பெட்டியை வைத்து இந்த நாட்டுடன் இணைந்திருக்கும் தன்மையைக் கண்ட நரேந்திர மோடி, தாம் பிரதமர் ஆன உடனே மக்களைத் தொடர்பு கொள்ள வானொலியையே முதன்மையான சாதனமாக தேர்ந்தெடுத்துக் கொண்டார். அப்படி உருவானது தான் மன் கி பாத் நிகழ்ச்சி. இதன் மூலம் நாட்டு மக்களுடன் பல்வேறு விஷயங்கள் குறித்து உற்சாகமூட்டும் வகையில் நாட்டைக் குறித்த பெருமித உணர்வையும் நாட்டின் சாதனையாளர்களைக் குறித்த ஆரோக்கியமான தகவல்களையும் பகிர்ந்து கொண்டார் இது அவரது முதல் ஆட்சியிலும் சரி இரண்டாவது முறை ஆட்சியிலும் சரி மிகச் சிறப்பான நிகழ்ச்சியாக தொடர்ந்து ஒலிபரப்பானது. 100 பாகங்களைக் கடந்து ஒரு பிரதமரின் தொடர் நிகழ்ச்சி வானொலி தொலைக்காட்சியில் ஒலிபரப்பானது இதுவே முதல் முறை என்பதுடன் சாதனையாகவும் வரலாற்றில் பதிவாகிவிட்டது. அந்த சாதனை இந்த மூன்றாவது ஆட்சியிலும் தொடரும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.
பதவி புகழ் பணம் வரும்போது தன்னடக்கம் வேண்டும்: ஆன்மீக சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன் பேச்சு!
மதுரை:
பதவி பணம் புகழ் வரும் போது தன்னடக்கம் வேண்டும் என்று ஆன்மீக சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன் பேசினார் இது பற்றிய விவரம் வருமாறு
மதுரை தியாகராசர் கல்லூரியும் அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பும் இணைந்து சிவத்திரு கருமுத்து கண்ணன் நினைவாக திருச்சி கல்யாணராமனின் கம்பராமாயண தொடர் சொற்பொழிவு மதுரை தியாகராசர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ராதா தியாகராசர் அரங்கில் நடைபெற்று வருகிறது
மாயமான் என்ற தலைப்பில் கலைமாமணி திருச்சி கல்யாணராமன் சொற்பொழிவு ஆற்றினார் அப்போது அவர் பேசியதாவது.
ராமன் கானகம் சென்று முனிவர்களை நமஸ்கரித்து அவர்களை குருவாக ஏற்றுக் கொண்டு வணங்கினார்.
அகஸ்தியர் ராமனுக்கு தமிழ் மொழியில் வரவேற்பு கொடுத்தார். அகஸ்தியர் ராமனை எட்டு குணம் சொல்லி போற்றினார்.
நல்ல மாணவனாக இருந்தால் குருவும் போற்றுவார் என்பதற்கு ராமன் உதாரணம்.
நாராயணனே அவதரித்திருக்கிறார் என்று ராமனை முனிவர்கள் போற்றியபோது நான் தசரதன் மகன் அவ்வளவுதான் என்று தன்னடக்கத்தோடு ராமர் சொன்னார்.
பணம் புகழ் பதவி வரும்போது நாம் தன்னடக்கத்தோடு இருக்க வேண்டும். அதன்படி வாழ்ந்து காட்டியவர் ராமன். அதனால்தான் நாம் அவரை தெய்வமாக வணங்குகிறோம்.
ராவணன் பொன்மானை அனுப்பி ஏமாற்றி சீதையை கடத்திச் சென்றான். ஜடாயு இராவணனை எதிர்த்து உயிரை விட்டான். இறந்த ஜடாயு உடலை தகனம் செய்து ராமர் கர்மா செய்தார்.
