December 5, 2025, 4:27 PM
27.9 C
Chennai

T20 WC 2024: முதல் சுற்று ஆட்டங்களில் முக்கியமான தகவல்கள்!

t20 worldcup - 2025
#image_title

டி20 முதல் சுற்று ஆட்டங்கள் 05.06.2024 வரை

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

          டி20 உலகக் கோப்பௌ போட்டி 01.06.2024 அன்று தொடங்கின. ஆட்டங்கள் அமெரிக்காவிலும் மேற்கு இந்தியத் தீவுகளிலும் நடக்கின்றன. 05.06.2024 வரை நடந்த ஆட்டங்கள் பற்றி பார்க்கலாம்.

          இந்தப் போட்டியில் 20 அணிகள் பங்கேற்கின்றன. அவை குரூப் A, B, C, D என நான் கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. 05.06.2024 வரை அணிகள் ஒவ்வொரு குரூப்பிலும் ஆடிய ஆட்டங்களின் வழி பெற்ற புள்ளிகள் கீழே உள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளன.

அட்டவணை

குரூப் Aகுரூப் Bகுரூப் Cகுரூப் D
இந்தியா – 2 பாகிஸ்தான், கனடா – 0 அயர்லாந்து 0 அமெரிக்கா ஐக்கிய நாடுகள் – 2ஆஸ்திரேலியா, நமீபியா 2 ஸ்காட்லாந்து 1 ஓமன் 0 இங்கிலாந்து 1நியூசிலாந்து, மேற்கு இந்தியத் தீவுகள் 2 ஆப்கானிஸ்தான் 2 பாபுவா நியூகினியா 0 உகாண்டா 2தென் ஆப்பிரிக்கா 2 இலங்கை 0 வங்கதேசம், நேபாளம் 0 நெதர்லாந்து 2

          முதல் ஆட்டம் 01.06.2024 அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் உள்ள மைதானத்தில் கனடா அணிக்கும் (194/5)  அமெரிக்க ஐக்கிய நாடுகள் அணிக்கும் இடையே நடந்தது (197/3). கனடா அணியில் நவ்நீத் தஹ்லிவால் 61 ரன், நிக்கோலஸ் கிர்டொன் 51 ரன், ஷ்ரேயாஸ் மொவ்வா 32 ரன் அடித்தனர். அமெரிக்க அணியில் ஆன்றிஸ் கௌஸ் 65 ரன்னும் ஆரோன் ஜோன்ஸ் 94 ரன்னும் அடித்தனர் அமெரிக்கா 7 விக்கட் வித்தியாசத்தில் வென்றது. ஆரோன் ஜோன்ஸ் ஆடிய அதிரடி ஆட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

          02.06.2024 அன்று மே.இ. தீவுகளில் உள்ள கயானா ப்ராவிடன்ஸ் மைதானததில் பாப்புவா நியூ கினியா (136/8) மேற்கு இந்தியத் தீவுகள் (13.7 ஓவரில் 137/5) அணிகளுக்கு இடையே ஆட்டம் நடைபெற்றது. மேற்கு இந்தியத் தீவுகள் 5 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          03.06.2024 மூன்று ஆட்டங்கள் நடந்தன. முதல் ஆட்டம்  பிரிட்ஜ் டவுனில் ஓமன் (19.4 ஓவரில் 109) நமீபியா (20 ஓவரில் 109/6) அணிகளுக்கிடையே நடந்தது. இரண்டு அணிகளும் சம்மான ரன் எடுக்க ஆட்டம் சூப்பர் ஓவர் வரை சென்றது.  சூப்பர் ஓவரில் நமீபியா வென்றது. இரண்டாவது ஆட்டம் நியூயார்க்கில் ஆஃப்கானிஸ்தான் (183/5), உகாண்டா (16 ஓவரில் 58) அணிகளுக்கிடையே நடந்தது. இதில்  ஆஃப்கானிஸ்தான் 125 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

