Home Blog Page 225

சம்ஸ்க்ருத நியாயமும் விளக்கமும் (40): சிம்ஹ மேஷ ந்யாய:

samskrita nyaya - 2026

தெலுங்கில் – பி எஸ் சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்

சிம்ஹ மேஷ ந்யாய: – சிம்ஹம் – சிங்கம். மேஷம் – ஆடு.

இது ஒரு பிரபலமான நியாயம் இது ஏதோ விலங்குகளின் கதையல்ல. இந்த நியாயத்தில் இரண்டு விதமான செய்திகள் உள்ளன.

ஒன்று வேதாந்த அர்த்தம். நம் உண்மை சொரூபத்தை அறிவது. இரண்டாவது உலகியல் அர்த்தம். ‘நீ வலிமை கொண்டவன்’ என்ற தன்னம்பிக்கையை அளிப்பது.

வேதாந்த வகுப்புகளில் இந்த ‘சிம்ஹ மேஷ’ நியாயத்தொடு தொடர்புடைய கதையை எடுத்துக்காட்டுவது வழக்கம்.

ஒரு ஊரில் ஒரு ஆடு மேய்ப்பவன் இருந்தான். அவன் ஒருநாள் ஆடுகளை மேய்த்து வருகையில் ஒரு சம்பவம் நேர்ந்தது. நிறைமாத கர்ப்பத்தோடு இருந்த ஒரு சிங்கத்தை ஒரு வேடுவன் அம்பு விட்டு அடித்தான். அந்தச் சிங்கம் ஒரு குட்டியை ஈன்றுவிட்டு ஓடி மறைந்தது.

ஆடு மேய்ப்பவன் கருணையோடு அந்தச் சிங்கக் குட்டியை எடுத்து வந்து ஆடுகளோடு சேர்த்து வளர்த்து வந்தான். அது ஆடுகளைப் போலவே இலை, தழைகளைத் தின்று, வளர்ந்து வந்தது. ஆடுகளைப் போலவே ம்மே ம்மே என்று கத்தியது.

ஒருநாள் ஒரு பெரிய சிங்கம் அந்த ஆட்டுமந்தையில் இருந்த சின்னச் சிங்கத்தைக் கண்டது. ஆடுகளோடு சேர்த்து அதுவும் ஓட்டம் பிடித்தது. இயல்பான பகைவர்களின் இடையில் ஆட்டைப் போலவே நடந்து கொண்ட சிங்கக் குட்டியை, பெரிய சிங்கம் பிடித்து நிறுத்தியது. புதிய விலங்கைப் பார்த்து அஞ்சிய சிங்கக் குட்டி, ம்மே ம்மே என்று கத்தியது. பெரிய சிங்கம், அஞ்சாதே என்று கூறி சிங்கக் குட்டியை ஒரு நதியருகில் அழைத்துச் சென்று, அதன் நிழலை அதில் காண்பித்தது. “சரியாகப் பார். நாம் இருவரும் ஒன்று போல் இருக்கிறோம். உன் பிடரி மயிரைப் பார்” என்று சிங்கக் குட்டிக்கு உண்மையை உணர்த்தியது. கர்ஜனை செய்வதற்குக் கற்றுக் கொடுத்தது. குட்டிச் சிங்கத்தை ஆட்டு மந்தையில் இருந்து விலக்கி, தன்னோடு அழைத்துச் சென்றது. இது சுருக்கமாக ‘சிம்ஹம் மேஷம்’ கதை.

சுவாமி விவேகானந்தர், இந்தக் கதையைத் தன் சொற்பொழிவுகளில் அடிக்கடி எடுத்துக் காட்டுவார். வெளிநாட்டு மதமான கிறித்தவம் சர்ச்சுகளில் மக்களைப் பார்த்து, “பாவிகளே” என்று அழைப்பது அவருக்கு வருத்தத்தை அளித்தது. பல சந்தர்பங்களில் அவர் உரையாற்றும் போது, “நீங்கள் பாவிகள் அல்ல. அமிர்தத்தின் புதல்வர்கள். நாம் அமிர்தப் புத்திரர்கள்” என்று கர்ஜனை செய்வார்.

“சிங்கங்களே, விழித்தெழுங்கள் நீங்கள் ஆடுகள் என்ற பிரமையிலிருந்து வெளியே வாருங்கள். அமிர்தப் புதல்வர்கள் நீங்கள். எத்தனை இனிமையான உற்சாகமூட்டும் பெயர்

அமிர்தம்” என்று கூறும் சுவாமிஜி, “நீ என்னவாக வேண்டும் என்று விரும்புகிறாயோ அதுவாகவே ஆவாய். நீ உன்னை பலவீனனாக நினைத்தால் பலவீனமாக ஆவாய். வலிமையுள்ளவனாக நினைத்தால் வலிமையுள்ளவனாக ஆவாய். இந்த சிம்ஹ மேஷ நியாயத்தின் அர்த்தங்களில் இதுவும் ஒன்று. கள்ளமற்ற மனிதர்களைப் பாவிகள் என்று அழைப்பது எத்தகைய பாவம்?” என்று கூறுவர் சுவாமிஜி, மேற்சொன்ன கதையிலுள்ள பெரிய சிங்கத்தைப் போல, இந்த இளைய சுவாமிஜி உண்மையைத் தெளிவுபடுத்தி குருவாக ஆனார்.

வெளிநாட்டு யாத்திரைக்குப் பின்னர் அவர் பாரத மண்ணில் பாதம் பதித்தபோது ஏற்பாடு செய்த வரவேற்புக் கூட்டத்தில் உரையாற்றிய ஸ்வாமிஜி, சிங்கத்தைப் போல் கர்ஜித்தார். “எழுமின், விழிமின், மனிதர்களாகுங்கள். நாம் அடிமைகள் என்றும் எதற்கும் பயன் படமாட்டோம் என்றும் நம் மூதாதையரான ரிஷிகள் சொல்லியதெல்லாம் நகைப்புக்குரியன என்றும் எவனோ வெளியாள் கூறியவுடன் அதுவே உண்மையென்று நம்பி அவனுடைய பூட்சைத் துடைப்பது எத்தகைய கீழ்மை வாய்ந்தது? எத்தனை பரிதாபம்” என்று கூறி இந்த ‘சிம்ஹ மேஷ’ நியாயத்தை எடுத்துக் காட்டினார். “நீங்கள் என் பாரத தேசச் சிங்கங்கள்” என்றார் சுவாமி விவேகானந்தர்.

இந்த நியாயத்திற்கான வேதாந்தப் பொருள் என்னவென்றால், “தத்வமசி, அஹம் பிரஹ்மாஸ்மி, நான் உடல் என்ற ‘தேக பிராந்தி’ இருக்கக் கூடாது” என்று கூறுவது. “ஸ்வ – ஸ்வரூபத்தைத் தெரிந்து கொள்” என்று கூறுவதே இதன் சாராம்சம். வேதாந்த சாத்திரத்தில் இந்தக் கதையை மற்றொரு விதமாக விளக்குவார்கள்.