மனிதன், பட்சி, மிருகம் யாருக்கு வேண்டுமானாலும் நாம் இறுதி கர்மா செய்யலாம் என்பதே நம் பெரியோர்கள் வேதத்தில் உணர்த்தி இருக்கிறார்கள். சபரி தந்த பழத்தை ராமர் சாப்பிட்டு வேடர் குலத்தைச் சேர்ந்த அவளுக்கு மோட்சம் கொடுத்தார்.
பக்தி தான் முக்கியம் என்பதை ராமர் காட்டினார். நாமும் ராமனை போல் எல்லோருக்கும் இனியவனாக வாழ கற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு திருச்சி கல்யாணராமன் பேசினார். சொற்பொழிவு வருகிற 16-ஆம் தேதி வரை மதுரை தெப்பக்குளம் தியாகராசர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தினமும் மாலை 6:00 மணி முதல் இரவு 8 மணி வரை நடக்கிறது நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மதுரை அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.
2024 லோக் சபா தேர்தலில் பாஜக கூட்டணி வென்றதா? இல்லை, காங்கிரஸ் கூட்டணிக்குத்தான் வெற்றியா? இதில் சிலருக்கு சந்தேகம் தோன்றுகிறது. ஏன் என்ன என்று பார்க்கலாம்.
பாஜக-வை, முக்கியமாக நரேந்திர மோடியை, தீவிரமாக எதிர்க்கும் எதிர்க் கட்சிகளில் பிரதானமானவை, காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜவாதி கட்சி, தேசியவாத காங்கிரஸ் (ஷரத் பவார்), மற்றும் சில. இவைகள் இன்னும் சில கட்சிகளுடன் சேர்ந்து, 2024 லோக் சபா தேர்தலில் மோடியை எதிர்ப்பதற்காக ஒரு கூட்டணியை உருவாக்கின. அதுதான் ‘இண்டி’ கூட்டணி (I.N.D.I. Alliance) என்பது.
இன்னொரு புறத்தில், பாஜக-வும் அதன் ஆதரவுக் கட்சிகளும் பல ஆண்டுகளுக்கு முன் உருவாக்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி செயல்படுகிறது.
நடந்து முடிந்த லோக் சபா தேர்தலில், மொத்தமுள்ள 543 தொகுதிகளில் பெரும்பான்மை எண் 272-ல் கிட்டிவிடும். தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களில் ஜெயித்தது – அதில் பாஜக-வின் கணக்கு 240. ‘இண்டி’ கூட்டணி கைப்பற்றியது 232 இடங்கள் – அதில் காங்கிரஸுக்கு வந்தது 99. மற்றவர்கள் 18.
வெறும் கூட்டல் கழித்தல் தெரிந்தால் போதும், வென்றது தேசிய ஜனநாயகக் கூட்டணி, அந்தக் கூட்டணி மத்தியில் ஆட்சி அமைப்பதுதான் முறை, அவர்கள் தேர்ந்தெடுத்த நரேந்திர மோடி பிரதமர் ஆவதுதான் இயற்கை என்று அனைவருக்கும் புரிய. ஆனால் இண்டி கூட்டணித் தலைவர்கள் இந்த நிதர்சனத்தை ஏற்காமல், துளியும் வெட்கமில்லாமல் வில்லத்தனமாக, பித்துக்குளித்தனமாகப் பேசுகிறார்கள்.
நடந்த விஷயங்களை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.
இந்த லோக் சபா தேர்தலில் தே. ஜ. கூட்டணி 400 இடங்களில் ஜெயிக்கக் குறி வைத்தது. ஆனால் அது எட்டியது 293. அதுவும் 21 இடங்கள் கூடுதலான பெரும்பான்மைதான். ஆனால் இண்டி கூட்டணிக் கட்சிகளுக்குத் தங்கள் கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெல்லும் என்ற நம்பிக்கை இருந்ததில்லை. அகில இந்தியத் தேர்தல் கள நிலவரம் அப்படி இருந்தது.
