Home Blog Page 224

தமிழகத்தில் பெற்ற வாக்கு சதவீதம்… நாளை என்ன எழுதப் படும் என்பதைக் காட்டுகிறது!

கடுமையாக உழைத்ததால்தான் தமிழ்நாட்டில் பாஜகவின் வாக்கு சதவிகிதம் உயர்ந்துள்ளது. தமிழகத்தில் பெற்ற வாக்கு சதவீதம் காட்டுவது அதைத்தான்… நாளை என்ன எழுதப் படப் போகிறது என்பதைக் காட்டுகிறது.. என்று பேசினார் மோடி.

அவர் இன்று நாடாளுமன்ற மத்திய அரங்கில் தே.ஜ.கூட்டணி கட்சித் தலைவர்கள், உறுப்பினர்களிடையே பேசிய போது குறிப்பிட்டவை…

கடுமையாக உழைத்ததால்தான் தமிழ்நாட்டில் பாஜகவின் வாக்கு சதவிகிதம் உயர்ந்துள்ளது. தமிழகத்தில் பெற்ற வாக்கு சதவீதம் காட்டுவது அதைத்தான்… நாளை என்ன எழுதப் படப் போகிறது என்பதைக் காட்டுகிறது. தமிழ்நாட்டில் வருங்காலத்திலும் பாஜகவின் வளர்ச்சி அபரிதமாக இருக்கும்.

ஜகன்நாதர் அருளால் அடுத்த 50 ஆண்டுகளுக்கும் ஒடிஷாவில் பாஜக ஆட்சி தொடரும் . அடிமட்டத்தில் இருந்து இறங்கி உழைத்ததால்தான் இவ்வளவு வலுவான கூட்டணி சாத்தியமானது.

காற்று கூட உள்நுழைய முடியாத அளவிற்கு கூட்டணிக்குள் ஒற்றுமை இருந்தால்தான் நாட்டை வளர்ச்சி அடைய செய்ய முடியும். 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

தேர்தல் காலங்களில் பாஜக அரசு அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றி இருக்கிறது. மக்களவைத் தேர்தலில் பாஜக கட்சி தான் பெண்கள் போட்டியிட அதிக வாய்ப்பு வழங்கி இருக்கிறது.

பெண்கள் முன்னேற்றத்திற்கு பாஜக தலைமையிலான அரசு எப்போதும் முக்கியத்தும் அளித்து வருகிறது. மக்களவைத் தேர்தல் தீர்ப்பை எதிர்க்கட்சிகள் மதிப்பார்கள் என நம்புகிறேன்.

கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியால் 100 இடங்களில் கூட வெற்றி பெற முடியவில்லை. தேர்தல் காலங்களில் EVM இயந்திரங்கள் குறித்து சந்தேகங்கள் எழுப்பிய எதிர்க்கட்சியினர் தற்போது அமைதி காத்து வருகின்றனர்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து இப்போது ஒருவரும் வாய் திறக்கவில்லை. ஜனநாயகத்தின் மாண்பைக் குறைக்கவே ஈவிஎம் பிரச்னையை எதிர்க்கட்சிகள் எழுப்பின.

சர்வதேச அளவில் இந்தியாவின் பிம்பத்தை சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் முயற்சி செய்கின்றன. இந்தியாவின் ஜனநாயகம் பாதிக்கப்படுவதாக வெளிநாடுகளுக்கு சென்று சிலர் குற்றம் சாட்டினர்.

NDA கூட்டணியின் எண்ணிக்கையே சொல்கிறது எங்கள் பலம் எப்படி என்று… என்று தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் நரேந்திர மோடி பேசினார்.

T20 WC 2024: முதல் சுற்று ஆட்டங்களில் முக்கியமான தகவல்கள்!

t20 worldcup - 2026
#image_title

டி20 முதல் சுற்று ஆட்டங்கள் 05.06.2024 வரை

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

          டி20 உலகக் கோப்பௌ போட்டி 01.06.2024 அன்று தொடங்கின. ஆட்டங்கள் அமெரிக்காவிலும் மேற்கு இந்தியத் தீவுகளிலும் நடக்கின்றன. 05.06.2024 வரை நடந்த ஆட்டங்கள் பற்றி பார்க்கலாம்.

          இந்தப் போட்டியில் 20 அணிகள் பங்கேற்கின்றன. அவை குரூப் A, B, C, D என நான் கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. 05.06.2024 வரை அணிகள் ஒவ்வொரு குரூப்பிலும் ஆடிய ஆட்டங்களின் வழி பெற்ற புள்ளிகள் கீழே உள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளன.

அட்டவணை

குரூப் Aகுரூப் Bகுரூப் Cகுரூப் D
இந்தியா – 2 பாகிஸ்தான், கனடா – 0 அயர்லாந்து 0 அமெரிக்கா ஐக்கிய நாடுகள் – 2ஆஸ்திரேலியா, நமீபியா 2 ஸ்காட்லாந்து 1 ஓமன் 0 இங்கிலாந்து 1நியூசிலாந்து, மேற்கு இந்தியத் தீவுகள் 2 ஆப்கானிஸ்தான் 2 பாபுவா நியூகினியா 0 உகாண்டா 2தென் ஆப்பிரிக்கா 2 இலங்கை 0 வங்கதேசம், நேபாளம் 0 நெதர்லாந்து 2

          முதல் ஆட்டம் 01.06.2024 அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் உள்ள மைதானத்தில் கனடா அணிக்கும் (194/5)  அமெரிக்க ஐக்கிய நாடுகள் அணிக்கும் இடையே நடந்தது (197/3). கனடா அணியில் நவ்நீத் தஹ்லிவால் 61 ரன், நிக்கோலஸ் கிர்டொன் 51 ரன், ஷ்ரேயாஸ் மொவ்வா 32 ரன் அடித்தனர். அமெரிக்க அணியில் ஆன்றிஸ் கௌஸ் 65 ரன்னும் ஆரோன் ஜோன்ஸ் 94 ரன்னும் அடித்தனர் அமெரிக்கா 7 விக்கட் வித்தியாசத்தில் வென்றது. ஆரோன் ஜோன்ஸ் ஆடிய அதிரடி ஆட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

          02.06.2024 அன்று மே.இ. தீவுகளில் உள்ள கயானா ப்ராவிடன்ஸ் மைதானததில் பாப்புவா நியூ கினியா (136/8) மேற்கு இந்தியத் தீவுகள் (13.7 ஓவரில் 137/5) அணிகளுக்கு இடையே ஆட்டம் நடைபெற்றது. மேற்கு இந்தியத் தீவுகள் 5 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          03.06.2024 மூன்று ஆட்டங்கள் நடந்தன. முதல் ஆட்டம்  பிரிட்ஜ் டவுனில் ஓமன் (19.4 ஓவரில் 109) நமீபியா (20 ஓவரில் 109/6) அணிகளுக்கிடையே நடந்தது. இரண்டு அணிகளும் சம்மான ரன் எடுக்க ஆட்டம் சூப்பர் ஓவர் வரை சென்றது.  சூப்பர் ஓவரில் நமீபியா வென்றது. இரண்டாவது ஆட்டம் நியூயார்க்கில் ஆஃப்கானிஸ்தான் (183/5), உகாண்டா (16 ஓவரில் 58) அணிகளுக்கிடையே நடந்தது. இதில்  ஆஃப்கானிஸ்தான் 125 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

மூன்றாவது ஆட்டம் இலங்கை (77) தெ ஆப்பிரிக்கா (16.2 ஓவரில் 80/4) அணிகளுக்கிடையே நடந்தது. இலங்கை அணி தெ ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர்களைச் சமாளிக்க முடியாமல் 77 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. அதன் பின்னர் தென் ஆப்பிரிக்கா விளையாடி 6 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          04.06.2024  – அன்று இரண்டு ஆட்டங்கள் நடந்தன. முதல் ஆட்டம்  பிரிட்ஜ்டவுனில் ஸ்காட்லாந்து (10 ஓவரில் 90) இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டம் கைவிடப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படது. இது இங்கிலாந்து அணிக்கு ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இரண்டாவது ஆட்டம் டல்லாஸில் நேபாளம் (106), நெதர்லாந்து (18.4 ஓவரில் 109/4) அணிகளுக்கிடையே நடந்தது. இதில் நெதர்லாந்து அணி 6 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          05.06.2024 அன்று மூன்று ஆட்டங்கள் நடந்தன முதல் ஆட்டம் நியூயார்க்கில் அயர்லாந்து (96), இந்தியா (12.2 ஓவரில் 97/2) அணிகளுக்கிடையே நடந்தது.  இந்திய அணி 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, அயர்லாந்து அணி பேட்டிங் செய்தது.