ஒரு ஊரில் ஒரு அரசன் இருந்தான். எதிரிகளின் தாக்குதலில் நாட்டை இழந்தான். அந்த அரசனின் ராணி கருவுற்றிருந்தாள். மந்திரிகள் சாமர்த்தியமாக அவளை எதிர்களிடமிருந்து பாதுகாத்து காட்டில் மறைத்து வைத்தனர். சில நாட்களில் அவள் ஒரு ஆண் சிசுவுவைப் பெற்றெடுத்தாள். காட்டில் வேடுவர்களிடையே வளர்ந்த அந்த சிறுவன் தான் அரசகுமாரன் என்ற உண்மையை மறந்தான்.

சில காலம் கழிந்தது. இளைஞனான அரச குமாரனுக்கு மந்திரி உண்மையை எடுத்துரைத்தான். “நீ வனவாசி இல்லை. நீ ஒரு அரச குமாரன்” என்றான். ரோஷம் மிகுந்த அரசிளங்குமரன் படைக்கலை பயின்று படைதிரட்டிச் சென்று பகையரசன் மீது முற்றுகையிட்டு வெற்றி பெறும்படி உற்சாகம் பெற்றான். “உன் சக்தியை நீ அறிந்து கொள்” என்ற உலகியல் அர்த்தத்தோடு கூட நம் உண்மை சொரூபம் என்ன என்பதை உணரவேண்டுமென்பது வேதாந்தம் காட்டும் பொருள்.

“நீ யார்?” என்ற கேள்விக்கு எட்டு வயது ஆதிசங்கரர் மனித இனத்திற்கு எடுத்துரைத்த உண்மையே ‘நிர்வாண ஷட்கம்’ என்ற சுலோகமாகப் புகழ்பெற்று விளங்குகிறது.

மனோ புத்யஹங்கார சித்தானி நாஹம்
ந கர்ணம் ந ஜிஹ்வா ந ச க்ராண நேத்ரே |
ந ச வ்யோம பூமிர்ண தேஜோ ந வாயு:
சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம் ||

பொருள் – மனம், புத்தி, அஹங்காரம், சித்தம் எதுவும் நானல்ல. காது, நாக்கு, மூக்கு, கண் எதுவும் நானல்ல. பஞ்ச பூதங்களும் நானல்ல. நான் சிதானந்த ரூபமான சிவம். நான் சிவம்.

குருமார்கள் ஒரே கருத்தையே கூறுகிறார்கள். “நாம் வெறும் ஐந்து கோசங்கள், ஏழு தாதுக்கள் கொண்ட உடம்பு அல்ல” என்று போதிக்கிறார்கள். “ஆடு அல்ல. சிங்கம்” என்று எடுத்துரைக்கிறார்கள்.

ஆதி சங்கரரின் நிர்வாணஷட்கம் கூறும் கருத்தை அனுசரித்து, ‘ஆச்சார்ய புல்லெல ஸ்ரீராமச்சந்த்ருடு’, நாம் பாரதியர்கள் என்று நினைவுபடுத்தும் ‘மஹான் பாரதோஹம்’ என்ற பத்து சுலோகங்கள் கொண்ட ஸ்தோத்திர மாலையைப் படைத்துள்ளார்.

“நாம் எதோ ஒரு இடத்தையோ மதத்தையோ சேர்ந்தவர்கள் அல்ல. நாம் பாரதியர்கள்” என்ற உண்மையை வெளியிடும் இந்த தசகத்தில் எல்லா சுலோகங்களும் இந்த நியாயத்திற்குப் பொருளாக உளளன. அவற்றுள் ஒன்றை இங்கு பார்ப்போம்.

ந வங்கோ நவாங்கோ நவாஹம் கலிங்கோ
ந வா மத்யதேஸ்யோ மமாராஷ்ட்ரகோ வா
ந வா சைந்தவோஹம் ந வா காமரூப:
நிரஸ்த ப்ரபேதோ மஹான் பாரதோஹம் ||

பொருள் – நான் பெங்காலிக்காரனோ, ஒரிஸ்ஸாகாரனோ, மத்தியப்பிரதேஷ்காரனோ அஸ்ஸாம்காரனோ மட்டுமல்ல. நான் பாரதியன். மகிமை பொருந்திய பாரத தேசத்தவன்.

இந்த ‘சிம்ஹ, மேஷ நியாயம்’ அளிக்கும் வேதாந்தச் செய்தியை சங்கரர், கீதாசாரியன் மற்றும் பலர் எடுத்துரைத்துள்ளனர். ஜகத்குரு ஆதிசங்கரரின் சீடரான ஹஸ்தாமலகர் இந்த கருத்தை அளிக்கும் ஸ்தோத்திரங்களை இயற்றியுள்ளார். இவற்றுக்கு சாட்சாத் குருவான ஆதிசங்கரர் பாஷ்யம் எழுதியுள்ளார் என்பது சிறப்பு.

ஹஸ்தாமலகரின் பிறவி விசித்திரமானது. மரணித்த ஒரு குழந்தையின் உடலில் ஒரு மகா ஞானி பிரவேசித்த சம்பவம் அது. நிரந்தரமான பரகாய பிரவேசம். அந்தக் குழந்தைக்கு ஏழு வயது நிரம்பினாலும் பேச்சு வரவில்லை. கவலை கொண்ட பெற்றோர் ஆதி சங்கரரிடம் அழைத்து வந்தார்கள்.

சங்கரர் சிறுவனிடம் பேச்சுக் கொடுத்தார். “ஓ சிசுவே, நீ யார்? யாரைச் சேர்ந்தவன்? எங்கிருந்து வந்தாய்? உன் பெயர் என்ன? எங்கு செல்கிறாய்?” என்று கேட்டார்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக, அது வரை பேசாத சிறுவன், வசந்த காலம் வந்தவுடன் குயில் கூவத் தொடங்குவது போல, சங்கரரின் எதிரில் பேசத் தொடங்கினான். அதுவே

ஹஸ்தாமலக ஸ்தோத்ரம்’. பதினான்கு சுலோகங்கள் கொண்ட வேதாந்த நூல். சங்கரரின் கேள்விகளுக்கு ஹஸ்தாமலகரின் பதில்கள் நமக்காக.