இண்டி கூட்டணித் தலைவர்கள் வெளிப்பேச்சுக்கு “நாங்கள் குறைந்தது 295 இடங்களில் ஜெயிப்போம்” என்று சொன்னார்கள். ராகுல் காந்தி அப்படிப் பேசினார். மற்ற இண்டி கூட்டணித் தலைவர்களுடன் ஆலோசித்துவிட்டு, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேயும் அதைச் சொன்னார்.
‘295 சீட்டுகளில் ஜெயிப்போம்’ என்று ராகுல் காந்தி கூறியது, அவர் மனமறிந்த பொய். இதை அமேதி தொகுதியின் கதை தெளிவாகக் காண்பிக்கிறது.
தொடர்ச்சியாக மூன்று லோக் சபா தேர்தல்களில் அமேதி தொகுதியின் எம்.பி-யாகத் தேர்வானவர் ராகுல் காந்தி. அதில் கடைசி முறையான 2014-ம் வருடத்தில், அவர் பாஜக-வின் ஸ்மிருதி இரானியைத் தோற்கடித்தார். ஆனால் அடுத்த தேர்தலில், 2019-ம் ஆண்டில், ராகுல் காந்தி அதே ஸ்மிருதி இரானியிடம் அமேதி தொகுதியில் தோல்வியடைந்தார்.
இப்போது நடந்த 2024 தேர்தலில், தான் மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிட்டால் ஸ்மிருதி இரானியிடம் மீண்டும் தோற்போம், அது மானக் கேடு, என்று நினைத்த ராகுல் காந்தி, இந்த முறை அமேதியில் போட்டியிடவில்லை. ஆகையால் ராகுலுக்கு மாற்றாக வேறு யாரோ ஒரு சாதா காங்கிரஸ் வேட்பாளர் அந்தத் தொகுதியில் இப்போது பலி ஆடாக வைத்து இறக்கப் பட்டார். ஆனால் இந்த முறை அந்த சதா வேட்பாளர் அமேதியில் பாஜக-வின் ஸ்மிருதி இரானியை ஒரு லட்சத்து அறுபதாயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வென்று விட்டார்.
தனது சொந்தத் தொகுதியில், தான் மூன்று முறை வென்ற அமேதி தொகுதியில், இந்த முறை ஜெயிப்போம் என்ற நம்பிக்கை ராகுல் காந்திக்கு இருந்ததில்லை என்பது தெளிவு.
இன்னொரு விஷயத்தையும் பார்க்கவேண்டும்.
“இண்டி கூட்டணி குறைந்த பட்சம் 295 தொகுதிகளில் வெல்லும்” என்று ராகுல் காந்தி சொன்னபோது, அதில் அமேதி தொகுதி சேர்த்தியா இல்லையா? ஆம் என்றால் ராகுல் காந்தியே அங்கு நின்று ஸ்மிருதி இரானியைத் தோற்கடித்து வஞ்சம் தீரத்திருப்பாரே? இல்லை, அந்த 295-ல் அமேதி சேர்த்தி இல்லை என்றால், தனது சொந்தத் தொகுதி மக்களின் மனநிலையைக் கூட சரியாக அறியாத ராகுல் காந்தி, எப்படி 295-ஐ நம்பி இருப்பார்?
இண்டி கூட்டணி எதிர்பார்த்த தோல்விக்கு, அவர்களே பின்னால் சொல்லிக் கொள்ள நொண்டிச் சாக்குகள் தேவை என்பதற்காக, அந்தக் கூட்டணித் தலைவர்கள் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் மீது சந்தேகம் எழுப்பி வந்தார்கள்.
அடுத்ததாக, வாக்கு எண்ணிக்கை தினத்துக்கு மூன்று நாட்கள் முன்னர், காங்கிரஸின் ஜெய்ராம் ரமேஷ் தடாலடிப் புளுகாக ஒரு அறிக்கை வெளியிட்டார். ”அமித் ஷா மாவட்ட கலெக்டர்களை தொலைபேசியில் அழைத்து வருகிறார். இதுவரை 150 கலெக்டர்களிடம் பேசிவிட்டார். அதிகாரிகள் எந்த அழுத்தத்திற்கும் இணங்காமல், அரசியல் சட்டப்படிதான் நடக்கவேண்டும். அவர்கள் கண்காணிக்கப் படுகிறார்கள்” என்றது அவர் அறிக்கை.