          அயர்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆண்ட்ரியு பாப்பிர்னி மற்றும் பால் ஸ்டிர்லிங் களமிறங்கினர். இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாத அயர்லாந்து பேட்டர்கள் மளமளவென விக்கெட்டைப் பறிகொடுத்தனர். பால் ஸ்டிர்லிங் 2 ரன்னிலும், ஆண்ட்ரியு பால்பிர்னி 5 ரன்னிலும், லோர்கன் டக்கர் 10 ரன்னிலும், ஹாரி டெக்டர் 4 ரன்னிலும், குர்டி கேம்பெர் 12 ரன்னிலும், ஜார்ஜ் டாக்ரெல் 3 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.

          அயர்லாந்து அணி 9.4 ஓவர்களில் 46 ரன்களுக்கு எல்லாம் 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது. ஆனால், அயர்லாந்து வீரர்களில், கரேத் டெலானி மட்டும் அதிரடியாக விளையாடி ரன் குவித்தார். மறுமுனையில், மார்க் அடைர் 3 ரன்னிலும், பேரி மெக்கார்த்தி 0 ரன்னிலும், ஜோஷுவா லிட்டில் 14 ரன்னிலும் அவுட் ஆனார்கள். மறுமுனையில் உறுதியாக விளையாடிய கரேத் டெலானி 14 பந்துகளில் 26 ரன்கள் எடுத்திருந்தபோது சிராஜால் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

          இதனால், இந்திய அணி வீரர்களின் பந்துவீச்சில் தாக்குப்பிடிக்க முடியாத அயர்லாந்து அணி 16 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 96 ரன்களில் சுருண்டது. இந்திய அணி தரப்பில், ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டுகளும் அர்ஷ்தீப் சிங், பும்ரா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

          இதையடுத்து, 97 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் சர்மா மற்று விராட் கோலி களமிறங்கினர். அயர்லாந்து அணி பந்துவீச்சாளர் மார்க் அடைர் தொடக்கமே அதிர்ச்சி அளித்தார். விராட் கோலி 1 ரன் மட்டுமே எடுத்து, மார்க் அடைர் பந்தில், பெஞ்சமினிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, ரிஷப் பண்ட் பேட்டிங் செய்ய வந்தார்.

          அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா 37 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். ஆனால், அவர் காயம் காரணமாக பெவிலியன் சென்றார். அடுத்து சூர்யகுமார் யாதவ் வந்தார். அவர் 2 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பெஞ்சமின் ஒயிட் பந்தில், ஜார்ஜ் டோக்ரெல் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த ஷிவம் துபே 2 பந்துகளை மட்டுமே சந்தித்தார். ஆனால், அதற்குள் ரிஷப் பண்ட் 26 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

          இந்திய அணி, 12,2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 7 முறை மோதியுள்ளன. 7 ஆட்டங்களிலும் இந்தியாவே வெற்றி கண்டுள்ளது.

          இந்தப் போட்டியில் ரோஹித் ஷர்மாவும் விராட் கோலியும் தொடக்க வீரர்களாக இறங்கினர். ஆனால் கோலி சரியாக விளையாடவில்லை. சூர்யகுமாரும் சரியாக விளையாட வில்லை. எனவே ஒரு அணியாக இந்திய அணி சரியாக விளையாடவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

          இரண்டாவது ஆட்டம் பாப்புவா நியூ கினியா (77), உகாண்டா (18.2 ஓவரில் 78/7) அணிகளுக்கிடையே நடந்தது.   உகாண்டா அணி 3 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. மூன்றாவது ஆட்டம் பிரிட்ஜ்டவுனில் ஆஸ்திரேலியா (164/5) ஓமன் (125/9) அணிகளுக்கிடையே நடந்தது. இதில்  ஆஸ்திரேலியா 39 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இந்தியா அயர்லாந்து ஆட்டத்தில் ரோஹித் ஷர்மாவின் சாதனைகள்

          இந்தியா அயர்லாந்து ஆட்டத்தில் ரோஹித் ஷர்மா 37 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார். அவரது ஆட்டத்தால் திணறிய அயர்லாந்து அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் ரன் குவித்த ரோஹித் சர்மா சர்வதேச டி20 போட்டிகளில் 4000 ரன்கள் என்ற மைல்கல்லை கடந்தார். மேலும், சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 4026 ரன்கள் அடித்து, பாபர் அசாமை முந்தி இரண்டாம் இடத்தை பிடித்தார் ரோஹித் சர்மா. மேலும், டி20 உலக கோப்பை தொடரில் மட்டும் 1000 ரன்களை கடந்தார்.

          இந்த போட்டியில் அவர் மூன்று சிக்ஸ் அடித்திருந்தார். அதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக 600 சிக்ஸர்களை அடித்த முதல் வீரர் என்ற இமாலய சாதனையை படைத்திருக்கிறார். மேலும், ஐசிசி தொடர்களில் 100 சிக்ஸர்களை அடித்த ஒரே இந்திய வீரர் என்ற சாதனையும் அவர் செய்துள்ளார். சர்வதேச டி20 போட்டிகளில் குறைந்த பந்துகளில் 4000 ரன்களை அடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். அதாவது விராட் கோலி மற்றும் பாபர் அசாமை விட மிகக் குறைந்த பந்துகளில் 4000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டி இருக்கிறார்.

          அது அதுமட்டுமின்றி ஒரு நாள் போட்டி, டெஸ்ட் போட்டி மற்றும் சர்வதேச டி20 போட்டிகள் என மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் தனித் தனியாக 4000 ரன்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற மிகப்பெரிய சாதனையையும் ரோஹித் சர்மா செய்துள்ளார். இதற்கு முன் விராட் கோலி மட்டுமே அந்த சாதனையை செய்திருந்தார். மேலும், இந்திய அணியின் கேப்டனாக அதிக வெற்றிகளை பெற்று இருக்கிறார். முன்பு தோனி இந்திய அணியின் கேப்டனாக 42 வெற்றிகளை பெற்றுக் கொடுத்த நிலையில், ரோஹித் சர்மா 43 வெற்றிகளை பெற்றுக் கொடுத்து கேப்டனாக சாதனை படைத்து இருக்கிறார்.

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள்

600* – ரோஹித் சர்மா (இந்தியா)

553 – கிறிஸ் கெய்ல் (மேற்கு இந்தியத் தீவுகள்)

476 – ஷாஹித் அப்ரிடி (பாகிஸ்தான்)

398 – பிரண்டன் மெக்கல்லம் (நியூசிலாந்து)

டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள்

1142 ரன்கள் (26 இன்னிங்ஸ்) – விராட் கோலி (இந்தியா)

1016 ரன்கள் (31 இன்னிங்ஸ்) – மஹேலா ஜெயவர்த்தனே (இலங்கை)

1015* ரன்கள் (37 இன்னிங்ஸ்) – ரோஹித் சர்மா (இந்தியா)

965 ரன்கள் (31 இன்னிங்ஸ்) – கிறிஸ் கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்)

சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் (ஆண்கள்)

4038 ரன்கள் – விராட் கோலி (110 இன்னிங்ஸ்)

4026 ரன்கள் – ரோஹித் சர்மா (144 இன்னிங்ஸ்)

4023 ரன்கள் – பாபர் ஆசம் (112 இன்னிங்ஸ்)

குறைந்த பந்துகளில் 4000 சர்வதேச டி20 ரன்கள்

ரோஹித் சர்மா – 2860

விராட் கோலி – 3000

பாபர் ஆசம் – 3079

T20 WC: பயிற்சி ஆட்டங்களும் பயன்களும்!

t20 worldcup - 2026
#image_title

டி-20 உலகக் கோப்பை போட்டி03.06.2024 வரை

  • முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

          2024ஆம் ஆண்டிற்கான டி-20 உலகக் கோப்பை போட்டி 27.05.2024 அன்று அமெரிக்காவில் கனடா மற்று நேபாள நாடுகளின் அணிகளுக்கிடையில் பயிற்சி ஆட்டத்துடன் தொடங்கியது. கனடா அணி (183/7) நேபாள அணியை (19.3 ஓவரில் 120) 63 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

          இரண்டாவது பயிற்சி ஆட்டம் 28 அன்று மேற்கிந்தியத் தீவில் ஓமன் அணிக்கும் பாப்புவா நியூ கினியா அனிக்கும் இடையே நடந்தது. இந்தப்போட்டியில் ஓமன் அணி (141/7) பாப்புவா நியூ கினியா அணியை (137/9) 3 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          மூன்றாவது பயிற்சி ஆட்டம் 28 அன்று மேற்கு இந்தியத் தீவுகளில் நமீபியா அணிக்கும் (18.5 ஓவர்களில் 135/5) உகாண்டா அணிக்கும் (134/8) இடையே நடந்தது. நமீபியா அணி உகாண்டா அணியை 5 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          அதே நாள் ஃப்ளோரிடாவில் நடைபெற்ற மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணி (19 ஓவரில் 161) நெதர்லாந்து அணியிடம் (181/6) 20 ரன்கள் வித்தாசத்தில் தோவியியைச் சந்தித்தது. 28ஆம் தேதி அன்றே அமெரிக்காவில் டல்லாஸில் நடைபெற இருந்த ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

          29ஆம் தேதி போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்ற ஆட்டம் பாதியில் நின்றுபோனது. அடுத்த நாள் மேற்கு இந்தியத் தீவுகள் தாருபாவில் நடந்த ஆட்டமும் பாதியில் நின்று போனது. 30ஆம் தேதி அமெரிக்காவில் டல்லாஸில் நடைபெற இருந்த ஆட்டமும் ரத்தானது. 