நா ஹம் மனுஷ்யோ, ந ச தேவ யக்ஷௌ
ந ப்ராஹ்மண, க்ஷத்ரிய வைஸ்ய சூத்ரோ
ந ப்ரஹ்மசாரி ந க்ருஹீ வனஸ்தோ
பிக்ஷுர்ண சாஹம் நிஜபோதரூப”

பொருள் – நான் மனிதன் அல்ல. தேவனோ யக்ஷனோ அல்ல. நான் நான்கு வர்ணங்களைச் சேர்ந்தவனும் அல்ல. நான்கு வர்ணாசிரமங்களைச் சேர்ந்தவனும் அல்ல. நான் பிக்ஷுவுமல்ல. நான் சுத்தமான ஞான சொரூபன்.

உன் உண்மை சொரூபத்தை நீ அறிந்து கொள் என்று கூறும் ஸ்தோத்திரம் இது. ‘ஸ்வ ஸ்வரூப’ ஞானமே முக்கியமானது. நான் உடலே என்ற உணர்வு சரியல்ல.

அப்படிப்பட்ட ஞானத்தை அறிவது அவசியம் என்பதை ஒருகதை வடிவில் கூறும் நியாயமே இந்த ‘சிம்ஹ மேஷ நியாயம்’.

தத்வமஸி, அஹம் ப்ரஹ்மாஸ்மி, ப்ரஞ்ஞானம் ப்ரஹ்ம, அயமாத்மா ப்ரஹ்ம என்ற வேத வாக்கியங்களின் சாரத்தைக் கூறும் நான்கு மஹா வாக்கியங்களின் சாரம் இந்த நியாயத்தில் உள்ளது.

ஆத்மவிஸ்ம்ருதி – நம் சுய ஸ்வரூபமான ஆத்மாவை மறப்பது :-

*தன்னம்பிக்கையிழந்த மனிதனுக்கு ஆத்ம ஞானத்தை அளிக்கிறது இந்த நியாயம். இதற்கு உதாரணமாக, ஆர்.எஸ்.எஸ். நிறுவனரான ‘கேசவராவ் பலிராம் ஹெட்கேவர்’ ஹிந்து சமூகத்தைத் தட்டி எழுப்பிய சம்பவத்தைக் கூறலாம்.

ஹிந்துர்விசால குண சிந்து ரபீஹலோகே
பிந்தூயதே விகடிதோ ந கரோதி கிஞ்சித் |
தத்ஸம்ஹிதம் கடியதும் ஜனனம் யதீயம்
தம் கேசவம் முஹுரஹம் மனஸா ஸ்மராமி ||

பொருள் – இந்த உலகில் ஹிந்து என்பவன் நற்குணங்கள் நிரம்பியவன். ஆனால் ஹிந்துக்களிடம் ஒற்றுமை இல்லை. அதன் காரணமாக ‘சிந்து’ போன்ற ஹிந்து நீர்த்துளி போல் வாழ்கிறான். அதனால் சாமர்த்தியம் அற்றவனாகிறான். இந்த நிலையில் இருக்கும் ஹிந்துக்களை ஒன்றிணைத்து, அவர்களிடம் இருக்கும் ‘ஆத்ம மறதி’யை நீக்குவதற்காகப் பிறந்தவர் ஸ்ரீ கேசவ் டாக்டர்ஜி. நான் என் மனதில் ஒவ்வொரு கணமும் அவரை சிந்தனை செய்கிறேன்.

ஆத்மாவை மறப்பது என்ற நிலையில் இருந்த ஹனுமனுக்கு ஜாம்பவான் நிஜ சொரூபத்தை எடுத்துரைத்தது போல, நம் தேசத்தை ‘விஸ்வகுரு’ என்ற ஸ்தானத்தில் மீண்டும் நிலைநிறுத்துவதற்குத் தேவையானது ஆத்மஞானம்.

*சீதையைக் கண்டுபிடிப்பதற்காக சமுத்திரத்தைத் தாண்டும் செயலைச் செய்யக் கூடிய சாமர்த்தியம் கொண்டவன் ஹனுமனே என்றுணர்ந்தான் ஜாம்பவான். வாயுபுத்திரனை உற்சாகப்படுத்தித் தூண்டினான். “ஓ வானரங்களில் சிறந்தவனே, பலம் புத்தி, தேஜஸ், தைரியம் என்ற குணங்கள் உன்னிடம் இருப்பது போல வேறு யாரிடமும் இல்லை” என்று அவனுடைய பிறப்பின் ரகசியத்தை விவரித்து, “செயல்படு” என்று ஊக்கமூட்டியவுடன் ஹனுமனிடமிருந்த ‘ஆத்ம மறதி’ விலகியது. “சகார ரூபம் மஹதாத்மனஸ்ததா’ – என்று தன் உடலைப் பெரிதாக்கி, நூறு யோசனை தொலைவுள்ள சமுத்திரத்தைத் தாண்டுவதற்குத் தாயரானான் என்கிறது வால்மீகி ராமாயணம்.

“மாருதஸௌர்யஸ: புத்ர: ப்லவனேனாஸ்மி தத்ஸம:” – வாயுதேவனின் புத்திரனனான நான் பறப்பதில் அவனுக்குச் சமமானவன் என்ற ஆத்ம ஞானத்தை ஹனுமன் பெற்றான்.

“ஆத்மாவை மறப்பது என்ற நோய்க்கு ஆத்மஞானம் என்பதே மருந்து. ஒரு அறிஞர் வம்சத்தில் பிறந்த படித்தவன் தீய சகவாசத்தால் போதை மருத்துக்கு அடிமையாகி ஒரு சாக்கடையின் அருகில் விழுந்து கிடந்தான். அவனுடைய நன்பவன் அவனைப் பார்த்து, “இது உனக்குத் தகாது. எப்படிப்பட்ட உயர்ந்த வம்சத்தில் பிறந்தாய்? அவருக்கு வாரிசான நீ இந்த நிலையில் இருப்பது தவறு” என்று எடுத்துரைத்து புத்தி கூறுவதும் இந்த நியாத்தை நினைவுபடுத்துகிறது.

ஒரு மனிதன், ஒரு குடும்பம், ஒரு சமுதாயம், ஒரு தேசம் தம் வாரிசத்துவ உயர்வை அடையாளம் கண்டு நடந்து கொள்ளுங்கள் என்ற அழைப்பு இந்த நியாயத்தில் உட்பொருளாக உள்ளது.

POK ஆக்கிரமிப்பு வெளிநாட்டுப் பகுதி; நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்ட பாகிஸ்தான் அரசு!

islamabad high court - 2026
#image_title

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (பிஓகே) ஒரு வெளிநாட்டுப் பகுதி என்றும், அதன் மீது பாகிஸ்தானுக்கு அதிகாரம் இல்லை என்றும் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் பாகிஸ்தான் அரசு ஒப்புக்கொண்டுள்ளது. காஷ்மீர் கவிஞரும் பத்திரிகையாளருமான அகமது பர்ஹாத் ஷா கடத்தப்பட்ட வழக்கில் பாகிஸ்தானின் கூடுதல் அட்டர்னி ஜெனரலிடமிருந்து வெள்ளிக்கிழமை (மே 31) நேற்று இந்த அரிய ஒப்புதல் கிடைத்தது.