மூன்றாவது ஆட்டம் இலங்கை (77) தெ ஆப்பிரிக்கா (16.2 ஓவரில் 80/4) அணிகளுக்கிடையே நடந்தது. இலங்கை அணி தெ ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர்களைச் சமாளிக்க முடியாமல் 77 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. அதன் பின்னர் தென் ஆப்பிரிக்கா விளையாடி 6 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          04.06.2024  – அன்று இரண்டு ஆட்டங்கள் நடந்தன. முதல் ஆட்டம்  பிரிட்ஜ்டவுனில் ஸ்காட்லாந்து (10 ஓவரில் 90) இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டம் கைவிடப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படது. இது இங்கிலாந்து அணிக்கு ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இரண்டாவது ஆட்டம் டல்லாஸில் நேபாளம் (106), நெதர்லாந்து (18.4 ஓவரில் 109/4) அணிகளுக்கிடையே நடந்தது. இதில் நெதர்லாந்து அணி 6 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          05.06.2024 அன்று மூன்று ஆட்டங்கள் நடந்தன முதல் ஆட்டம் நியூயார்க்கில் அயர்லாந்து (96), இந்தியா (12.2 ஓவரில் 97/2) அணிகளுக்கிடையே நடந்தது.  இந்திய அணி 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, அயர்லாந்து அணி பேட்டிங் செய்தது.

          அயர்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆண்ட்ரியு பாப்பிர்னி மற்றும் பால் ஸ்டிர்லிங் களமிறங்கினர். இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாத அயர்லாந்து பேட்டர்கள் மளமளவென விக்கெட்டைப் பறிகொடுத்தனர். பால் ஸ்டிர்லிங் 2 ரன்னிலும், ஆண்ட்ரியு பால்பிர்னி 5 ரன்னிலும், லோர்கன் டக்கர் 10 ரன்னிலும், ஹாரி டெக்டர் 4 ரன்னிலும், குர்டி கேம்பெர் 12 ரன்னிலும், ஜார்ஜ் டாக்ரெல் 3 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.

          அயர்லாந்து அணி 9.4 ஓவர்களில் 46 ரன்களுக்கு எல்லாம் 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது. ஆனால், அயர்லாந்து வீரர்களில், கரேத் டெலானி மட்டும் அதிரடியாக விளையாடி ரன் குவித்தார். மறுமுனையில், மார்க் அடைர் 3 ரன்னிலும், பேரி மெக்கார்த்தி 0 ரன்னிலும், ஜோஷுவா லிட்டில் 14 ரன்னிலும் அவுட் ஆனார்கள். மறுமுனையில் உறுதியாக விளையாடிய கரேத் டெலானி 14 பந்துகளில் 26 ரன்கள் எடுத்திருந்தபோது சிராஜால் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

          இதனால், இந்திய அணி வீரர்களின் பந்துவீச்சில் தாக்குப்பிடிக்க முடியாத அயர்லாந்து அணி 16 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 96 ரன்களில் சுருண்டது. இந்திய அணி தரப்பில், ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டுகளும் அர்ஷ்தீப் சிங், பும்ரா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

          இதையடுத்து, 97 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் சர்மா மற்று விராட் கோலி களமிறங்கினர். அயர்லாந்து அணி பந்துவீச்சாளர் மார்க் அடைர் தொடக்கமே அதிர்ச்சி அளித்தார். விராட் கோலி 1 ரன் மட்டுமே எடுத்து, மார்க் அடைர் பந்தில், பெஞ்சமினிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, ரிஷப் பண்ட் பேட்டிங் செய்ய வந்தார்.

          அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா 37 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். ஆனால், அவர் காயம் காரணமாக பெவிலியன் சென்றார். அடுத்து சூர்யகுமார் யாதவ் வந்தார். அவர் 2 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பெஞ்சமின் ஒயிட் பந்தில், ஜார்ஜ் டோக்ரெல் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த ஷிவம் துபே 2 பந்துகளை மட்டுமே சந்தித்தார். ஆனால், அதற்குள் ரிஷப் பண்ட் 26 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

          இந்திய அணி, 12,2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 7 முறை மோதியுள்ளன. 7 ஆட்டங்களிலும் இந்தியாவே வெற்றி கண்டுள்ளது.