இந்த வரிசையில் ஜூன் 1ஆம் நாள் இந்தியா வங்கதேசம் இடையே நியூயார்க் நகரில் ஒரு பயிற்சி ஆட்டம் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று இந்திய அணி முதலில் மட்டையாட வந்தது. ரோஹித் ஷர்மாவும் யஶஸ்வீ ஜெய்ஸ்வாலுக்குப் பதிலாக சஞ்சு சாம்சனும் தொடக்கவீரர்களாக களம் இறங்கினர். விராட் கோலி ஆடவில்லை.

இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கட் இழப்பிற்கு 182 ரன் எடுத்தது. ரோஹித் ஷர்மா 23, ரிஷப் பந்த் 53, சூரியகுமார் யாதவ் 31, ஷிவம் துபே 14, ஹார்திக பாண்ட்யா 40 ரன் எடுத்தனர். இரண்டாவதாக ஆடவந்த வங்கதேச அணி 20 ஓவரில் 9 விக்கட் இழப்பிற்கு 122 ரன் எடுத்தது. அந்த அணியின் மகமத்துல்லா அதிக அளவாக 40 ரன் எடுத்தார். இந்திய அணியில் அர்ஷதீப் சிங், ஷிவம் துபே இருஅவரும் தலா 2 விக்கட் எடுத்தனர். பும்ரா, சிராஜ், ஹாதிக், அக்சர் படேல் ஆகியோர் தலா ஒரு விக்கட் எடுத்தனர். இவ்வாறு இந்திய அணி வெற்றியோடு தொடங்கியது

மக்கள் பணிகள் தொடரும்: பிரதமர் மோடி உறுதி!

modi in bjp hq - 2026
#image_title

கடந்த 10 ஆண்டுகளாக மக்களுக்கு செய்த பணிகளை தொடர்ந்து செய்வோம் என பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், பாஜக., தலைமை அலுவலகம் வந்த பிரதமர் மோடி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் பேசிய போது, மக்கள் தொடர்ந்து மூன்றாவது முறையாக எங்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டார்.

முன்னதாக, மோடி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். அதில்,

தேஜ கூட்டணி மீது மக்கள் முழுமையாக நம்பிக்கை வைத்துள்ளனர். இந்தியாவை ஆட்சியை செய்ய மூன்றாவது முறையாக நம்பிக்கை வைத்த மக்களுக்கு நன்றி . கடந்த 10 ஆண்டுகளாக செய்த மக்கள் நலப்பணிகளை தொடர்ந்து செய்வோம். எங்கள் அனைத்து காரியகர்த்தாக்களுக்கும் அவர்களின் கடின உழைப்புக்கு நான் தலை வணங்குகிறேன். அவர்களின் விதிவிலக்கான முயற்சிகளுக்கு வார்த்தைகள் ஒருபோதும் நியாயம் செய்யாது… என்று பதிவிட்டுள்ளார்.

பின்னர் பாஜக., தலைமை அலுவலகத்தில் அவர் உரையாற்றிய போது,

தொடர்ந்து மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர், NDA கூட்டணி மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதால் கிடைத்த வெற்றி; இந்த வெற்றியை தந்த மக்களுக்கு நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளேன்; அனைவரும் 10 மணி நேரம் வேலை செய்வார்கள், ஆனால் நான் 18 மணி நேரம் உழைக்கிறேன்!

கடும் வெப்பத்தையும் பொருட்படுத்தாது இங்கு வந்துள்ளீர்கள், இது எனக்கு மிகுந்த உத்வேகத்தை கொடுத்துள்ளது!

இது 140 கோடி மக்களின் வெற்றி. ஜனநாயகத்தின் வெற்றி. 10 ஆண்டுகளுக்கு பிறகும் பாஜகவுக்கு 240 எம்பிக்கள் கிடைத்துள்ளனர். ஐஎன்டிஐ கூட்டணியின் ஒட்டுமொத்த எண்ணிக்கையை விட நாம் அதிகம் பெற்றுள்ளோம். ஒவ்வொரு தனிநபரிடமும் வறுமையை இல்லாமல் ஆக்குவோம். ஊழலை முற்றிலும் ஒழிப்போம்.

21வது நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டு. விரைவில் உலகின் 3வது பொருளாதார நாடாக உயருவோம். என்று, தில்லி பாஜக தலைமையகத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

ஜனநாயகத்தின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதை இந்தத் தேர்தல் காட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இத்தேர்தலில் பாஜக., 240 இடங்களில் வென்று அல்லது தனிப்பெரும் கட்சியாக இருந்து உருவெடுத்துள்ளது. ஆட்சி அமைப்பதற்கான மெஜாரிட்டி இடங்களான 272க்கு 30 இடங்களுக்கும் குறைவாகப் பெற்ற போதிலும், கூட்டணியாக மெஜாரிட்டி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. இதை அடுத்து தில்லி, பாஜக., தலைமை அலுவலகம் வந்த பிரதமர் மோடிக்கு பாஜக.,வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தேர்தல் வெற்றியை பாஜக வினர் கொண்டாடினர்.

அவர்களது உற்சாக வரவேற்பை ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி, தொண்டர்களிடம் உற்சாகம் குறையாமல் பேசினார். தனக்கு மூன்றாவது முறையாக வாய்ப்பு அளித்திருப்பதை கண்கலங்கியபடி தெரிவித்தார் மோடி. இந்திய வாக்காளர்களுக்கு நான் பெரும் கடன்பட்டுள்ளேன். தொடர்ச்சியாக 3-வது முறையாக வெற்றி பெற்றுள்ளது தேஜ கூட்டணி மற்றும், பாஜக., மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதைக் காட்டுகிறது.அவர்களுக்கு நன்றி.தேர்தல் சிறப்பாக நடைபெற உதவிய அனைவருக்கும் நன்றி… என்று கண்கலங்கிய படி தெரிவித்தார்.

ஜனநாயகத்தின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதால் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளோம். இந்திய மக்கள் என்மீது அன்பையும், பாசத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். ஒடிசாவிலும், அருணாச்சல் பிரதேசத்திலும் வெற்றி பெற்றுள்ளது. ஆந்திராவில் தே.ஜ. கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. கேரளாவிலும் மக்கள் மனதை வென்றுள்ளோம். நாட்டு மக்களுக்கு உழைக்க வேண்டும் என்ற உத்வேகத்தை இத்தேர்தல் வெற்றி கொடுக்கிறது என்று கூறினார் பிரதமர் மோடி.

இந்நிலையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை காலை மத்திய அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது. தற்போது, பாஜக தலைமையிலான தே.ஜ. கூட்டணி 290 தொகுதிகளில் வெற்றி மற்றும் முன்னிலை வகிக்கும் நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள், ஆட்சியமைக்க உரிமை கோருவது தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது.

மூன்றாவது முறையாக மக்கள் வைத்த நம்பிக்கை!

modi in bjp hq - 2026
#image_title

பொதுவாக, இரண்டு முறை தொடர்ந்து ஆட்சியில் இருந்த கட்சிக்கு எதிராக மக்களின் கோபம் அல்லது எதிர்ப்பு உணர்வு திரும்புவது எங்குமே வழக்கம் தான்.  ஆனால் பல்வேறு எதிர்நிலைப் பிரசாரங்கள், வாக்காளர்களின் மனநிலையில் பேராசை காட்டி எதிர்க்கட்சிகள் ஏற்படுத்திய குழப்பங்கள், நாடெங்கும் நிலவிய வெப்ப அலை என பல்வேறு காரணிகளையும் மீறி, ஆளும் பாஜக., தலைமையிலான கூட்டணிக்கு மீண்டும் வாக்களித்து வாய்ப்பளித்து இருக்கிறார்கள் வாக்காளர்கள். 

