டி-20 உலகக் கோப்பை போட்டி – 03.06.2024 வரை
- முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
2024ஆம் ஆண்டிற்கான டி-20 உலகக் கோப்பை போட்டி 27.05.2024 அன்று அமெரிக்காவில் கனடா மற்று நேபாள நாடுகளின் அணிகளுக்கிடையில் பயிற்சி ஆட்டத்துடன் தொடங்கியது. கனடா அணி (183/7) நேபாள அணியை (19.3 ஓவரில் 120) 63 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
இரண்டாவது பயிற்சி ஆட்டம் 28 அன்று மேற்கிந்தியத் தீவில் ஓமன் அணிக்கும் பாப்புவா நியூ கினியா அனிக்கும் இடையே நடந்தது. இந்தப்போட்டியில் ஓமன் அணி (141/7) பாப்புவா நியூ கினியா அணியை (137/9) 3 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
மூன்றாவது பயிற்சி ஆட்டம் 28 அன்று மேற்கு இந்தியத் தீவுகளில் நமீபியா அணிக்கும் (18.5 ஓவர்களில் 135/5) உகாண்டா அணிக்கும் (134/8) இடையே நடந்தது. நமீபியா அணி உகாண்டா அணியை 5 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
அதே நாள் ஃப்ளோரிடாவில் நடைபெற்ற மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணி (19 ஓவரில் 161) நெதர்லாந்து அணியிடம் (181/6) 20 ரன்கள் வித்தாசத்தில் தோவியியைச் சந்தித்தது. 28ஆம் தேதி அன்றே அமெரிக்காவில் டல்லாஸில் நடைபெற இருந்த ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.
29ஆம் தேதி போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்ற ஆட்டம் பாதியில் நின்றுபோனது. அடுத்த நாள் மேற்கு இந்தியத் தீவுகள் தாருபாவில் நடந்த ஆட்டமும் பாதியில் நின்று போனது. 30ஆம் தேதி அமெரிக்காவில் டல்லாஸில் நடைபெற இருந்த ஆட்டமும் ரத்தானது.
இந்த வரிசையில் ஜூன் 1ஆம் நாள் இந்தியா வங்கதேசம் இடையே நியூயார்க் நகரில் ஒரு பயிற்சி ஆட்டம் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று இந்திய அணி முதலில் மட்டையாட வந்தது. ரோஹித் ஷர்மாவும் யஶஸ்வீ ஜெய்ஸ்வாலுக்குப் பதிலாக சஞ்சு சாம்சனும் தொடக்கவீரர்களாக களம் இறங்கினர். விராட் கோலி ஆடவில்லை.
இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கட் இழப்பிற்கு 182 ரன் எடுத்தது. ரோஹித் ஷர்மா 23, ரிஷப் பந்த் 53, சூரியகுமார் யாதவ் 31, ஷிவம் துபே 14, ஹார்திக பாண்ட்யா 40 ரன் எடுத்தனர். இரண்டாவதாக ஆடவந்த வங்கதேச அணி 20 ஓவரில் 9 விக்கட் இழப்பிற்கு 122 ரன் எடுத்தது. அந்த அணியின் மகமத்துல்லா அதிக அளவாக 40 ரன் எடுத்தார். இந்திய அணியில் அர்ஷதீப் சிங், ஷிவம் துபே இருஅவரும் தலா 2 விக்கட் எடுத்தனர். பும்ரா, சிராஜ், ஹாதிக், அக்சர் படேல் ஆகியோர் தலா ஒரு விக்கட் எடுத்தனர். இவ்வாறு இந்திய அணி வெற்றியோடு தொடங்கியது