          இந்தப் போட்டியில் ரோஹித் ஷர்மாவும் விராட் கோலியும் தொடக்க வீரர்களாக இறங்கினர். ஆனால் கோலி சரியாக விளையாடவில்லை. சூர்யகுமாரும் சரியாக விளையாட வில்லை. எனவே ஒரு அணியாக இந்திய அணி சரியாக விளையாடவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

          இரண்டாவது ஆட்டம் பாப்புவா நியூ கினியா (77), உகாண்டா (18.2 ஓவரில் 78/7) அணிகளுக்கிடையே நடந்தது.   உகாண்டா அணி 3 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. மூன்றாவது ஆட்டம் பிரிட்ஜ்டவுனில் ஆஸ்திரேலியா (164/5) ஓமன் (125/9) அணிகளுக்கிடையே நடந்தது. இதில்  ஆஸ்திரேலியா 39 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இந்தியா அயர்லாந்து ஆட்டத்தில் ரோஹித் ஷர்மாவின் சாதனைகள்

          இந்தியா அயர்லாந்து ஆட்டத்தில் ரோஹித் ஷர்மா 37 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார். அவரது ஆட்டத்தால் திணறிய அயர்லாந்து அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் ரன் குவித்த ரோஹித் சர்மா சர்வதேச டி20 போட்டிகளில் 4000 ரன்கள் என்ற மைல்கல்லை கடந்தார். மேலும், சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 4026 ரன்கள் அடித்து, பாபர் அசாமை முந்தி இரண்டாம் இடத்தை பிடித்தார் ரோஹித் சர்மா. மேலும், டி20 உலக கோப்பை தொடரில் மட்டும் 1000 ரன்களை கடந்தார்.

          இந்த போட்டியில் அவர் மூன்று சிக்ஸ் அடித்திருந்தார். அதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக 600 சிக்ஸர்களை அடித்த முதல் வீரர் என்ற இமாலய சாதனையை படைத்திருக்கிறார். மேலும், ஐசிசி தொடர்களில் 100 சிக்ஸர்களை அடித்த ஒரே இந்திய வீரர் என்ற சாதனையும் அவர் செய்துள்ளார். சர்வதேச டி20 போட்டிகளில் குறைந்த பந்துகளில் 4000 ரன்களை அடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். அதாவது விராட் கோலி மற்றும் பாபர் அசாமை விட மிகக் குறைந்த பந்துகளில் 4000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டி இருக்கிறார்.

          அது அதுமட்டுமின்றி ஒரு நாள் போட்டி, டெஸ்ட் போட்டி மற்றும் சர்வதேச டி20 போட்டிகள் என மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் தனித் தனியாக 4000 ரன்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற மிகப்பெரிய சாதனையையும் ரோஹித் சர்மா செய்துள்ளார். இதற்கு முன் விராட் கோலி மட்டுமே அந்த சாதனையை செய்திருந்தார். மேலும், இந்திய அணியின் கேப்டனாக அதிக வெற்றிகளை பெற்று இருக்கிறார். முன்பு தோனி இந்திய அணியின் கேப்டனாக 42 வெற்றிகளை பெற்றுக் கொடுத்த நிலையில், ரோஹித் சர்மா 43 வெற்றிகளை பெற்றுக் கொடுத்து கேப்டனாக சாதனை படைத்து இருக்கிறார்.

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள்

600* – ரோஹித் சர்மா (இந்தியா)

553 – கிறிஸ் கெய்ல் (மேற்கு இந்தியத் தீவுகள்)

476 – ஷாஹித் அப்ரிடி (பாகிஸ்தான்)

398 – பிரண்டன் மெக்கல்லம் (நியூசிலாந்து)

டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள்

1142 ரன்கள் (26 இன்னிங்ஸ்) – விராட் கோலி (இந்தியா)

1016 ரன்கள் (31 இன்னிங்ஸ்) – மஹேலா ஜெயவர்த்தனே (இலங்கை)

1015* ரன்கள் (37 இன்னிங்ஸ்) – ரோஹித் சர்மா (இந்தியா)

965 ரன்கள் (31 இன்னிங்ஸ்) – கிறிஸ் கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்)

சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் (ஆண்கள்)

4038 ரன்கள் – விராட் கோலி (110 இன்னிங்ஸ்)

4026 ரன்கள் – ரோஹித் சர்மா (144 இன்னிங்ஸ்)

4023 ரன்கள் – பாபர் ஆசம் (112 இன்னிங்ஸ்)

குறைந்த பந்துகளில் 4000 சர்வதேச டி20 ரன்கள்

ரோஹித் சர்மா – 2860

விராட் கோலி – 3000

பாபர் ஆசம் – 3079

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories