தமிழில் / குரல் : ராமஸ்வாமி சுதர்ஸன்
தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளன்று தனது வாடிக்கை குறித்து மோதிஜி
கேள்வி – தேர்தல் முடிவுகள் ஜூன் மாதம் 4ஆம் தேதி. ஆனா பொதுவா தேர்தல் முடிவுகள் வெளியாகற நாளன்னைக்கு உங்க வாடிக்கை என்னவா இருக்கும்?
பதில் – பொதுவா அந்த நாட்கள்ல நான், கூடுதல் எச்சரிக்கையா இருப்பேன், அந்த நாட்கள்ல. சில விஷயங்கள்லேர்ந்து விலகியே இருப்பேன். நான் 2002ஆம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்றேன். நான், 2001ஆம் ஆண்டு முதலமைச்சரா ஆனேன் 2002ஆம் ஆண்டு தேர்தல் வந்திச்சு. நான் ஜெயிக்கறது கடினம்னு பொதுவா கருதப்பட்டிச்சு. ஒரு ஒண்ணரை மணிவாக்குல என் வீட்டு வாசல்ல மேளம் கொட்ட ஆரம்பிச்சாங்க.
அப்ப அங்க….. நான் கீழிருந்து, ஒருத்தரை வரச் சொன்னேன். அவரு கையில ஒரு கடிதத்தைக் கொண்டு வந்தாரு. அங்க, பார்ட்டிக்காரங்க பேர் வெளிய இருக்காங்க. உங்களுக்கு வாழ்த்து தெரிவிக்கணுங்கறாங்கன்னாரு.
எனக்கு ஒரு ஒண்ணு ஒண்ணரை மணிக்குத் தான் முதல்ல தெரிய வந்திச்சு, என்ன ரிசல்டுன்னு. இப்பக்கூட நான், எக்ஸிட் போல் வருது முடிவுகள் வெளியாகுற அன்னைக்குக் கூட கிட்டத்தட்ட, நான் விலகியே இருக்கேன்.
எதிர்க்கட்சிகள் பயன்படுத்தும் சொல்லான வோட் ஜிஹாதுக்கு மோதிஜியின் பதிலுரை
கேள்வி – ஒவ்வொரு தேர்தல்லயும், மதம் பேசுபொருளாகுது, இப்ப வோட் ஜிஹாத் வந்திருக்கு. முஸ்லிம்கள் பற்றி பேசப்படுகிறது. தேர்தல் கடந்து சென்று விடுகிறது, ஆனால் சமூகத்தின் சகோதரத்துவமும், மதநல்லிணக்க இழையும் சேதப்படுகிறதே?
பதில்- நீங்கள் வெளிப்படுத்தியிருக்கும் கவலை ரொம்ப சரியான ஒன்று தான். வோட் ஜிஹாத், ஏதோ, மதரசாவைச் சேர்ந்த ஒரு மௌல்வி கூறியிருந்தார்னா, அவருடைய புரிதல் தவறானது அப்படீன்னு நாம கருத வாய்ப்பிருக்கு. நல்லா மெத்தப் படிச்ச ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவங்க, வோட் ஜிஹாத் பத்திப் பேசும் போது, அப்ப கவலை அதிகரிக்குது.
அப்ப கவலை அதிகமாகுது. இது தவறான பாதையில போயிட்டு இருக்கு. இப்ப நடக்க விடக் கூடாது. யாரோ ஏறுக்குமாறா, பேசற சின்ன நபர்கள் எங்கயும் இருக்க வாய்ப்பிருக்கு அதை ஒரு பெரிய குற்றச்சாட்டா தெரிவிக்கலை. ஆனா ராஜகுடும்பத்துக்கு நெருக்கமான குடும்பத்தவங்க, நல்லா படிச்ச குடும்பக்காரங்க. அவங்க இந்தப் பாதையை தேர்ந்தெடுக்கறது, ரொம்ப கவலையை அளிக்கக்கூடியது.
தனக்குப் பிடித்த எதிரணித் தலைவர் யார் என்பதைக் கூறுகிறார் மோதிஜி
கேள்வி – எதிரணியில் பல தலைவர்கள் தனிப்பட்ட முறையிலே உங்களை விரும்புகிறார்கள் என்றாலும் மோதி அவர்கள் விரும்புவது யாரை?
பதில் – நான் பேரைச் சொல்றது அவ்வளவு நல்லா இருக்காது இருந்தாலும் பதில் சொல்றேன். எதிரெதிர் தரப்பு வக்கீல்களுக்கு இடையில எப்படி மோதல் இருக்கும்? ஆனா அவங்களோட குடும்ப அளவிலான நட்புல பாதிப்பு இருக்காது. அரசியல் துறையில கூட, நிறைய விஷயங்கள் நடந்தாலும், நல்ல இணக்கமும் இருக்கு..
நல்ல இணக்கம் இருக்கு. எப்படீன்னா, பிரணவ் முகர்ஜி காங்கிரஸைச் சேர்ந்தவரு. எனக்கு நினைவிருக்கு என்னென்னா, 2019 தேர்தல்ல, அவரு சொன்னாரு மோதிஜி, என்னோட….. விஷயம் இல்லை ஆனா, இத்தனை உழைச்சீங்கன்னா உடல்நலத்தை யாரு கவனிப்பாங்கன்னாரு?
அவரு காங்கிரஸைச் சேர்ந்தவரு, நானோ பிஜேபியைச் சேர்ந்தவன். நானோ காங்கிரஸைத் தோக்கடிக்க வேலை செஞ்சிட்டு இருக்கேன். 2019இல. இருந்தாலும் எனக்கு ஃபோன் போட்டுச் சொன்னாரு.