கடந்த முறை பத்து ஆண்டுகள் தொடர்ந்து கூட்டணி ஆட்சியில் இருந்த காங்கிரஸ் 2014 தேர்தலின் போது,மக்களின் நிராகரிப்புக்கு உள்ளாகி, 50 இடங்களுக்குள் முடங்கிப் போய், எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட தக்க வைக்க முடியாத நிலைக்குச் சென்றிருந்தது. அப்படிப்பட்ட நிலையை எல்லாம் பார்க்கும் போது, பாஜக.,வுக்கு, குறிப்பாக மோடிக்கு அப்படியான நிலையின்றி, வழக்கம் போல் தங்களது ஆதரவைக் கொடுத்து, 240 இடங்களுக்கு மேல் தனிப்பட்ட வகையில் கொடுத்திருக்கிறார்கள். ஓரிரண்டு மாநிலங்களில் ஏற்பட்ட பின்னடைவு, பாஜக.,வுக்கு பின்னடைவு போன்ற ஒரு மாயத் தோற்றத்தை தந்திருந்தாலும், வழக்கமான அல்லது எதிர்பார்க்கப்பட்ட வெற்றியையே பல்வேறு இடையூறுகளையும் கடந்து மக்கள் அளித்திருக்கிறார்கள்.  

பத்து வருடங்களுக்கு முன்னர் பத்து வயதுக்குள்ளும், பதின்ம வயதுகளிலும் இருந்தவர்கள் இப்போது முதல்முறை வாக்காளர்களாக தங்கள் வாக்குகளை செலுத்தியிருக்கிறார்கள். அவர்களுக்கு  கடந்த 2004 முதல் 2014 வரை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள், அதற்கு முன் கூட்டணி ஆட்சிகளில் இருந்த நிலையற்ற தன்மை போன்றவை தெரிந்திருக்க நியாயம் இல்லைதான். அவர்களைக் கவரும் வகையில், பாஜக., கூட்டணி தங்களது நியாயத்தை தெளிவாக எடுத்துரைத்திருக்க வேண்டும் என்றும், அவர்களின் வாக்குகளை அதிக அளவில் கவர்ந்திருக்க வேண்டும் என்றும் இப்போது கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. 

பொதுவாக, நாடு எங்கும் நிலவிய கடுமையான வெப்பத்தின் தாக்கம், சாதாரண வாக்காளர்களை வாக்குச் சாவடிக்கு அழைத்து வருவதில் சுணக்கம் காட்டியிருப்பதும், எதிர்நிலை வாக்காளர்களை கட்டாயம் வாக்களிக்க உந்தித் தள்ளியிருப்பதும் உ.பி., வங்கம் போன்ற மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டியிருக்கின்றன. மேலும், ஏழு கட்டங்களாக நடைபெற்ற நீண்ட நெடிய தேர்தலானது, பெரும் சோர்வையும் மக்கள் மனதில் வெறுப்பையும் அளித்திருப்பது வெளித்தெரிகிறது. 

18வது மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள், ஜூன் 4, செவ்வாய்க்கிழமை காலை முதல் எண்ணப்பட்டு வந்த போதே, தேர்தலுக்கு முந்தைய பிந்தைய கருத்துக் கணிப்புகளை பிரதிபலிக்காத வகையில், ஆளும் பாஜக., கூட்டணி தரப்புக்கு 300 என்ற அளவிலும், எதிர்த் தரப்புக்கு 200+ என்ற அளவிலும் முன்னிலை நிலவரம் தொடர்ந்து வந்தது. அது நாள் முழுதும் அப்படியே பிரதிபலித்தது. கடந்த தேர்தலில் பாஜக.,வுக்கு விழுந்த வாக்கு சதவீதமும் அப்படியே நீடித்தது.  எனினும், பாஜக., 272 என்ற தனிப் பெரும்பான்மை இடங்களைப் பெற முடியாமல், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன்தான் தொடர்ந்து ஆட்சியை நடத்திச் செல்ல வேண்டிய கட்டாயச் சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இது, கடந்த 1999ம் வருடத்தின் வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியை நினைவுக்குக் கொண்டு வந்திருக்கிறது. 

காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணியில் 28 கட்சிகள் இடம்பெற்றன. தலைவர்கள் பலர் ஒன்று கூடி, ஒற்றை மனிதனாக பிரதமர் மோடியை மட்டுமே குறிவைத்து, எதிர் பிரசாரம் செய்தனர். பிரதமர் மோடி மீது எதிர்க்கட்சிகள் தனிப்பட்ட வகையிலும் கடும் விமர்சனத்தை முன் வைத்தனர். முக்கியமாக, வருடத்துக்கு ஒரு லட்சம் ரூபாய், மகளிருக்கு உதவிப் பணம், விவசாயிகளுக்கு இலவச பணம், சிறுபான்மையினருக்கு மிகப் பெரும் அளவிலான சலுகைகள் என பல்வேறு ஆசைகளைக் காட்டி, தங்கள் தேர்தல் வாக்குறுதிகளாக அளித்து மக்களை திசை திருப்பினர். இந்த வேகத்தால்,  பாஜக.,வுக்கு வர வேண்டிய நடுநிலை வாக்குகள் சற்றே சிதறிப் போனது.  

பாஜக., அதிகம் எதிர்பார்த்த உ.பி., மேற்கு வங்கம், மஹாராஷ்ட்டிரா, ராஜஸ்தான் ஆகிய வடமாநிலங்களில் பின்னடைவைச் சந்தித்ததால், இத்தகைய நிலை ஏற்பட்டிருக்கிறது என்றாலும், தென் மாநிலங்களில் தமிழகம், கேரளம் தவிர்த்து ஓரளவு பாஜக.,வுக்கு கைகொடுத்திருக்கின்றன என்பது ஆறுதல் அளிக்கும் விஷயம்தான்!   

எனவே தான், மூன்றாவது முறையாக (ஹாட்ரிக்) பிரதமர் ஆகும் வாய்ப்பை நரேந்திரமோடி பெற்றிருக்கிறார். சுதந்திர பாரதத்தில் காங்கிரஸ் கட்சியைச் சாராத ஒருவர் மூன்றாவது முறை பிரதமர் ஆவது என்பது இதுவே முதல் முறை. எனவே இந்த வெற்றியை பாஜக., தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். ஏற்கெனவே எதிர்பார்ப்பும் இருந்ததால், பிரதமர் மோடிக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுகளும் வாழ்த்துகளும் உடனடியாக வந்திருக்கின்றன. உலகத் தலைவர்கள் பலர் சமூகத் தளங்களின் வழியே தங்கள் வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளனர்.  

பிரதமர் மோடி, கடந்த 2014ல் முதல்முறையாகப் பதவி ஏற்றது முதல், உள்நாட்டின் சீரமைப்புக்கும், வெளிவிவகாரத் துறைக்கும் தன் கவனத்தை முன்வைத்தார். ஊழலுக்கு எதிராக அவர் எடுத்த நடவடிக்கைகள், ஊழல் குற்றச்சாட்டே விழாத வகையில் பத்தாண்டுகள் ஆட்சியை நகர்த்திச் சென்றது இவை மோடியின் வெற்றி. மோடி செயல்படுத்திய அனைவருக்கும் வங்கிக் கணக்கு, ஆதார் நடைமுறை மற்றும் பண பரிவர்த்தனையை எளிதாக்கியது இவற்றின் வெற்றி அவருக்கு நிச்சயமான ஓரிடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

பாஜக.,வுக்கு மூன்று முக்கிய கொள்கைகள் இருந்தன. காஷ்மீர் விசேஷ அந்தஸ்து 307வது சட்டப்பிரிவு நீக்கம், அயோத்தியில் ராமர் கோயில், பொது சிவில் சட்ட்ம் இம்மூன்றில் முதலிரண்டும் சட்டபூர்வமாக சுமுகமாக நிறைவேறி அவருக்கு நற்பெயரைத் தந்தது.  கறுப்புப்பணம் ஒழிப்பு, பொருளாதார முன்னேற்றம், பழைய சட்டங்களை ஒழித்தல் போன்றவற்றில் கடந்த தேர்தலிலேயே எதிர்பிரசாரம் அதிகம் இருந்தும் மக்கள் வெற்றியைத் தந்தனர். 

காஷ்மீரில் மோடி எடுத்த சில முக்கிய முடிவுகள், ஏழை, விவசாயிகளின் முன்னேற்றம், விவசாயிகளுக்கு உதவித்தொகை, இலவச காஸ், குடிநீர் இணைப்புகள், பிரதான்மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா, மருத்துவக் காப்பீடு, மலிவு விலை மக்கள் மருந்தகங்கள், பெண்களுக்கு அதிகாரம், ஏழைகளுக்கு பிரதமர் மோடியின் வீடு கட்டும் திட்டம், கோவிட் காலத்தில் சிறப்பான முறையில் கையாண்டது, கோவிட் நேரத்தில் மக்கள் தேவைகளுக்கேற்ப பணம், ரேஷன் பொருள்கள் இலவசமாக அளித்து உதவியது என பிரதமர் மோடியின் தலைமையிலான அரசின் சிறப்பான செயல்பாடுகள் அவருக்கு பெரும் வெற்றியைத் தந்துவிடும் என்ற நம்பிக்கை இருந்து வந்தது. அதற்கு ஏற்ப, எதிர்க்கட்சியினர் துர்பிரசாரங்களைத் தவிடுபொடியாக்கும் வகையில் பிரதமர் மோடி சிறப்பான வகையில் திட்டமிட்ட பிரசாரம் மேற்கொண்டார். 

எனவே தான் 400 இடங்களை பாஜக., கூட்டணி பெறும் என்று அவரும் சொல்லி வந்தார். ஆனால் 400ஐ எட்ட விடமாட்டோம் என்று எதிர்க்கட்சியினர் சொன்னபோது, எங்களுக்குத் தேவை 272 இடங்கள் தான், ஆனால் உங்களை நான் 400 வராது என்று சொல்ல வைத்திருக்கிறேன் அல்லவா, அதுதான் வெற்றி என்றார் பிரதமர் மோடி. உண்மையில் பிரதமர் பேச்சின் உள்ளர்த்த நிலையை இப்போது எதிர்க்கட்சிகள் உணர்ந்திருக்கின்றன. ஆட்சிக்குத் தேவையான 272 இடங்களைக் கடந்து மூன்றாவது முறையாக தொடர் வெற்றியை பெற்றிருக்கிறது பாஜக., கூட்டணி! அந்த வகையில் மோடியின் எதிர்பார்ப்பு வீண்போகவில்லை!

Victor as Vanquished & Vanquished as Victor!

0
modi in kanyakumari - 2026
#image_title

Narasimhan Vijayaraghavan

Democracies are strange animals. Take the US of A, the oldest. The Presidential candidate ( POTUS) wins the popular vote across 50 States by three million votes. Yet Hilary Rodham Clinton loses in 2016. Not the first one. Out of the past 6 elections, every Republican President made it to the White House despite losing the popular stakes in the hustings. Strange. Yes.

The U.S. Constitution has devised a peculiar creature called the ‘Electoral College’ comprising identified electors from the 50 States. The winning candidate has to get 272 electors to become POTUS. And the electors come in different shapes and sizes from the fifty different States and popular votes get thrown into the dustbin. That is US democracy for you!
Much like that, we today have this peculiar phenomenon in the Indian General Elections. The India Alliance has sought the resignation of the Prime Minister who led the National Democratic Alloance to an ‘unprecedented third time running’ win, as the ruling dispensation, on the ground that he had suffered a ‘moral’ loss.

It is true that the NDA rhetoric was ‘ Chaar so paar’ – past 400. That was political rhetoric. It was akin to India Alliance suggesting that they were getting 295 plus and ‘defeating NDA lock, stock and barrel’. And they are also reported to be getting into the act of poaching the 3 Ns- Nitish ( Kumar), Naidu ( Chandrababu) and Naveen ( Patmaik). And that is as moral as it comes, in Indian politics!

NDA was a pre poll alliance. They have handsomely crossed the 272 mark. Go back to pre 2014 era after 1984 Rajiv Gandhi win. 290 seats plus would have been treated as hugely satisfying and extremely difficult to accomplish. The leading national parties would have taken it any day and not asked the leader who led them, to ‘resign’.

It is only because Modi led two NDA terms with BJP crossing 272 seats, the perception has gained ground that BJP has lost. Have they? Yes, by the lofty standards or utopian at one level they set for themselves. Otherwise, they are literally two and half times that of INC seats. For the sin of not making the high water mark, after two terms- Narendra Modi has to resign? Ridiculous demand by any yardstick.

We have the Victor perceived by the prejudiced, as Vanquished. And the Vanquished is claiming to be Victorious. One is sure that BJP would take it, in any and every state election or national election, to fall short of a majority themselves but forming the government as THE major coalition partner. No shame in it.
Politics is all about power grab. Might is right. Morality takes a back seat, all the time. INC is a past master at that. All other parties are their juniors, well trained by their ways. It is only that ‘others’ have bettered INC ways and now teaching them back. No party has the moral high ground to assume or occupy in the power game. First Past the Post wins. And by a Simple Majority.

Yes, perception matters in politics. But it cannot become the reality. It is numbers that matter. Failure of NDA to go beyond four hundred taints their win. No doubt. But, they have still Won as the pre poll alliance. That alone is fair game. That alone matters.

Modi’s tweet that it was an ‘unprecedented’ third term win is real. After two terms to triumph to get over anti-incumbency, is no joke. This is a near impossible task. That he set out on the 400 plus path itself sounds mind boggling. One seriously and sincerely felt NDA was setting too high a bar. So it has proved to be. But, still they cleared the primary target of 272 bar. The other side did not. Could not.

While NDA and BJP and Modi & Co may have a lot to introspect, their win is a WIN by any standard and an ‘unprecedented one’. Ultimately, crushing the false propaganda that Indian Democracy was in Danger, Democracy has actually Triumphed, with a strong opposition, say the voters in We the People!

(Writer is a practicing advocate in the Madras High Court)

கன்னியாகுமரி பயணம் குறித்து பிரதமா் நரேந்திர மோடி எழுதிய சிறப்பு கட்டுரை!

kumarimunai modi thavam - 2026
#image_title

விவேகானந்தா் வழியில் கனவை நனவாக்குவோம்!

கன்னியாகுமரி பயணம் குறித்து பிரதமா் நரேந்திர மோடி எழுதிய சிறப்பு கட்டுரை…

என் சக இந்திய மக்களே, ‘அடுத்த 50 ஆண்டுகளை இந்த தேசத்துக்காக மட்டும் நாம் அா்ப்பணிக்க வேண்டும்’ என்று 1897-ல் சுவாமி விவேகானந்தா் கூறினாா். இத்தகைய அழைப்பு விடுக்கப்பட்ட 50 ஆண்டுகளில் 1947-ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றது.

சுவாமி விவேகானந்தா் கூறியதைப் போன்று, நாமும் அடுத்த 25 ஆண்டுகளை தேசத்துக்காக மட்டும் அா்ப்பணிக்க வேண்டும். நமது முயற்சிகள் வருங்கால சந்ததியினருக்கு வலுவான அடித்தளத்தை ஏற்படுத்துவதுடன், வரவிருக்கும் நூற்றாண்டுகள் பாரதத்தை புதிய உச்சத்துக்கு அழைத்துச் செல்லும்.

நாட்டின் ஆற்றல் மற்றும் உற்சாகத்தைப் பாா்க்கும்போது, நாம் விரைந்து முயற்சிப்பதுடன் நாம் அனைவரும் ஒன்றிணைந்தால், லட்சிய பாரதத்தை (வளா்ச்சியடைந்த பாரதத்தை) உருவாக்குவதற்கான இலக்கு வெகுதொலைவில் இல்லை.

ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழாவான, 2024 மக்களவைத் தோ்தல் சனிக்கிழமை (ஜூன் 1) நிறவடைந்துள்ளது. கன்னியாகுமரியில் மூன்று நாள் ஆன்மிகப் பயணத்தை முடித்துவிட்டு தில்லி சென்றேன்.

என் மனம் பல அனுபவங்களாலும் உணா்ச்சிகளாலும் நிரம்பியுள்ளது. எனக்குள் எல்லையற்ற சக்தியின் பிரவாகத்தை உணா்கிறேன். 2024 மக்களவைத் தோ்தல் அமிா்த காலத்தின் முதல் தோ்தலாகும். இந்தத் தோ்தலின்போது இறுதிப் பேரணி என்னை பஞ்சாபில் உள்ள ஹோஷியாா்பூருக்கு அழைத்துச் சென்றது. பஞ்சாப் மாபெரும் குருக்களின் பூமியும், துறவி ரவிதாஸ் அவா்களுடன் தொடா்புடைய பூமியுமாகும். அதன் பிறகு கன்னியாகுமரிக்கு பாரத அன்னையின் காலடியில் வந்து நின்றேன்.

தோ்தல் உற்சாகம் என் இதயத்திலும் மனதிலும் எதிரொலித்தது இயல்பானதே. நானே ஒரு வேட்பாளராக, எனது பிரசாரத்தை எனது அன்புக்குரிய காசி மக்களிடம் ஒப்படைத்துவிட்டு கன்னியாகுமரிக்கு வந்தேன்.

கன்னியாகுமரியில் இதே இடத்தில் சுவாமி விவேகானந்தா் தியானம் செய்தபோது என்ன அனுபவித்திருப்பாா் என்று யோசித்தேன். என் தியானத்தின் ஒரு பகுதி இதே போன்ற எண்ண ஓட்டத்தில் கழிந்தது. இந்தப் பற்றற்ற நிலைக்கு மத்தியில், என் மனம் பாரதத்தின் பிரகாசமான எதிா்காலத்தைப் பற்றியும், பாரதத்தின் குறிக்கோள்களைப் பற்றியும் தொடா்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தது.

கன்னியாகுமரியின் இந்த மண், குறிப்பாக பாரதத்தின் தேசியம் மற்றும் ஒற்றுமை உணா்வின் மீது சந்தேகம் கொண்ட எந்தவொரு நபருக்கும், ஒற்றுமையின் அழிக்க முடியாத செய்தியைத் தெரிவிக்கிறது.

தற்போது, பாரதத்தின் ஆட்சி முறை, உலகிலுள்ள பல நாடுகளுக்கும் சிறந்த முன்னுதாரணமாக மாறியுள்ளது. 25 கோடி மக்களுக்கு அதிகாரமளித்து, அவா்கள் 10 ஆண்டுகளில் வறுமையின் பிடியிலிருந்து மீண்டது இதுவரை கண்டிராதது. மக்களுக்கு உகந்த நல்லாட்சி, முன்னேற்றத்தை விரும்பும் மாவட்டங்கள் மற்றும் முன்னேற்றத்தை விரும்பும் வட்டாரங்கள் (ஊராட்சி ஒன்றியங்கள்) போன்ற புதுமையான நடைமுறைகள், தற்போது உலக அளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

ஏழைகளுக்கு அதிகாரமளித்தல் முதல் கடைக்கோடியில் உள்ள மக்களுக்கும் அரசுத் திட்டங்களின் பலன் சென்றடையச் செய்வதற்கான நமது முயற்சிகள், சமுதாயத்தின் கடைக்கோடியில் இருக்கும் தனிநபா்களுக்கு முன்னுரிமை அளிப்பதில் உலக நாடுகளுக்கு உத்வேகமளித்துள்ளன.

தற்போது, பாரதத்தின் வளா்ச்சி மற்றும் எழுச்சி, பாரதத்திற்கு மட்டுமான சிறந்த வாய்ப்பாக அல்லாமல், உலகெங்கிலுமுள்ள நமது நட்பு நாடுகள் அனைத்திற்குமான ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பாக திகழ்கிறது. ஜி-20 மாநாடு வெற்றி பெற்றதிலிருந்தே, இந்தியாவுக்கு பெரிய வாய்ப்பு அளிக்கப்பட வேண்டுமென்ற கருத்து உலகம் முழுதும் அதிகரித்து வருவதைக் காண முடிகிறது.

21-ம் நூற்றாண்டின் உலகம், பல்வேறு நம்பிக்கைகளுடன் இந்தியாவை எதிா்நோக்கி உள்ளது. எனவே, உலக அரங்கில் முன்னேறிச் செல்ல, நாமும் பல்வேறு மாற்றங்களை மேற்கொள்வது அவசியம். அத்துடன், சீா்திருத்தங்கள்குறித்த நமது பாரம்பரிய சிந்தனைகளை மாற்றிக் கொள்வதும் அவசியம்.

பாரதத்தின் சீா்திருத்தங்கள், பொருளாதார சீா்திருத்தங்களோடு நின்று விடாமல், வாழக்கையின் ஒவ்வோா் அம்சத்திலும், சீா்திருத்தப் பாதையை நோக்கியே நாம் முன்னேறிச் செல்ல வேண்டும். நமது சீா்திருத்தங்களும், 2047-க்குள் ‘லட்சிய பாரதத்தின்’ (வளா்ச்சியடைந்த பாரதம்) எதிா்பாா்ப்புகளுக்கேற்ப அமைய வேண்டும். எனவேதான், சீா்திருத்தம், அதைச் செயல்படுத்துதல், மாற்றியமைத்தல் என்ற தொலைநோக்குப் பாா்வையை நான் வகுத்துள்ளேன். அதன் அடிப்படையில், நமது அதிகார வா்க்கம் செயல்படுவதோடு, மக்கள் பங்கேற்பு என்ற உணா்வோடு மக்களும் இணையும்போது, மாற்றம் நிகழும்.

நம் நாட்டை, ‘வளா்ச்சியடைந்த பாரதம்’ ஆக மாற்றுவதற்கான அடிப்படைக் கொள்கைகளை நாம் மிகச் சிறந்ததாக மாற்ற வேண்டும். நான்கு திசைகளிலும் நாம் விரைந்து பணியாற்றுவது அவசியம்: வேகம், அளவு, வாய்ப்பு மற்றும் தரம். உற்பத்தியோடு சோ்த்து, தரம் மற்றும் ‘குறைபாடு இல்லை-விளைவுகள் இல்லை’ என்ற தாரக மந்திரத்தைப் பின்பற்றுவதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

ஒரு நாடாக, காலங்கடந்த சிந்தனைகள் மற்றும் நம்பிக்கைகளை நாம் மறுபரிசீலனை செய்வதும் அவசியம். அவநம்பிக்கையை தொழிலாகவே கொண்டவா்களின் பிடியிலிருந்து சமூகத்தை நாம் விடுவிப்பதும் அவசியம். எதிா்மறையிலிருந்து விடுபடுவது என்பது, வெற்றிக்கான முதல்படி என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். நோ்மறை எண்ணம் இருந்தால்தான் வெற்றி மலரும்.

20-ம் நூற்றாண்டின் நான்காவது மற்றும் ஐந்தாவது தசாப்தங்களை சுதந்திரப் போராட்டத்சுத்து புதிய உத்வேகம் அளிக்க நாம் பயன்படுத்தியுள்ள வேளையில், 21-ஆம் நூற்றாண்டின் இந்த 25 ஆண்டுகளில், ‘வளா்ச்சியடைந்த இந்தியா’வுக்கு நாம் அடித்தளமிட்டுள்ளேம். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுவது, அந்தக் காலத்தில் பெரும் தியாகமாக கருதப்பட்டது; தற்காலமானது ஒவ்வொருவரின் பெரிய அளவிலான, நீடித்த பங்களிப்பை வலியுறுத்துகிறது.

(மேலே குறிப்பிட்ட கருத்துகள் பிரதமா் மோடி, கன்னியாகுமரியிலிருந்து விமானத்தில் சனிக்கிழமை (ஜூன் 1) தில்லிக்குத் திரும்பியபோது மூன்று மணி நேரத்தில் அவா் எழுதியது.)

தேர்தல் முடிவுகள் வெளியாகும் போது… என்ன செய்வார் மோடி?

pmmodi speech in meeting - 2026
#image_title

தமிழில் / குரல் : ராமஸ்வாமி சுதர்ஸன்

தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளன்று தனது வாடிக்கை குறித்து மோதிஜி

கேள்வி – தேர்தல் முடிவுகள் ஜூன் மாதம் 4ஆம் தேதி.   ஆனா பொதுவா தேர்தல் முடிவுகள் வெளியாகற நாளன்னைக்கு உங்க வாடிக்கை என்னவா இருக்கும்? 

பதில் – பொதுவா அந்த நாட்கள்ல நான்,  கூடுதல் எச்சரிக்கையா இருப்பேன், அந்த நாட்கள்ல.   சில விஷயங்கள்லேர்ந்து விலகியே இருப்பேன்.   நான் 2002ஆம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்றேன்.   நான்,  2001ஆம்  ஆண்டு முதலமைச்சரா ஆனேன் 2002ஆம் ஆண்டு தேர்தல் வந்திச்சு.   நான் ஜெயிக்கறது கடினம்னு பொதுவா கருதப்பட்டிச்சு.   ஒரு ஒண்ணரை மணிவாக்குல என் வீட்டு வாசல்ல மேளம் கொட்ட ஆரம்பிச்சாங்க.  