தாங்கள் எதிர்பார்த்த பெரிய தோல்விக்கு, ‘அரசு மிரட்டியது. வாக்கு எண்ணும் தேர்தல் அதிகாரிகள் முறைகேட்டுக்கு உடன்பட்டு இண்டி கூட்டணியைத் தோற்கச் செய்துவிட்டார்கள்’ என்று பின்னால் விளக்கம் சொல்ல இப்படி ஒரு மலிவான செய்கையில் ஈடுபட்டது காங்கிரஸ்.
வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு நாள் முன்பாக, காங்கிரஸ் தலைவர் கார்கே அரசுப் பணியாளர்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் ஒரு வேண்டுகோள் விடுத்தார்: “யாரிடமும் அச்சப் படாதீர்கள். அரசியல் சட்டத்திற்குப் புறம்பான வழிகளுக்கு அடிபணியாதீர்கள். வாக்கு எண்ணும் தினத்தில் முறையாகப் பணி செய்யுங்கள்” என்று சொன்னார் அவர். அதே குயுக்தி, அதே மலிவான தந்திரம், அதே கெட்ட நோக்கம்.
தேர்தல் முடிவுகள் வந்தவுடன், பெரும்பான்மை இடங்களைப் பெறாத இண்டி கூட்டணியின் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி – 99 தொகுதிகளை மட்டும் வென்ற ஒரு கட்சியின் தலைவர் – “இந்தத் தேர்தலின் முக்கியச் செய்தி என்னவென்றால், ‘நாட்டை ஆள்வதற்கு நரேந்திர மோடியும் அமித் ஷாவும் வேண்டாம்’ என்று மக்கள் தெளிவாக ஏகோபித்துச் சொல்லிவிட்டனர்” என்று கூசாமல் பிதற்றினார். “மக்கள் அரசியல் சட்டத்தைக் காப்பாற்றி விட்டனர்” என்றும் அவர் உளறினார்.
ராகுல் காந்திக்குச் சளைக்காத மு. க. ஸ்டாலின், “அரசியல் சாசனத்தை மாற்றிவிடலாம் என்று நினைத்த பாஜக-வுக்கு எதிரான மக்களுடைய தீர்ப்பு இது” என்று பேசினார்.
இண்டி கூட்டணியிடம் ஆட்சிப் பொறுப்பைத் தர விரும்பாத மக்களை ராகுல் காந்தியும் மு. க. ஸ்டாலினும் பெரிய மனதுடன் மன்னித்து விட்டார்கள் போலும்!
ஒரு சீரியஸான விஷயம்: அரசியல் என்பது ஒரு கோர விளையாட்டு, அதன் முக்கிய ஆடுகளம் தேர்தல். இன்னொரு விஷயம்: கல்வியின்மையால், ஏழ்மையால், இந்திய மக்கள் சில அரசியல் விஷயங்களில் வெகுளியானவர்கள். இந்த இரண்டும் கலக்கும்போது, தேர்தல்களில் வெற்றி தோல்விகள் யாருக்குக் கிடைக்கும், எந்த அளவு கிடைக்கும் என்று பல சமயங்களில் நாம் சரியாகக் கணிக்க முடியாது. இதைப் புரிந்துகொண்டு, வந்திருக்கும் தேர்தல் முடிவுகளை ஏற்று, மக்களுக்காக, நாட்டு நலனுக்காக, அயராது உழைப்பவர் நரேந்திர மோடி என்னும் மாமனிதர்.
பாஜக என்ற கட்டுக் கோப்பான கட்சி, நரேந்திர மோடி என்ற நேர்மையான சாதுரியமான தேசபக்தர் இன்றைய இந்தியாவுக்கு ஒரு வரப் பிரசாதம்.
