ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் ராதிகா சரத்குமார் தரிசனம் செய்தார்.
ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் நடிகை ராதிகா மற்றும் அவரது கணவர் சரத்குமார்இன்று காலை சாமி தரிசனம் செய்ய வந்தனர்
கோவிலுக்கு வருகை தந்த அவர்களை பாரதிய ஜனதா கட்சி மேற்கு மாவட்ட தலைவர் சரவணத்துரை ராஜா மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்து கோவிலுக்கு அழைத்து சென்றனர். கோவிலில் ஆண்டாள் ரங்க மன்னார் சன்னதியில் ராதிகா சரத்குமார் சுமார் 15 நிமிடங்கள் தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து தங்க கோபுரம் கண்ணாடி மாளிகை தங்கத்தேர் ஆகியவற்றை தரிசனம் செய்துவிட்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, நடப்பவை நல்லவையாக நடக்கட்டும் பொறுத்திருந்து பார்ப்போம். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று கூறினார்.
இதனைத்தொடர்ந்து மணவாள மாமுனிகள் மடத்தின் ஜீயர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சடகோபராமானுஜ ஸ்வாமிகளை சந்தித்து ஆசி பெற்று சென்றனர்