பாகிஸ்தானின் உளவுத்துறை அமைப்புகளால் ராவல்பிண்டியில் உள்ள அவரது வீட்டில் இருந்து கடத்தப்பட்ட அகமது பர்ஹாத் ஷா மீதான வழக்கை இஸ்லாமாபாத் நீதிமன்றம் விசாரித்து வந்தது. கவிஞரின் மனைவி அளித்த ஆட்கொணர்வு  மனுவைத் தொடர்ந்து, இஸ்லாமாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி மொஹ்சின் அக்தர் கயானி, ஃபர்ஹாத் ஷாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று கோரினார்.

வெள்ளிக்கிழமை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (பிஓகே) ஃபர்ஹாத் ஷா போலீஸ் காவலில் இருப்பதாகவும், அவரை இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியாது என்றும் நீதிபதி கயானி முன் பாகிஸ்தானின் கூடுதல் அட்டர்னி ஜெனரல் வாதிட்டார் என்று உள்ளூர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. 

அந்த செய்தி அறிக்கையின்படி, காஷ்மீர் அதன் சொந்த அரசியலமைப்பு மற்றும் அதன் சொந்த நீதிமன்றங்களைக் கொண்ட ஒரு வெளிநாட்டுப் பகுதி என்றும், POK இல் உள்ள பாகிஸ்தான் நீதிமன்றங்களின் தீர்ப்புகள் வெளிநாட்டு நீதிமன்றங்களின் தீர்ப்புகளாகத் தோன்றுவதாகவும் கூடுதல் அட்டர்னி ஜெனரல் கூறினார்.

பிஓகே ஒரு வெளிநாட்டுப் பகுதி என்றால், பாகிஸ்தான் ராணுவமும் பாகிஸ்தான் ரேஞ்சர்களும் எப்படி நிலத்திற்குள் நுழைந்தார்கள் என்று நீதிபதி கயானி எதிர்த்தார். 

விசாரணையின் போது, ​​மக்களை வலுக்கட்டாயமாக கடத்தும் நடைமுறையை பாகிஸ்தானின் புலனாய்வு அமைப்புகள் தொடர்வதாக கயானி விமர்சித்தார்.

காஷ்மீரி கவிஞர் அகமது ஃபர்ஹாத் ஷா

நீதிமன்ற விவாதத்தின் போது அகமது பர்ஹாத் ஷாவை திர்கோட் போலீசார் தடுத்து வைத்துள்ளனர் என்பது தெரிய வந்தது. இவர் மீது பிஓகேயில் இரண்டு வழக்குகள் உள்ளன. பாகிஸ்தான் உளவுத்துறையால் ஃபர்ஹாத் ஷாவின் வீட்டில் இருந்து கடத்தப்பட்டது தொடர்பாக அவரது மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை உயர் நீதிமன்றம் விசாரித்தது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், 1947 முதல் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் உள்ளது, இது இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் சமீபத்தில் மீண்டும் வலியுறுத்தினார். “இது (POK) எப்போதும் இந்தியாவுடன் உள்ளது, அது எப்போதும் இந்தியாவாகவே இருக்கும்” என்று ஜெய்சங்கர் கூறினார்.

கவிஞரும் பத்திரிக்கையாளருமான அகமது பர்ஹாத் ஷா பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் அதன் மக்களின் உரிமைகளுக்காக ஆர்வலர். அவர் இராணுவத்தை கடுமையாக விமர்சிப்பதற்காக அறியப்படுகிறார். அவர் கடந்த காலங்களில் POK இல் பல அரசுக்கு எதிரான போராட்டங்களுக்கு தலைமை தாங்கினார், அவற்றில் பங்கேற்றார்.

தேஜகூ., 370 இடங்கள் கருத்துக் கணிப்புகள் எல்லாம் பாஜக.,வுக்கு சாதகமாக!

election voting - 2026

மக்களவைத் தேர்தலுக்கான ஏழு கட்ட வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள் ஊடகங்களில் வெளியாகின.  இதில் பாஜக கூட்டணி 350 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என அனைத்து கருத்துக் கணிப்புகளும் தெரிவிக்கின்றன.

பாஜக 400 இடங்கள் என்பதை இலக்காகக் கொண்டு தேர்தல் பிரசாரம் மேற்கொண்டது. கடந்த முறை 333 இடங்களை கூட்டணியாகப் பிடித்தது. தற்போது 20 இடங்கள் கூடுதலாகப் பிடிக்கும் என கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை பாஜக.,வுக்கு தென்மாநிலங்களும் கைகொடுக்கும் என கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆந்திரா: ஆந்திரப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 25 தொகுதிகளில், கடந்த முறை ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய் எஸ் ஆர் காங். கட்சி 22 இடங்களில் வெற்றி பெற்றது. தெலுங்கு தேசம் 3 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக-வுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. தற்போதைய கருத்துக் கணிப்பில் 19 முதல் 22 இடங்கள் பாஜக கூட்டணிக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேற்கு வங்காளம்: மேற்கு வங்காளத்தில் பாஜக., கடந்த முறை 18 இடங்களில் வெற்றி பெற்றது. தற்போது 4 இடங்கள் அதிகமாகப் பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசம்: உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாஜக கூட்டணி 64 இடங்களைப் பிடித்திருந்தது. தற்போது 70 இடங்கள் வரை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா: 17 தொகுதிகளைக் கொண்ட இந்த மாநிலத்தில் பாஜக., கடந்த முறை 4 தொகுதிகளில் வென்றது. இந்த முறை 10 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகம்: தமிழகத்தில் இந்த முறை 5 தொகுதிகள் வரை பாஜக., கூட்டணிக்குக் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகளின்படி, பெரும்பாலான ஊடகங்கள்,  பாஜக., கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என தெரிவிக்கின்றன.

அதன் விவரம்:

மொத்த இடங்கள்: 543 இடங்கள் 
பெரும்பான்மை: 272 இடங்கள்

ரிபப்ளிக் டிவி:

பாஜக.,, கூட்டணி: 371 இடங்கள்
இண்டி கூட்டணி: 127

இந்தியா டிவி;
பாஜக.,, கூட்டணி: 371
இண்டி கூட்டணி 125

என்.டி.வி. (ரிப்பளிக் பாரத் பி-மார்க்)
பாஜக.,, கூட்டணி : 359
இண்டி கூட்டணி: 154

ரிபப்ளிக் பாரத் மேட்ரிக்ஸ்
பாஜக.,, கூட்டணி: 353 முதல் 368
இண்டி கூட்டணி: 118 முதல் 133 இடங்கள்
பிற கட்சிகள் : 43-48 இடங்கள்

டி.வி.5 தெலுங்கு
பாஜக.,, கூட்டணி: 359
இண்டி கூட்டணி 154
பிற: 31

இந்தியா நியூஸ் டி. டைனமிக்ஸ்
பாஜக.,, கூட்டணி: 371
இண்டி கூட்டணி 125
பிற: 47

ஜன் கி பாத்
பாஜக.,, கூட்டணி: 362 முதல் 392 இடங்கள்
இண்டி கூட்டணி: 141 முதல் 161 இடங்கள்

நியூஸ் எக்ஸ்
பாஜக.,, கூட்டணி: 371
இண்டி கூட்டணி: 125
பிற: 45

நியூஸ் நேசன்
பாஜக.,, கூட்டணி: 342 முதல் 378 இடங்கள்
இண்டி கூட்டணி: 153 முதல் 179 இடங்கள்

தமிழகத்தில்…: 

தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி 33 முதல் 37 இடங்களில் வெற்றி பெறும் என ஊடகங்கள் கணித்துள்ளன.  

நியூஸ் 18
தமிழகத்தில் திமுக 20 முதல் 22 இடங்கள்
காங்கிரஸ் 6-8 இடம்
பாஜக 1-3
அதிமுக 0-2

இந்தியா டுடே
திமுக 20-22
காங்கிரஸ் 6-8
அ.தி.மு.க. 2
இண்டி கூட்டணி 33-37

ஏபிபி- சி வோட்டர் (ABP – C Voter)
தி.மு.க. கூட்டணி 37-39
அ.தி.மு.க. 1
பாஜக., 1

பொது, சரக்குக் கப்பல் மீதான மால்வேர் தாக்குதல், உளவிலும் சீனாவின் கரங்கள்!

china websites - 2026

முஸ்டாங் பாண்டா என அழைக்கப்படும் இணைய உளவுக் குழு கடந்த ஐந்து மாதங்களாக மால்வேர் ஒன்றை உலவ விட்டு, “நார்வே, கிரீஸ் மற்றும் நெதர்லாந்தைச் சேர்ந்த சரக்குக் கப்பல் நிறுவனங்களுக்குச் சொந்தமான கணினி அமைப்புகளுக்கு ரிமோட் ஆக்சஸைப் பெறுகிறது. ஸ்லோவாக்கியாவை தளமாகக் கொண்ட இணைய பாதுகாப்பு நிறுவனமான ESET கருத்துப் படி, சரக்குக் கப்பல்கள் தாங்களாகவே  அதை வழியாக எடுத்துக் கொள்கின்றனவாம்! 

கடந்த மாதம், இங்கிலாந்து (U.K) மற்றும் அமெரிக்க (U.S.) உயர் அதிகாரிகள் சீனாவில் இருந்து வளர்ந்து வரும் இணைய பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து எச்சரித்ததால், குறிப்பாக முக்கியமான உள்கட்டமைப்புக்கு அச்சுறுத்தல் தரும் விதத்தில் இருந்ததால், இந்த செய்தி வெளிவந்தது.

அந்த செய்தி அறிக்கையின்படி, ஆசியா முழுவதும் உள்ள அரசுகள் மற்றும் பிற அமைப்புகளுக்கு எதிராக உளவு பார்த்ததாக முஸ்டாங் பாண்டா மீது குற்றம் சாட்டப்பட்டது. மேலும், அண்மையில் ஐரோப்பாவிலும், முந்தைய உளவு குறித்த தகவல்களிலும் இதே போன்ற மால்வேர் கருவிகளைப் பயன்படுத்தியுள்ளனர். “ரிமோட் அக்சஸ் ட்ரோஜன்” வகை மால்வேர், மின்னஞ்சல், தீங்கிழைக்கும் இணையதளம், பாதிக்கப்படக்கூடிய மென்பொருள் அல்லது பாதுகாப்பற்ற இயந்திரம் மூலம் ஊடுருவிய பிறகு, ஒரு சாதனத்திற்கான முழு அணுகலையும் அது பெறவும், கட்டளைகளை வழங்கவும் அனுமதிக்கிறது. இதன் மூலம், மிகவும் சென்சிடிவான உளவுத் தகவல்கள் தாக்குதலைத் தொடுக்க முஸ்டாங் பாண்டா நிறுவனம் போன்றவை முழுவீச்சில் இறங்கியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சீனாவுடன் இணைக்கப்பட்ட இணைய உளவுக் குழு, வணிகக் கப்பல் போக்குவரத்தில் கவனம் செலுத்துகிறது என்பதற்கான முதல் ஆதாரம் இதுவாகும் என்று, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ESET இன் முதன்மை அச்சுறுத்தல் நுண்ணறிவு ஆராய்ச்சியாளர் ராபர்ட் லிபோவ்ஸ்கி கூறுகையில், “நாங்கள் கடந்த காலத்தில் இவ்வாறு பார்த்ததில்லை. இது இந்தத் துறையில் தெளிவான அவர்களின் ஆர்வத்தைக் காட்டுகிறது. இது ஏதோ வெறும் ஒரு நிகழ்வு அல்ல. இவை வெவ்வேறு, தொடர்பில்லாத அமைப்புகளின் மீது நடத்தப்பட்ட பல்வேறு தாக்குதல்கள்” என்று அவர் கூறினார்.

“இணைய உளவு முயற்சியில், இத்தகைய நிறுவனங்கள் அல்லது கப்பல்களில், பிஸிகலாகப் பொருத்தப்பட்ட USB சாதனங்களின் பயன்பாடு உள்ளதா என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை” என்றார் அவர்.

வாஷிங்டனில் உள்ள சீன தூதரகத்தின் செய்தி தொடர்பாளர் இந்தக் குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுத்துள்ளார். “சீனாவுக்கு எதிரான எந்த ஆதாரமற்ற அவதூறுகளையும் குற்றச்சாட்டுகளையும் நாங்கள் எதிர்க்கிறோம். உண்மையில், சைபர் தாக்குதல்களில் சீனா பெரியளவில் பலியாகி உள்ளது,” என்று செய்தித் தொடர்பாளர் லியு பெங்யு கூறினார்.

“அனைத்து வகையான சைபர் தாக்குதல்களுக்கும் எதிராக நாங்கள் உறுதியான நிலைப்பாட்டை வைத்திருக்கிறோம்; அவற்றைச் சமாளிப்பதற்கு சட்டப்பூர்வமான வழிமுறைகளை நாடுகிறோம். ஹேக்கர்களால் தொடங்கப்படும் தாக்குதல்களை சீனா ஊக்குவிக்கவோ, ஆதரிக்கவோ அல்லது மன்னிக்கவோ இல்லை.” என்று அவர் உறுதிபடத் தெரிவித்தார். 

எனினும், ஐக்கிய ராஜ்ஜியத்தில் (யுகே) அண்மையில் நடைபெற்ற  சைபர் செக்யூரிட்டி மாநாட்டில், பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் சீன இணைய உளவு மற்றும் சீன ஹேக்கிங்கில் இருந்து உலகத்துக்குப் பெருகிவரும் ஆபத்தை விவரித்தனர். பர்மிங்காமில் இங்கிலாந்து அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டின்போது, ஒரு பிரிட்டிஷ் சைபர் செக்யூரிட்டி அதிகாரி செய்தியாளர்களிடம் இது பற்றிக் குறிப்பிட்ட போது, “இப்போது நாங்கள் சைபர் செக்யூரிடி துறையில் கவனம் செலுத்தும் மிகப்பெரிய பகுதி சீனாவாகும்” என்பதை அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டார்..

அந்த மாநாட்டில் ஓர் உரையில், U.K. இன் சைபர் உளவுத்துறை நிறுவனமான GCHQ இன் தலைவர், “ரஷ்யா, ஈரான் ஆகியவை இப்போது உடனடி அச்சுறுத்தல்களை வெளிப்படுத்தினாலும், இணையம் மற்றும் சர்வதேச ஒழுங்கு தொடர்பில், சீனா “ஒரு சகாப்தத்தை வரையறுக்கும் சவாலாகவே உள்ளது. அது, பாதுகாப்பிற்கு மிகப் பெரும் அச்சுறுத்தலையும் ஆபத்தையும் முன்வைக்கிறது” என்று கூறினார். 

“சீனா, மேம்பட்ட இணையத் திறன்களை உருவாக்கியுள்ளது. அதன் வசம் உள்ள ஹேக்கிங் தரவுகள், தரகர்களின் வளர்ந்து வரும் வணிகச்சூழல் அமைப்பைப் பயன்படுத்திக் கொள்கிறது” என்று அன்னே கீஸ்ட்-பட்லர் கூறினார். “முக்கியமாக, சீனா ஐக்கிய ராஜ்ஜியத்துக்கு (U.K) உண்மையான மற்றும் அதிகரித்துவரும் இணைய அபாயத்தை முன்வைக்கிறது.” என்றார் அவர்.

அதே மாநாட்டில் இன்னோர் உரையில், வெள்ளை மாளிகையின் தேசிய இணைய இயக்குனர் ஹாரி கோக்கர், “சீனாவின் இணைய உளவு பார்க்கும் தன்மை, அமெரிக்காவின் குடிமக்கள் உள்கட்டமைப்பை சீர்குலைக்கிறது. மேலும், குடிமக்களுக்கான உள்கட்டமைப்பை சேதப்படுத்தும் திறனை பெய்ஜிங் கொண்டுள்ளதையே அது வெளிப்படுத்துகிறது” என்று கூறினார்.

“ஒரு நெருக்கடி அல்லது மோதல் சூழ்நிலை ஏற்படும்போது, குடிமக்கள் உள்கட்டமைப்பில் அழிவை ஏற்படுத்தவும், அமெரிக்க இராணுவ நடவடிக்கையைத் தடுக்கவும் சீனா அவர்களின் முன், நிலைப்படுத்தப்பட்ட சைபர் திறன்களைப் பயன்படுத்தக் கூடும்” என்று கோக்கர் கூறினார்.

“வோல்ட் டைபூன்” எனப்படும் ஒரு பெரிய உளவு முயற்சியை சீனா மேற்கொண்டு வருவதாக அமெரிக்காவின் பிடன் நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது. 

சைபர் உளவுகள், சைபர் தாக்குதல்கள் அல்லது அறிவுசார் சொத்து திருட்டு என, சீனா மீது அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிற அரசுகள் முன் வைக்கும் குற்றச்சாட்டுகளை சீனா நிராகரித்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின், “சீன இணைய நடவடிக்கைகள் குறித்த குற்றச்சாட்டுகளை U.K மீண்டும் மீண்டும் பரப்பி வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார். 

மேலும், “அந்த மாநாட்டில் பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க அதிகாரிகள், சீனாவின் சைபர் தந்திரோபாயங்கள், அறிவுசார் சொத்து அல்லது வெளிநாட்டு உளவுத்துறையை அப்படியே திருடிச் செல்ல முயற்சிப்பதில் இருந்து, முக்கியமான பயன்பாடுகள் அல்லது பிற உள்கட்டமைப்பு அமைப்புகளுக்கான ஆக்சஸஸை திருட்டுத்தனமாகப் பெற (அணுகலைப் பெறுவதற்கு) மாறிவிட்டதாக”க் கூறினார்.

அறிவுசார் சொத்து திருட்டில் இருந்து சீனா “முன்னேறிவிட்டது” என்று தேசிய பாதுகாப்பு ஏஜென்சியின் நடாலி பித்தோர் ஒரு மாநாட்டு குழு விவாதத்தில் கூறினார்.

மேலும், “வெளிநாட்டு உளவுத்துறை அணுகல், அல்லது ஐபி திருட்டு போன்ற தகவல்களை, அவர்கள் தீவிரமாக முயற்சி செய்யவில்லை,” என்றார் அவர். “மாறாக, இந்த சீன APTகளில் இருந்து (மேம்பட்ட பரவலான அச்சுறுத்தல்கள்) நாங்கள் கவனித்தது என்னவென்றால், அவை உள்ளே நுழையும், பின் கட்டுப்பாட்டின் அளவைப் பெறுகின்றன, நெட்வொர்க்கைக் கட்டுப்படுத்தும் திறன் அளவைப் பெறும்,  பின்னர்  அவை மிகவும் அமைதியாகச் செல்லும்.” என்று அதன் மால்வேர்களின் தன்மையை எடுத்துக் கூறினார். 

கணிப்பையும் மீறி… வளர்ச்சி 8.2 சதவீதம் நோக்கி!

mumbai stock exchange
#image_title

ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டின் இந்திய பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதம் என தேசிய புள்ளியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதனால் இந்தியாவின் ஆண்டு பொருளாதார வரள்ச்சி 8.2 சதவீதமாக உள்ளது.

அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான 3-வது காலாண்டின் பொருளாதார வளர்ச்சி 8.6 ஆக இருந்த நிலையில் கடைசி காலாண்டின் வளர்ச்சி .4 சதவீதம் குறைந்துள்ளது.

2022-23 நிதியாண்டில் இதே காலக்கட்டத்தில் 6.2 சதவீதம் உள்நாட்டு மொத்த உற்பத்தி இருந்தது. தற்போது 7.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2022-23 நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதம் இருந்த நிலையில், தற்போது 2023-24 நிதியாண்டில் 8.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.

2023-24 நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 7.7 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டிருந்தது.

சீனாவின் பொருளாதார வளர்ச்சி ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலாண்டில் 5.3 சதவீதம என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து தனது எக்ஸ் தள பதிவில் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளதாவது….

“2023-24 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ஜி.டி.பி. வளர்ச்சி நமது பொருளாதாரத்தை பெருமளவு வளர்ச்சியடைய செய்யும் என்பதை காட்டுகிறது. நம் நாட்டின் கடின உழைப்பாளிகளுக்கு நன்றி, 2023-24 காலக்கட்டத்தில் நாட்டின் 8.2 சதவீத வளர்ச்சி உலகளவில் இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இருப்பதை வெளிப்படுத்துகிறது. நான் ஏற்கனவே கூறியதை போன்றே இவை அனைத்தும், எதிர்காலத்தில் நடக்கப் போகும் சம்பவங்களுக்கான முன்னோட்டம் தான்!

கால்நடை மருத்துவ இளநிலைப் படிப்புகள்: ஜூன் 3 முதல் விண்ணப்பம்!

Dhinasari Home page

தமிழ்நாடு கால்நடை மருத்துவ இளநிலைப் படிப்புகளுக்கு ஜூன் 3 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புகள் (பி.வி.எஸ்சி. – ஏ.ஹெச்.) உள்ளன.

இதைத் தவிர, திருவள்ளூா் மாவட்டம் கோடுவெளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு (பி.டெக்), பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு (பி.டெக்), ஒசூா் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்பு (பி.டெக்) உள்பட 3 பட்டப்படிப்புகள் உள்ளன.

இந்த 3 பட்டப் படிப்புகளும் 4 ஆண்டுகள் கொண்டவை.

இந்த நிலையில், பி.வி.எஸ்சி. – ஏ.ஹெச். மற்றும் பி.டெக் படிப்புகளுக்கான நிகழாண்டு மாணவர் சேர்க்கைக்கு https://adm.tanuvas.ac.in என்ற இணையம் மூலம் ஜூன் 3 ஆம் முதல் ஜூன் 21 ஆம் தேதி மாலை 5.00 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அயல்நாடு வாழ் இந்தியர், அயல்நாடு வாழ் இந்தியரின் குழந்தைகள், அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோர் மற்றும் அயல்நாட்டினர் ஆகியோர்களுக்கான இட ஒதுக்கீடு, இணையதள விண்ணப்ப வழிமுறைகள் மற்றும் இதர விவரங்களை இணையதளத்தை பார்த்து அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைதள போலி விளம்பரங்கள் குறித்து உஷாராக இருக்க அறிவுரை!

social medias - 2026

சென்னை: சமூக வலைதளங்கள் மற்றும் இணையதள பக்கங்களில் வெளியாகும் போலி விளம்பரங்களை நம்பி, பலர் ஏமாந்து வருகின்றனர்.

பல முன்னணி நிறுவனங்கள், ‘ஆன்லைன்’ வாயிலாக தங்களது நிறுவனங்கள் தொடர்பான விளம்பரங்களை, ‘டிஜிட்டல்’ விளம்பரம் செய்து வருகின்றன.

இது போன்று விளம்பரம் செய்ய, மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் கட்டுப்பாடுகளையும், வழிமுறைகளையும் அறிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக, பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட வலைதளங்கள் மற்றும் இணையதள பக்கங்களில், வேலை, கடன் வசதி, குறைந்த விலையில் வீட்டு உபயோக பொருட்கள் என, பல வகைகளில் மோசடி கும்பல்கள், போலி டிஜிட்டல் பக்கங்களை உருவாக்கி, விளம்பரங்கள் செய்ய துவங்கி விட்டன.

விபரம் தெரியாத மக்களும், அவற்றை உண்மை என நம்பி, போலி விளம்பரங்களின், ‘லிங்க்’ பயன்படுத்தி, பணம் கட்டி ஏமாந்து வருகின்றனர்.

குறிப்பாக, இறக்குமதி செய்யப்பட்ட வாசனை திரவியங்கள், மொபைல் போன் உதிரிபாகங்கள், பிரபல பிராண்ட் காலணிகள் என, பல பொருட்கள் 50 முதல் 90 சதவீதம் வரை எங்களிடம் கிடைக்கும் எனக்கூறி, போலி விளம்பர கும்பல் ஏமாற்றி வருகிறது.

இது குறித்து, பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது:

பிரபல வாட்ச் நிறுவனத்தின் பெயரில் பேஸ்புக்கில் விளம்பரம் வந்தது. அதில், தள்ளுபடி விலை என்று கூறப்பட்டிருந்தது. குறைந்த விலையில் கிடைக்கிறது என நம்பி பணம் செலுத்தினோம். ஐந்து நாட்கள் கழித்து, அதே நிறுவன பக்கத்தில் பார்த்த போது, அது போலி என்று தெரிய வந்தது.

மோசடி கும்பல் பயன்படுத்திய மொபைல் போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது, அவர்கள் அழைப்பை ஏற்கவில்லை.

இனி சமூக வலைதளங்களில் வரும் விளம்பரத்தை நம்பி பொருட்கள் வாங்கும் போது, எச்சரிக்கையுடன் உண்மை தன்மையை பார்த்து வாங்க வேண்டும்.

டிஜிட்டல் விளம்பரங்களுக்கான கட்டுப்பாட்டை தீவிரப்படுத்தி கண்காணித்தால் மட்டுமே, இம்மாதிரியான மோசடியை தடுக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு திரும்ப வந்த 100 டன் தங்கம்!

rbi digital currency - 2026

பிரிட்டனிலிருந்து இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்ட 100 டன் தங்கம்! ரிசர்வ் வங்கி நடவடிக்கை

பிரிட்டனிலிருந்து 1991ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக, 100 டன் தங்கத்தை ரிசர்வ் வங்கி தனது பெட்டகத்துக்கு மாற்றியிருக்கிறது.

ரிசர்வ் வங்கிக்குச் சொந்தமான தங்கத்தில் பாதியளவுக்கு பாதுகாப்புக் காரணங்களுக்காக இங்கிலாந்து வங்கியிலும் சர்வதேச பங்கீடு வங்கியிலும் வைத்திருந்தது.

பாக்கி தங்கத்தை தன் வசம் வைத்திருந்தது. ஆனால், தற்போது ரிசர்வ் வங்கி, 100 டன் தங்கத்தையும் தன் வசம் மாற்றியிருக்கிறது.

இதன் மூலம், தங்கத்தை பாதுகாக்க இங்கிலாந்து வங்கிக்கு ரிசர்வ் வங்கி செலுத்த வேண்டிய பாதுகாப்புக் கட்டணம் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வெளியான ரிசர்வ் வங்கியின் ஆண்டு புள்ளிவிவரப்படி, ரிசர்வ் வங்கி, அந்நியச் செலாவணி கையிருப்பின் ஒரு பகுதியாக 822.10 டன்கள் மதிப்புள்ள தங்கத்தை வைத்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலத்தில் 794.63 டன்களாக இருந்தது.

கடந்த 1991ஆம் ஆண்டு ஜூலை 4 மற்றும் 18ம் தேதிக்கு இடையில், பணப் பரிமாற்றத்தில் ஏற்பட்ட நெருக்கடியின்போது, அதனை சமநிலைப்படுத்த, மத்திய ரிசர்வ் வங்கி 46.91 டன் தங்கத்தை இங்கிலாந்து வங்கியிலும் ஜப்பான் வங்கியிலும் அடகு வைத்து, 400 மில்லியன் டாலர் பணத்தை திரட்டியது. இதற்கிடையே சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு, ரிசர்வ் வங்கி சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 200 டன் தங்கத்தை வாங்கியிருந்தது.

அதுபோல, 2009 ஆம் ஆண்டில், மத்திய அரசு தனது சொத்துக்களை பெருக்கும் நடவடிக்கையாக 6.7 பில்லியன் டாலர் மதிப்புள்ள 200 டன் தங்கத்தை வாங்கியது. மேலும், கடந்த சில ஆண்டுகளாக, ரிசர்வ் வங்கி தனது கொள்முதல் நடவடிக்கை மூலம் தங்கப் பங்குகளில் கவனம் செலுத்தி நிலையான வளர்ச்சியை தொடர்ந்து பராமரித்து வருகிறது.

இந்தியாவின் மொத்த அன்னியச் செலாவணி கையிருப்பில் தங்கத்தின் பங்கு 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 7.75 சதவீதமாக இருந்த நிலையில், 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாத இறுதியில் இது 8.7 சதவீதமாக அதிகரித்தது.

மும்பையின் மின்ட் ரோடு மற்றும் நாக்பூரில் உள்ள ரிசர்வ் வங்கியின் கட்டடங்களில் இந்த கையிருப்பு தங்கம் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

உலக தங்க கவுன்சில் வெளியிட்ட அறிக்கையின்படி, உலக நாடுகளின் மத்திய வங்கிகள், இதுவரை தோண்டியெடுக்கப்பட்ட தங்கத்தில் 17 சதவீதத்தை பெட்டகங்களில் வைத்துள்ளன. அதாவது 2023 ஆம் ஆண்டின் இறுதியில் 36,699 டன்கள் தங்கம் வங்கிகளின் கையிருப்பில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தியானம், தவத்தினூடே… நாட்டின் நிலவரம் குறித்தும் சமூகப் பதிவு!

kumarimunai modi thavam - 2026
#image_title

ஒரு பக்கம் தியானமும் தவமும் மேற்கொண்டாலும் ஒரு பக்கம் நாட்டின் நிகழ்வுகள் குறித்த கவலையை மற்றும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் வழக்கம்போல் தனது சமூக வலைதளப் பதிவில் செய்தியை பகிர வைத்துள்ளார் பிரதமர் மோடி.

பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். நேற்று மாலை கன்னியாகுமரி வந்தடைந்த பிரதமர் மோடி, அங்குள்ள பகவதி அம்மன் கோவிலில் தரிசனம் செய்த பின், விவேகானந்தர் பாறைக்கு சென்று, தியானத்தில் ஈடுபட்டுள்ளார்.

நாளை மாலை வரை விவேகானந்தர் பாறை, மற்றும் திருவள்ளுவர் பாறை பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி இருக்கும் நிலையில், இன்று தனது எக்ஸ் தளத்தில் நாட்டின் நிகழ்வுகள் குறித்த தனது வழக்கமான கவலை மற்றும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் பதிவிட்டுள்ளார்.

அதில், “அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், திரிபுரா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் ரெமல் புயல் காரணமாக கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுவிட்டது. எனது எண்ணமும், பிரார்த்தனையும் அங்கு பாதிக்கப்பட்டோருடனேயே உள்ளது. அங்குள்ள கள சூழல் குறித்து கேட்டறிந்தேன். மத்திய அரசு பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தேவையான உதவிகளை வழங்குவதாக உறுதியளித்ததோடு, அங்குள்ள கள நிலவம் குறித்தும் கேட்டறிந்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அதிகாரிகள் களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றனர்,” என குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு பதிவில், “2023-24 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ஜி.டி.பி. வளர்ச்சி நமது பொருளாதாரத்தை பெருமளவு வளர்ச்சியடைய செய்யும் என்பதை காட்டுகிறது. நம் நாட்டின் கடின உழைப்பாளிகளுக்கு நன்றி, 2023-24 காலக்கட்டத்தில் நாட்டின் 8.2 சதவீத வளர்ச்சி உலகளவில் இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இருப்பதை வெளிப்படுத்துகிறது. நான் ஏற்கனவே கூறியதை போன்றே இவை அனைத்தும், எதிர்காலத்தில் நடக்கப் போகும் சம்பவங்களுக்கான முன்னோட்டம் தான்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

5 ஆண்டுகளில் 5 பிரதம மந்திரிகளாம்… ஹையோ ஹையோ..!

pmmodi speech in meeting - 2026
#image_title

தமிழில் : ராமஸ்வாமி சுதர்ஸன்

சாதாரண மனுஷனுக்குக் கூட தெரியும், ஒரு சிறிய வீட்டைக் கட்டணும்னா கூட, அப்ப மறுபடிமறுபடி மேஸ்திரியை மாத்த மாட்டாங்கய்யா.  

இப்ப இந்த சமாஜ்வாடி காங்கிரஸ்….. இண்டிக் கூட்டணிக்காரங்க,  இவங்க சொல்றாங்க, அஞ்சு ஆண்டுகள்ல அஞ்சு பிரதம மந்திரிகளாம்.  

இப்ப நீங்களே சொல்லுங்கய்யா.   இந்த அஞ்சு ஆண்டுகள்ல அஞ்சு பிரதம மந்திரிகளை, யாராவது வச்சுப்பாங்களா என்ன?   இப்படி மேஸ்திரியவே யாரும் வச்சுக்க மாட்டாங்கன்னா, அப்ப பிரதம மந்திரிய…… சிரிப்பு   என்னத்தைச் சொல்ல.    

ஏன்னா இவங்களுக்கு கூடிக் கூத்தடிக்கணும்.   இப்ப நீங்களே சொல்லுங்க,  தன்னோட நாற்காலியை, காப்பாதிக்கவே பிரதமருக்கு நேரம் சரியா இருக்கையில, அவரு எங்க தேசத்தை வலுவானதா ஆக்க போறாரு?