தனது உயர்ந்த இலக்கிலிருந்து பார்வை விலகாமல், இண்டி கூட்டணித் தலைவர்கள் அனைவரையும் கையாளக் கூடியவர் மோடி. இதில் அவருக்கு உறுதுணையாக இருப்பது பாஜக-வின் அடுத்த கட்டத் தலைவர்கள். பாஜக-வின் கூட்டணிக் கட்சிகளை அணைத்து, தேவையானால் அவர்களை சமாளிக்கவும் வல்லவர் மோடியும் அவரது சகாக்களும். சீனாவையும் பாகிஸ்தானையும் கூட சாதுரியமாகச் சமாளித்தவர் அல்லவா மோடி!
இப்போது நாம் செய்யக் கூடியது: தேச நலனைப் போற்றுவோம். மீண்டும் பிரதமர் ஆகும் மோடியை வாழ்த்துவோம்.
Author: R Veera Raghavan, Advocate, Chennai
(veera.rvr@gmail.com)
https://rvr-india.blogspot.com
மோதிஜி நாடாளுமன்ற மத்திய அரங்கில் ஆற்றிய உரை, 7.6.24 தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன்
நீங்கள் அனைவரும், என் மீது வெளிப்படுத்தியிருக்கும் நம்பிக்கை, வெளிப்படுத்தியிருக்கும் அன்பு, இவை தவிர, அளித்திருக்கும் ஆதரவு, பாரதநாட்டு ஜனநாயகத்தில் மிகப்பெரிய சக்தி இருக்கிறது என்று உள்ளபடியே நம்புகிறேன்.
எத்தனை உங்களுக்கு நன்றி தெரிவித்தாலும் அது குறைவு தான் மேலும் நான் நம்பிக்கை அளிக்கிறேன், மோதி நான், உங்களுடைய ஆர்வங்கள் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கான, உழைப்பினிலே எந்தக் குறைவும் வைக்க மாட்டேன். நானெடுத்த பிறப்பு, ஒரே காரணத்துக்காகவே.
ஒரு வாழ்க்கை ஒரே இலக்கு. அது தான், என்னுடைய, பாரத…. அன்னை. இந்த இலக்கு, 140 கோடி நாட்டுமக்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்கான பணியில், என்னை அர்ப்பணிப்பது. இந்த இலக்கு, 140 கோடி மக்கள் ஆயிரமாண்டுகளாக தலைமுறைதலைமுறையாக அனுபவித்து வரும் கஷ்டங்களிலிருந்து, விடுதலை அளித்து, கௌரவத்தோடு உலகில் இருக்க வேண்டும்.
என்னுடைய நாட்டுமக்கள் ஒவ்வொருவரையும், உலகம் நம்மவர்களைக் கண்டு, அவர்கள் எண்ண வேண்டும், ஆம் இவர் இந்துஸ்தானத்தவர், இவரை சந்தித்தால் எத்தனை நன்றாக இருக்கும் என்று!! இதுபோன்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்.
அவர்கள் பேரார்வத்தோடு அட நீங்கள் இந்தியரா, நான் உங்களுடன் கைகுலுக்கவா, எனக்கும் கொஞ்சம் சக்தி கிடைக்குமே!! நான் தேசத்தை இந்த உயரத்திற்குக் கொண்டு செல்ல விரும்புகிறேன்.
மேலும் நண்பர்களே!! எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. உங்களுடைய நம்பிக்கையும் உங்கள் ஆதரவும், உங்களுடைய அனுபவமும், மிகப்பெரிய விளைவுகளைத் தரும் சாத்தியக்கூறுகளைத் தாங்கி வந்திருக்கிறது.
மக்களவையின் இந்தப் பதிப்பு, அந்த அனைத்து எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்றி வைக்கும். நான் மீண்டும் ஒருமுறை, உங்கள் அனைவருக்கும், இதய பூர்வமாக பலப்பல நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.