அப்ப அங்க….. நான் கீழிருந்து, ஒருத்தரை வரச் சொன்னேன்.   அவரு கையில ஒரு கடிதத்தைக் கொண்டு வந்தாரு.   அங்க,  பார்ட்டிக்காரங்க பேர் வெளிய இருக்காங்க.   உங்களுக்கு வாழ்த்து தெரிவிக்கணுங்கறாங்கன்னாரு.  

எனக்கு ஒரு ஒண்ணு ஒண்ணரை மணிக்குத் தான் முதல்ல தெரிய வந்திச்சு, என்ன ரிசல்டுன்னு.   இப்பக்கூட நான், எக்ஸிட் போல் வருது முடிவுகள் வெளியாகுற அன்னைக்குக் கூட கிட்டத்தட்ட,  நான் விலகியே இருக்கேன். 

எதிர்க்கட்சிகள் பயன்படுத்தும் சொல்லான வோட் ஜிஹாதுக்கு மோதிஜியின் பதிலுரை

கேள்வி – ஒவ்வொரு தேர்தல்லயும், மதம் பேசுபொருளாகுது, இப்ப வோட் ஜிஹாத் வந்திருக்கு.   முஸ்லிம்கள் பற்றி பேசப்படுகிறது.   தேர்தல் கடந்து சென்று விடுகிறது, ஆனால் சமூகத்தின் சகோதரத்துவமும், மதநல்லிணக்க இழையும் சேதப்படுகிறதே?

பதில்-  நீங்கள் வெளிப்படுத்தியிருக்கும் கவலை ரொம்ப சரியான ஒன்று தான்.   வோட் ஜிஹாத், ஏதோ, மதரசாவைச் சேர்ந்த ஒரு மௌல்வி கூறியிருந்தார்னா,  அவருடைய புரிதல் தவறானது அப்படீன்னு நாம கருத வாய்ப்பிருக்கு.   நல்லா மெத்தப் படிச்ச ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவங்க,  வோட் ஜிஹாத் பத்திப் பேசும் போது,  அப்ப கவலை அதிகரிக்குது.  

அப்ப கவலை அதிகமாகுது.   இது தவறான பாதையில போயிட்டு இருக்கு.   இப்ப நடக்க விடக் கூடாது.   யாரோ ஏறுக்குமாறா,  பேசற சின்ன நபர்கள் எங்கயும் இருக்க வாய்ப்பிருக்கு அதை ஒரு பெரிய குற்றச்சாட்டா தெரிவிக்கலை.   ஆனா ராஜகுடும்பத்துக்கு நெருக்கமான குடும்பத்தவங்க, நல்லா படிச்ச குடும்பக்காரங்க.   அவங்க இந்தப் பாதையை தேர்ந்தெடுக்கறது,  ரொம்ப கவலையை அளிக்கக்கூடியது.  

தனக்குப் பிடித்த எதிரணித் தலைவர் யார் என்பதைக் கூறுகிறார் மோதிஜி

கேள்வி – எதிரணியில் பல தலைவர்கள் தனிப்பட்ட முறையிலே உங்களை விரும்புகிறார்கள் என்றாலும் மோதி அவர்கள் விரும்புவது யாரை?

பதில் – நான் பேரைச் சொல்றது அவ்வளவு நல்லா இருக்காது இருந்தாலும் பதில் சொல்றேன்.   எதிரெதிர் தரப்பு வக்கீல்களுக்கு இடையில எப்படி மோதல் இருக்கும்?   ஆனா அவங்களோட குடும்ப அளவிலான நட்புல பாதிப்பு இருக்காது.   அரசியல் துறையில கூட, நிறைய விஷயங்கள் நடந்தாலும், நல்ல இணக்கமும் இருக்கு..  

நல்ல இணக்கம் இருக்கு.   எப்படீன்னா,  பிரணவ் முகர்ஜி காங்கிரஸைச் சேர்ந்தவரு.   எனக்கு நினைவிருக்கு என்னென்னா, 2019 தேர்தல்ல,  அவரு சொன்னாரு மோதிஜி, என்னோட….. விஷயம் இல்லை ஆனா, இத்தனை உழைச்சீங்கன்னா உடல்நலத்தை யாரு கவனிப்பாங்கன்னாரு?   

அவரு காங்கிரஸைச் சேர்ந்தவரு, நானோ பிஜேபியைச் சேர்ந்தவன்.   நானோ காங்கிரஸைத் தோக்கடிக்க வேலை செஞ்சிட்டு இருக்கேன்.   2019இல.   இருந்தாலும் எனக்கு ஃபோன் போட்டுச் சொன்னாரு.  

மாமனிதன் மோடி – 2024 தேர்தல் முடிவுகள் மீண்டும் நிரூபிக்கும்!

modi in vellore - 2026
#image_title

— ஆர். வி. ஆர்

நடந்து முடிந்த லோக் சபா தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை முடிந்து நாளையே தேர்தல் முடிவுகள் வெளியாகும். ஆனால் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி இந்தத் தேர்தலில் அமோகமாக வெல்லும், எதிர்க் கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி தோற்கும், என்று இரண்டு நாட்கள் முன்பே பரவலாகத் தெரிந்தது. காரணம், வெளிவாசல் கருத்துக் கணிப்புகள் (exit polls) இந்த முடிவுகளைக் கணித்து அறிவித்தன.

அரசியல் நோக்கர்கள் பலரும் எதிர்பார்த்த தேர்தல் முடிவா இந்தக் கணிப்புகள்? ஆம்.

எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் – ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், லாலு பிரசாத் யாதவ், சரத் பவார், உத்தவ் தாக்கரே, மு. க. ஸ்டாலின், அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் – எதிர்பார்த்த தேர்தல் முடிவும் இதுதானா? ஆம், இதுதான்.

மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி இப்போது ஜெயிக்கும், மத்தியில் மூன்றாவது முறை ஆட்சி அமைக்கும், என்று கணிக்கத் தெரியாத மண்டூகங்கள் அல்ல எதிர்க்கட்சித் தலைவர்கள். அவர்களின் தேர்தல் தோல்வி அவர்களே ஊகித்ததுதான். ஆனால் பிரதமர் மோடியின் பெருமையை, தங்கள் தோல்வியை, மக்களின் முடிவை, ஏற்றுக் கொள்ளும் நேர்மையும் ஜனநாயகப் பக்குவமும் அவர்களிடம் இல்லை.

இந்த லோக் சபா தேர்தலில் ஆறேழு கருத்துக் கணிப்பு அமைப்புகள் வெளிவாசல் கருத்துக் கணிப்பு நடத்தி, அவை எல்லாமே தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெறும், மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் அந்தக் கூட்டணி சராசரியாக சுமார் 360 தொகுதிகளில் வெல்லும், எதிர்க் கட்சிகளின் இண்டி கூட்டணி சுமார் 149 இடங்களை மட்டும் கைப்பற்றும் என்று அறிவித்தன. சற்று கூடக் குறைய தேர்தல் முடிவுகள் அமையலாம். ஆனால் இண்டி கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வென்று ஆட்சி அமைப்பதாக இறுதி முடிவுகள் அமையாது.

தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்பு, இந்த கருத்துக் கணிப்பை நிராகரித்த ராகுல் காந்தி, “இது மோடி ஊடகங்களின் கருத்துக் கணிப்பு. இண்டி கூட்டணி 295 இடங்களில் வெல்லும்” என்று சவாலாகப் பேசினார்.

முன்னதாக, காங்கிரஸ் தலைவர் கார்கேயும் “மக்கள் வெளிப்படுத்திய வெளிவாசல் கருத்துக் கணிப்பின் படி, இண்டி கூட்டணி 295 இடங்களிலாவது வெல்லும்” என்று சொன்னார். காங்கிரஸின் ஜெய்ராம் ரமேஷ் மற்றும் சல்மான் குர்ஷித்தும் அதையே சொன்னார்கள். சமஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவும் அப்படியே 295-ஐ பிடித்துக் கொண்டு பேசினார்.

இண்டி கூட்டணி 295 எம். பி. இடங்களை வென்று ஆட்சி அமைக்கும் என்று ஏன் இந்த எதிர்க் கட்சித் தலைவர்கள் அப்பட்டமாகப் பொய் பேசினார்கள்? தேர்தல் முடிவுகள் அதிகாரபூர்வமாக வெளிவந்தவுடன், தயங்காமல் இன்னொரு பெரிய பொய்யைச் சொல்லத் தங்களைத் தயார் செய்து கொள்கிறார்களா? அந்தப் பெரிய பொய் என்ன என்பதை அவர்களில் ஒருவரான அரவிந்த் கேஜ்ரிவால் இப்போதே சொல்லிவிட்டார்.

கேஜரிவால் சொன்னது: “வெளிவாசல் கருத்துக் கணிப்புகள் எல்லாம் போலி. ஓட்டு எண்ணுவதற்கு மூன்று நாட்கள் முன்பு ஏன் அவர்கள் இதைச் செய்ய வேண்டும்? இதற்கான ஒரு விளக்கம்: அவர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு செய்யப் பார்க்கிறார்கள்.”

கேஜ்ரிவால் சொல்ல வருவது இதுதான்: ‘தேர்தலில் மக்கள் நிஜமாக வாக்களித்தபடி, இண்டி கூட்டணிதான் வென்று ஆட்சி அமைக்க வேண்டும். ஆனால் தேசிய ஜனநாயகக் கூட்டணி வென்று ஆட்சி அமைப்பதாகத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப் பட்டால், அது அவர்களின் போலியான வெற்றி. அப்படி நடந்தால், தேர்தல் ஆணையமும் பாஜக-வும் கூட்டு சதி செய்து வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்படச் செய்து, இண்டி கூட்டணி தோற்றதாகக் காண்பித்து ஜனநாயகத்தையும் மோசடி செய்துவிட்டார்கள் என்று அர்த்தம்.’ கூசாமல், முகத்தில் சலனம் இல்லாமல், பொய் பேசுவது கேஜ்ரிவாலுக்குக் கைவந்த கலை.

“எதுவாக இருந்தாலும், வாக்குப் பதிவில் மக்களின் முடிவு தெரிந்தபின் எல்லாக் கட்சிகளும் அதை ஏற்பது ஜனநாயகத்தில் அவசியம். அதன்படி புதிய அரசு அமைந்து நாடு முன்னேறட்டும்” என்று எதிர்க் கட்சிகள் பேசி இருந்தால் நல்லது. அத்தகைய உயர்ந்த ஜனநாயகப் பண்பு நமது எதிர்க் கட்சிகளிடம் இல்லை.

அது இல்லாவிட்டாலும், குறைந்த பட்சம், “வெளிவாசல் கருத்துக் கணிப்புகள் என்ன சொன்னாலும், தேர்தல் முடிவுகள் என்ன என்று நாம் மூன்று நாட்களில் பார்க்கப் போகிறோம். பிறகு எங்கள் கருத்தைச் சொல்கிறோம்” என்று மதிப்பாகவாவது எதிர்க் கட்சித் தலைவர்கள் பேசி இருக்கலாம். ஆனால் எதிர்க் கட்சிகளின் அரசியல் உலகில் மதிப்பு மரியாதை என்பது கிடையாது. எல்லாம் சின்னத்தனம்.

வாக்கு எண்ணிக்கை முடிந்து தேர்தல் முடிவுகள் தெரிவதற்கு ஒரு நாள் முன்பாக, சோனியா காந்தி மட்டும் வேறு வழி இல்லாமல் “நாம் பொறுத்திருப்போம். வெளிவாசல் கருத்துக் கணிப்புகளுக்கு மாறாக தேர்தல் முடிவுகள் அமையும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று பின்னால் எப்படியும் பேச வசதியாக, இப்படியும் அப்படியுமாகச் சொல்லி இருக்கிறார்.

எல்லா எதிர்க் கட்சிகளும் சேர்ந்து, ஒரு எண்ணத்தில் ஒன்றுபடுகிறார்கள். அதாவது, ‘மக்களின் தேர்வு மோடி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியாக இருந்தாலும், நாம் ஏன் அதை ஏற்கவேண்டும்? தேர்தல் ஆணையத்தின் நன்மதிப்பை, அதன் நடு நிலைமையை, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் நம்பகத் தன்மையை, நாம் இழித்தாலும் பழித்தாலும் பரவாயில்லை. அந்த ஆணையத்தின் சிறப்பான பணிகளால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை நாம் உபயோகிப்பதால், ஜனநாயக உலகில் இந்தியாவுக்குக் கிடைக்கும் நற்பெயர் ரிப்பேர் ஆனாலும் பரவாயில்லை. நமக்கு வேண்டியது, மோடி பிரதமர் ஆகக் கூடாது, பாஜக பெரிய சக்தியாக இருக்கக் கூடாது.’

‘பாஜக-வின் முக்கியத் தலைவராக மோடி இருந்தால், அதுவும் அவர் பிரதமராக இருந்தால், நாம் விரும்பியபடி பெர்பாமன்ஸ் செய்ய முடியவில்லை. எது எக்கேடு கேட்டால் என்ன? மேலும் மேலும் நாம் கஷ்ட-நஷ்டப் பட முடியாது. இதில் கோர்ட் கேஸ்கள் வேறு புதுசு புதுசாக வருகின்றன. எல்லாவற்றையும் தாங்க முடியாது. எந்தத் தீர்ப்பு யாருக்கு எதிராக எப்போது வருமோ? அதனால் எதிர்க் கட்சித் தலைவர்கள் ஒன்று சேர்ந்து, மோடியின் வெற்றிக்கு வகை செய்யும் எதையும் தாம் தூம் என்று கண்டபடி எதிர்ப்போம், அவரை வீழ்த்த கன்னாபின்னா பேச்சு எதையும் பேசுவோம். மான அவமான சிந்தனைகள் நமக்கு உதவாது.’

இந்த எண்ணம்தான் எதிர்க் கட்சித் தலைவர்கள் அனைவரையும் பிதற்றலாக, பைத்தியக்காரத்தனமாக, வில்லத்தனமாக, நமது தேச நலன்களையும் ஜனநாயக நெறிகளையும் காலில் நசுக்கும் விதமாகப் பேச வைக்கிறது.

மோடி தலைமையிலான மத்திய அரசு, நாட்டுக்குச் செய்த பணிகளும் நன்மைகளும் அசாத்தியமானவை, உலக அளவில் நமக்குப் பெருமை சேர்ப்பவை. அவற்றை நாம் கண்ணால் காணலாம், எண்களில் அளக்கலாம்.

எளிதில் அளக்க முடியாத ஒரு பெருமையும் மகிமையும் மோடி என்ற மனிதனின் மறு பக்கத்திற்கு உண்டு. அவர் ஒரு மாமனிதன் என்பதற்கு அதுவும் சம அளவில் முக்கியமானது. அது என்னவென்றால்: நாட்டின் சுயநல தேச விரோத எதிர்க் கட்சிகளைத் தேர்தலில் வென்று, அவைகளைப் பத்தாண்டுகளாக மத்திய ஆட்சி அதிகாரத்திலிருந்து தள்ளி வைத்திருப்பது. வரும் ஐந்தாண்டுகளுக்கும் இந்தப் பேறு நமக்குக் கிடைக்கும்.

மோடி இந்தியாவுக்குச் செய்திருக்கும் மிகப் பெரிய சேவை இது. மோடியின் சேவை இன்னும் பற்பல ஆண்டுகள் நாட்டுக்குத் தேவைதானே?

Author: R Veera Raghavan, Advocate, Chennai
(veera.rvr@gmail.com)
https://rvr-india.blogspot.com

வெற்றிக்காக ஆண்டாள் கோயிலில் ராதிகா பிரார்த்தனை!

radhika saratkumar in srivillputhur - 2026
#image_title

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் ராதிகா சரத்குமார் தரிசனம் செய்தார்.

ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் நடிகை ராதிகா மற்றும் அவரது கணவர் சரத்குமார்இன்று காலை சாமி தரிசனம் செய்ய வந்தனர்

கோவிலுக்கு வருகை தந்த அவர்களை பாரதிய ஜனதா கட்சி மேற்கு மாவட்ட தலைவர் சரவணத்துரை ராஜா மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்து கோவிலுக்கு அழைத்து சென்றனர். கோவிலில் ஆண்டாள் ரங்க மன்னார் சன்னதியில் ராதிகா சரத்குமார் சுமார் 15 நிமிடங்கள் தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து தங்க கோபுரம் கண்ணாடி மாளிகை தங்கத்தேர் ஆகியவற்றை தரிசனம் செய்துவிட்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, நடப்பவை நல்லவையாக நடக்கட்டும் பொறுத்திருந்து பார்ப்போம். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று கூறினார்.

இதனைத்தொடர்ந்து மணவாள மாமுனிகள் மடத்தின் ஜீயர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சடகோபராமானுஜ ஸ்வாமிகளை சந்தித்து ஆசி பெற்று சென்றனர்